இன்றைய நாளில் படிக்கும் மாணவர்களுக்கான கவனிப்புகளும் அறிவுரைகளும் தாராளமாகக் கிடைக்கிறது. அவற்றில் முக்கியமான சிலர் சொல்வது "அதிகாலையில் படித்தால் மனதில் நன்றாகப் பதியும்".
இத்தகைய எண்ணத்தில் பல வீடுகளில் காலை நேரத்தில் மாணவர்களை படிக்கவைப்பதற்காக பெற்றோர் பலவழிகளையும் கையாள்கிறார்கள்.
ஆனால் இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்துமா எனக் கேட்டால் இல்லை என்பதே மருத்துவர்களின் பதில்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பயோகிளாக் எனப்படும் உயிரியல் கடிகாரம் இயங்குகிறது.மனிதன் பிறந்த நொடி முதல் அவனது அக புற காரணிகளைக் கொண்டு மனிதனின் மனநிலை,உடல்நிலை போன்றவற்றை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் இக்கடிகாரம் சில மனிதர்களை அதிகாலையிலும்,சிலரை பின்னிரவிலும் அல்லது முன்னிரவிலும் உற்சாகமாக வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட உற்சாக மனநிலையில் இருக்கும்போது மனிதனின் செயல்திறனும் கற்கும் திறனும் மிக அதிகமாக இருக்கும். அதனால் பெற்றோர்களே,ஆசிரியர்களே அதிகாலையில் படிப்பது மட்டுமே நன்மை என்னும் கட்டாயத்தை விடுத்து மாணவனின் வசதிக்கு ஏற்ப படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.படிக்கும் நேரத்தை முடிவு செய்ய அவனது கற்கும் திறனை பல்வேறு நேரங்களிலும் சோதித்து சிறப்பாக கற்கும் நேரத்தைத் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
மற்றுமொரு கற்றல் தொடர்பான சர்ச்சைக்குரிய அறிவுரை.கேள்விகளுக்கான விடைகளை எழுதிப் பார்த்தல்.சில பள்ளிகளில் எழுதுவது மட்டுமே மாணவர்களின் கடமையாக சொல்லப்படுகிறது. தேர்வில் பதில் எளிதாக எழுதுவதற்கு எழுதிப் பார்த்தல் மட்டுமே தேவை என்கிறார்கள்.ஒரு முறை எழுதிப் பார்ப்பது சரியானதுதான். ஆனால் எழுதுவது மட்டுமே பள்ளியில் பழகும் மாணவன் பேச்சுத் திறன் கட்டாயமாக பாதிக்கப்படுகிறது.எந்த ஒரு விஷயத்தையும் அவனது சொந்த சொற்களால் கோர்வையாக சொல்லத் தெரிவதில்லை. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனப்படும் மற்றவரோடு தொடர்பு கொள்ளும் திறனில் மிகவும் பின்தங்குகிறான்.
இதைத் தவிர்க்க உங்கள் குழந்தைகளோடு நீங்கள் அமருங்கள். அவர்கள் ஒரு பக்கம் படிக்கிறார்கள் என்றால் அதில் என்ன படித்தார்கள் என்பதை உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.சொல்லுதல் என்பது மனப்பாடம் செய்து ஒப்பித்தலைப் போல அல்லாமல் விவாதிப்பதைப் போலவே அல்லது உங்களுக்கு அவர்கள் படித்ததை விளக்குவது போலவோ இருக்கட்டும்.
இவை இரண்டையும் கடைப்பிடிக்கும் மாணவர்கள்,சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் பாடம் தவிர்த்த பொது திறன்களிலும் சிறந்து விளங்குவார்கள் எனபது பல மனவியல் அறிஞர்களின் கருத்து.
.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆம் நன்றே கற்றால் கற்கை நன்றே
நல்ல இடுக்கை
நல்ல இடுகை
கற்கை நன்றே...
நல்ல இடுக்கை..!
Good post :)
Post a Comment