காம்ப்ரமைஸ்

Sunday, March 14, 2010
"காம்ப்ரமைஸ் செய்து கொள்" என்பதும் "அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்" என்பதுமான வாக்கியங்களை இதுவரை உங்கள் வாழ்வில் இது வரை சந்திக்கவில்லையென்றால் நீங்கள் தான் உலகின் மிகப் பெரும் அதிர்ஷ்டசாலி


நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் காம்ப்ரமைஸ் என்பது அவசியமாகிறது.பல நேரங்களில் இந்த காம்ப்ரமைஸ் என்னும் வாக்கியம்தான் நம்மை வாழ வைக்கிறது என்பதும் உண்மை. ஆனாலும் இந்தக் காம்ப்ரமைஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாழ்வின் மீதான நம்பிக்கையும் ஆர்வமும் நிலைகுலைய ஆரம்பிக்கிறது.சில நேரங்களில் ஒரு சிறு துளை கிடைத்தாலும் ஆத்திரமாய் பீறிட்டுக் கிளாம்பிவிடுகிறது


அதற்கு நிதர்சன உதாரணமாக அண்மையில் ஒரு நிகழ்வைக் கண்டேன்.
என் நெருங்கிய தோழி ஒருத்தி,மிகவும் பயந்த சுபாவமுடையவள்.அதிகம் பேசக் கூடமாட்டாள்.சிறிது காலமாக அவளது குடும்பத்திலும் அலுவலகத்திலும், பலப் பல பிரச்சினைகள் அவளைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது. நாங்களும் பெரிய அட்வைஸ் மன்னிகளாகி, " காம்ப்ரமைஸ்" என்பதையே போதித்துக் கொண்டிருந்தோம்.அவள் மனதிற்குள் கோபக்கங்குகள் கனன்று கொண்டிருந்தது.இந்நிலையில் பஸ்ஸில் நானும் அவளும் பயணிக்கையில், ஒரு நாள் கண்டக்டர் 2 ரூபாய் மீதி தரவேண்டிய நிலையில்,3 ரூபா இருந்தா குடுங்க.5 ரூபா தர்றேன்.இல்லன்னா நாளைக்கு டிக்கெட் வாங்கும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்றார்.( அது தினம் போகும் பஸ்).அவ்ளோதான்.என் தோழிக்கு எப்படி அப்படி ஒரு கோபம் வந்திச்சின்னு தெரியல. கண்டக்டரப் பிடிச்சி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டுட்டா.நிஜமாய் அவள் கோபத்திற்கான காரணம் எனக்கு அப்போ புரியல.
பின்னர் அவளிடம் சமாதனமாய் பேசும்போது அவள் சொன்ன வார்த்தைகள்"எங்க எங்கதான் அட்ஜஸ்ட் பண்றது? யாருமே நமக்காக அட்ஜஸ்ட் பண்றதில்ல. நாமளே அட்ஜஸ்ட் பண்ணி சுயத்தையே இழந்துடுவோல் போல இருக்கு".
அவள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் சத்தியமான உண்மைகளாகவே தோன்றியது எனக்கு. பின் அதைப் பற்றி வேறொரு நிகழ்வில் ஒரு மனோத்தத்துவ நிபுணரிடம் பேசிய போது அவர் சொன்னது " இந்நிலைக்கு முக்கிய காரணம் "நோ" சொல்ல வேண்டிய‌ நேரங்களில் "யெஸ்" சொல்வதும்,"யெஸ்" சொல்ல வேண்டிய‌ நேரங்களில் "நோ" சொல்வதும் மட்டுமே. ஒரு விஷயம் இல்லாமல் வாழ்வது கடினம் என்றோ,அல்லது ஒரு விஷ்யத்துடன் வாழ்வது கடினம் என்றோ நிச்சயமாகத் தோன்றினால் எக்காரணம் கொண்டும் அவ்விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்யாதீர்கள்.அப்படிச் செய்தால் எந்நிலையிலும் மன அமைதி கிட்டாது என்றார்.
நீங்க‌ள் ச‌ரியான‌ விஷ‌ய‌ங்க‌ளில் பிடிவாத‌மாய் இருப்ப‌து த‌வ‌றில்லை.அது தான் உங்க‌ள் சுய‌த்தை த‌க்க‌ வைத்துக் கொள்ள‌ ஒரே வ‌ழி என்ப‌தும் அவ‌ர் த‌ரும் செய்தி.
அவ‌ர் சொல்வ‌து ச‌ரியாக‌வே தோன்றுகிறது.ஆனால் அதை ந‌ம்மைச் சுற்றி இருப்ப‌வ‌ர் யாராவ‌து அதைப் போல் பிடிவாத‌ம் பிடித்தால் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் நாம் இருக்கிறோமா என்ப‌து கேள்விக்குறிதானே?

.

33 comments:

கண்ணகி said...

ஆமாம். இயற்கை.. டாக்டர் சொல்வதுபோல் அட்ஜஸ்ட் செய்து செய்து நமக்கென்று எதுவுமே இல்லாமல் போவுதுபோல் வரும் உணர்வுகள் கொடுமை...அப்போதெல்லாம்தான் இந்த வாழ்க்கை மீதான வெறுப்பு தோன்றுகிறது..அது எதாவது ஒருசமயம் பொங்கி வெடித்துவிடும்...

சுசி said...

//சில நேரங்களில் ஒரு சிறு துளை கிடைத்தாலும் ஆத்திரமாய் பீறிட்டுக் கிளாம்பிவிடுகிறது//

சரியா சொல்லி இருக்கீங்க.

கடைசி கேள்வியும் சரியே.

புலவன் புலிகேசி said...

:))

☀நான் ஆதவன்☀ said...

எதுவுமே அதிகமானா பிரச்சனை தான் போல. சுயம் இழக்காமல் காம்பரைஸ் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். நல்ல பதிவுங்க

பிரேமா மகள் said...

இதுக்கே இப்படின்னா? என்ன சொல்றது இயற்கை.. இன்னும் கல்யாணம்‍‍ங்கிற சொல்லப்படுகிற காம்பிரமைஸ் கொடுமையின் உச்சக்கட்டம்.. அதுக்கெல்லாம் தீர்வே இல்லை..

தாரணி பிரியா said...

மனசுக்குள் இருக்கிற எரிமலையை அப்ப அப்ப வெளியேத்தணும் நான் பெரும்பாலும் என் கோபங்களை வெளிக்காட்டிடுவேன். ஆனா கோபம் தணிஞ்ச பிறகு செஞ்சது தப்போன்னும் தோணும் :)


சுயம் இழக்காமல் காம்ப்ரமைஸ் சாத்தியமா ?

DG said...

superrrr

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க ராஜி. நல்ல இடுகை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆமாங்க சரியா சொன்னீங்க..உங்ககிட்ட படிக்கிர பசங்க எத்தனை தடவ காம்ப்ரமைஸ் ஆயிருப்பாங்க !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்
ராஜி உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்..பார்க்கவும்

ரசிகன்! said...

ஆனாலும் இந்தக் காம்ப்ரமைஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாழ்வின் மீதான நம்பிக்கையும் ஆர்வமும் நிலைகுலைய ஆரம்பிக்கிறது///

idhu mattum marukka mudiyaadha unmaiyaagiradhu...

nalla ezhudhareenga...

நட்புடன் ஜமால் said...

ஆமாம்!

காம்ப்ரமைஸ் அடுத்தவங்களாக செய்து செய்து சுயம் மட்டுமா போகுது ...


நல்ல இடுக்கை ...

சாந்தி மாரியப்பன் said...

அளவுக்கு மிஞ்சினா அமிர்தமே நஞ்சாகும்போது, காம்ப்ரமைஸும் வெறுப்பாகும்தான்.

Vani said...

டாங்க்ஸ் டீச்சர் உங்க பதிவுக்கு

வால்பையன் said...

பிடிவாதம் வேறு, கொள்கையில் உறுதியாய் இருப்பது வேறு!

கொள்கையில் உறுதியாய் இருப்பவரிடம் காம்பமைஸ் செய்து கொள்லலாம், ஏனெனில் அவர் சில விசயங்களில் நம்மிடம் காம்பரமைஸ் ஆவார், ஆனால் பிடிவாதகாரர்கலீடம் காம்பரமைஸ் செய்யகூடாது! அது நீடிக்கக்கூடும்!

வால்பையன் said...

//பிரேமா மகள் said...

இதுக்கே இப்படின்னா? என்ன சொல்றது இயற்கை.. இன்னும் கல்யாணம்‍‍ங்கிற சொல்லப்படுகிற காம்பிரமைஸ் கொடுமையின் உச்சக்கட்டம்.. அதுக்கெல்லாம் தீர்வே இல்லை..//


வருத்தபட வேண்டிய ஆண்களே சும்மா இருக்கோம்! நீங்க ஏன் எங்களூக்காக இவ்வளவு பரிஞ்சி பேசுறிங்க!?

Thenammai Lakshmanan said...

ஆமாம் இயற்கை இந்த மாதிரி நான் முடியாட்டி கூட எஸ் சொல்லி ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கேன் நோ சொல்லக் கத்துக்கணும்

*இயற்கை ராஜி* said...

கண்ணகி said...
ஆமாம். இயற்கை.. டாக்டர் சொல்வதுபோல் அட்ஜஸ்ட் செய்து செய்து நமக்கென்று எதுவுமே இல்லாமல் போவுதுபோல் வரும் உணர்வுகள் கொடுமை...அப்போதெல்லாம்தான் இந்த வாழ்க்கை மீதான வெறுப்பு தோன்றுகிறது..அது எதாவது ஒருசமயம் பொங்கி வெடித்துவிடும்..//


ந‌ன்றிங்க‌ க‌ருத்துக்கும் வ‌ருகைக்கும்

*இயற்கை ராஜி* said...

/சுசி said...
//சில நேரங்களில் ஒரு சிறு துளை கிடைத்தாலும் ஆத்திரமாய் பீறிட்டுக் கிளாம்பிவிடுகிறது//

சரியா சொல்லி இருக்கீங்க.

கடைசி கேள்வியும் சரியே./

ம்ம்... கேள்வியெல்லாம் கேக்க‌த் தெரியுதுங்க‌. ப‌தில்தான் தெரிய‌மாட்டேங்குது

*இயற்கை ராஜி* said...

//புலவன் புலிகேசி said...
:))/

ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
எதுவுமே அதிகமானா பிரச்சனை தான் போல. சுயம் இழக்காமல் காம்பரைஸ் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். நல்ல பதிவுங்க
/
ந‌ன்றிங்க‌. சுய‌ம் இழ‌க்காத‌ காம்ப்ர‌மைஸ்க்கு முய‌ன்றால் அது சுயந‌ல‌வாத‌மாக‌ப் போய்விடும்போல‌ இருக்கிற‌தே:-(

*இயற்கை ராஜி* said...

/பிரேமா மகள் said...
இதுக்கே இப்படின்னா? என்ன சொல்றது இயற்கை.. இன்னும் கல்யாணம்‍‍ங்கிற சொல்லப்படுகிற காம்பிரமைஸ் கொடுமையின் உச்சக்கட்டம்.. அதுக்கெல்லாம் தீர்வே இல்லை../குட்டிப் பொண்ணு பேச‌ற‌ பேச்சா இது...:‍)

*இயற்கை ராஜி* said...

/தாரணி பிரியா said...
மனசுக்குள் இருக்கிற எரிமலையை அப்ப அப்ப வெளியேத்தணும் நான் பெரும்பாலும் என் கோபங்களை வெளிக்காட்டிடுவேன். ஆனா கோபம் தணிஞ்ச பிறகு செஞ்சது தப்போன்னும் தோணும் :)


சுயம் இழக்காமல் காம்ப்ரமைஸ் சாத்தியமா ?/


அதே..அதே

*இயற்கை ராஜி* said...

/DG said...
superrrr/


நன்றிங்க

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
ஆமாங்க சரியா சொன்னீங்க..உங்ககிட்ட படிக்கிர பசங்க எத்தனை தடவ காம்ப்ரமைஸ் ஆயிருப்பாங்க !!!/

ஆமாங்க‌..ஆனால் நான் அவ‌ங்க‌கிட்ட‌ ஆக‌ற‌ காம்ப்ர‌மைஸை விட‌ சில த‌ட‌வை க‌ம்மிதாங்க‌

*இயற்கை ராஜி* said...

T.V.ராதாகிருஷ்ணன் said...
சூப்பர்
ராஜி உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்..பார்க்கவும்
/


நிச்ச‌ய‌மாக‌

*இயற்கை ராஜி* said...

/ரசிகன்! said...
ஆனாலும் இந்தக் காம்ப்ரமைஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாழ்வின் மீதான நம்பிக்கையும் ஆர்வமும் நிலைகுலைய ஆரம்பிக்கிறது///

idhu mattum marukka mudiyaadha unmaiyaagiradhu...

nalla ezhudhareenga.../

ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/நட்புடன் ஜமால் said...
ஆமாம்!

காம்ப்ரமைஸ் அடுத்தவங்களாக செய்து செய்து சுயம் மட்டுமா போகுது ...


நல்ல இடுக்கை .../

ந‌ன்றிங்ணா

*இயற்கை ராஜி* said...

/அமைதிச்சாரல் said...
அளவுக்கு மிஞ்சினா அமிர்தமே நஞ்சாகும்போது, காம்ப்ரமைஸும் வெறுப்பாகும்தான்./


ந‌ன்றிங்க‌ வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும்

*இயற்கை ராஜி* said...

/Vani said...
டாங்க்ஸ் டீச்சர் உங்க பதிவுக்கு
/

டாங்ஸ் மேடம் உங்க கமெண்டுக்கு:-)

*இயற்கை ராஜி* said...

வால்பையன் said...
பிடிவாதம் வேறு, கொள்கையில் உறுதியாய் இருப்பது வேறு!

கொள்கையில் உறுதியாய் இருப்பவரிடம் காம்பமைஸ் செய்து கொள்லலாம், ஏனெனில் அவர் சில விசயங்களில் நம்மிடம் காம்பரமைஸ் ஆவார், ஆனால் பிடிவாதகாரர்கலீடம் காம்பரமைஸ் செய்யகூடாது! அது நீடிக்கக்கூடும்!/

ந‌ன்றிங்க‌ வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும்

*இயற்கை ராஜி* said...

//பிரேமா மகள் said...

இதுக்கே இப்படின்னா? என்ன சொல்றது இயற்கை.. இன்னும் கல்யாணம்‍‍ங்கிற சொல்லப்படுகிற காம்பிரமைஸ் கொடுமையின் உச்சக்கட்டம்.. அதுக்கெல்லாம் தீர்வே இல்லை..//


வருத்தபட வேண்டிய ஆண்களே சும்மா இருக்கோம்! நீங்க ஏன் எங்களூக்காக இவ்வளவு பரிஞ்சி பேசுறிங்க!?/

ஆஹா... ம‌க‌ளே
இது உன‌க்குத் தேவையா

*இயற்கை ராஜி* said...

/thenammailakshmanan said...
ஆமாம் இயற்கை இந்த மாதிரி நான் முடியாட்டி கூட எஸ் சொல்லி ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கேன் நோ சொல்லக் கத்துக்கணும்/


வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றிங்க‌ மேட‌ம்