தென்றல் வீசும் மாலையிலே
சாளரச் சாரலிலே
நேரம் கடத்திய வேளையிலே
உதித்ததொரு சூரியனே
உன் கதிர் கொண்டு
மனம் கவர்ந்து
செயல் தடுத்து
ஆட்கொண்டவனே
உயிர் கொடுக்கும்
பகலவனே
உயிர் எடுக்கும்
மாயம் கற்றது எப்போது
நிலமுறங்கும் பொழுதினிலும்
நிலவுதிக்கும் நேரத்திலும்
கனவிலும் நனவிலும்
காட்சி தருபவனே
மற்றவர் காயத்திற்கு
மருந்தாகும் நீ
என் காயத்திற்கு மட்டும்
காரணமானாயே
கவிதைக் கடலின் பேரூழி
எனக்குக் கற்றுத் தருவது
உன்னை மறக்கும் வலியா
உன் நினைவை மறைக்கும் வழியா?
.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
மக்களே.. கவிதை போட்டு ரொம்ப நாள் ஆச்சு..அதனால ஒரு கவிதை.. :)
வரிகள் நல்லாயிருக்கு ராஜி
//கவிதைக் கடலின் பேரூழி
எனக்குக் கற்றுத் தருவது
உன்னை மறக்கும் வலியா
உன் நினைவை மறைக்கும் வழியா?//
வரிகள் அருமை.
கவிதை மாதிரி இல்லைங்க. அருமையான கவிதைங்க..!
ம்ம்ம்ம்.......
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :)
//மக்களே.. கவிதை போட்டு ரொம்ப நாள் ஆச்சு..அதனால ஒரு கவிதை.. :)//
அதுக்கு கவிதையில்ல போடனும்? ஏன் மனப்பாட செய்யுளெல்லாம் போடுறீங்க? :)
ம்ம்ம்ம்
Post a Comment