உனக்கான எனது

Saturday, September 11, 2010
தூசி படிந்த கதவில்
உன் கைப்பிடியின் பிம்பம்..
துடைக்காமல் மறியல் செய்யுதே
என் கைகள்....

*************************************

உன் ஸ்பரிசம் பட்ட
என் கைக்கடிகாரமும்
நகர மறுக்குதே
மீண்டும் நீயில்லாமல்

*************************************உன் முதற் கோபத்தால்
விளைந்த என் கண்ணீர் துளி
அவசரமாய் சேமிக்கப் பட்டது
இனிக்கும் துளியாய்
உதடுகளில்
*************************************


உன் கால் சுவடுகளில்
தடம் பதிக்கவா
இணையாய் நடக்கவா
தெளிவில்லாமல் தவிக்குதென்
கால்கள்


.

16 comments:

Anonymous said...

மொத்தத்துல ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ணும் நேரம் வந்துடுச்சுன்னு தெரியுது :)

Anonymous said...

ஐ லவ் யூ ராஜி :)

ரோகிணிசிவா said...

1 ) oru vacuum cleaner vaangi veeta clean pannu ,allergic asthma vatnra poguthu

2)watch maathu , illa battery sari pannu , appuram evlav naal than late a pova , watch illainu karanm solli

3 ) tissue vetchuko kannu
sari , yaar uthadu unutha illa avingaluthaa ,sollala thelivaa


4)aatha thanni mabula keela ulunhtaraahtey , veetlaiyae iru

நிஜமா நல்லவன் said...

ம்ம்..

Madumitha said...

எல்லாக் கவிதைக்கும்
வேர் பிரியம்தானோ?
இதை ஊர்ஜிதப் படுத்துகிறது
உங்கள் கவிதைகள்.

அ.முத்து பிரகாஷ் said...

பொண்ணுங்க கூட இப்படியெல்லாம் புலம்புவாங்களா ... ம்ம் ..நல்லாத்தானிருக்கு தோழர் !

கார்த்திகைப் பாண்டியன் said...

ராஜி.. நீங்களும் ஜோதில ஐக்கியம் ஆகிட்டீங்க போல.. நன்று..:-))

'பரிவை' சே.குமார் said...

கவிதையில் காதல் நல்லாயிருக்கு.

*இயற்கை ராஜி* said...

@மயில்...........ஹெல்த் செக் அப்தானே.. பண்ணிட்டாப் போச்சு..

*இயற்கை ராஜி* said...

@ புனிதா... ம்ம்ம்ம்ம்;‍))

*இயற்கை ராஜி* said...

@ரோகிணி சிவா

ஹ்ஹ்ம்ம்.. எதுக்கு இந்தக் கொலவெறி... வர வர உங்க லவ் ஃபீல் குறைச்சு ரவுடி ஃபீல் அதிகமாயிருச்சு..டேக் கேர்:-)

*இயற்கை ராஜி* said...

நிஜமா நல்லவன் said...
ம்ம்..
//

அண்ணா,, நீங்க நிஜமாவே ரொம்ப நல்லவரூஊஊஊ

*இயற்கை ராஜி* said...

@மதுமிதா.....கண்டிப்பாகப் பிரியம்தான் கருப் பொருள் மதுமிதா....

பிரியத்தை நீங்கள் காதல் எனப் பொருள் கொள்ளவில்லைதானே?

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க நியோ.. பொண்ணுங்கன்னா பொலம்பக் கூடாதுன்ன்னு ஏதும் ரூல் இருக்கா என்ன?

*இயற்கை ராஜி* said...

கார்த்திகைப் பாண்டியன் said...
ராஜி.. நீங்களும் ஜோதில ஐக்கியம் ஆகிட்டீங்க போல.. நன்று..:-))
//
ஹலோ...எத்த‌னைபேரு கிள‌ம்பி இருக்கீங்க‌.. பிச்சு..பிச்சு..

அப்போ நீங்க‌ ஜோதில‌ க‌ல‌ந்திட்டீங்க‌ன்னு சொல்லுங்க‌...?

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க குமார்