சொல்ல‌டி எஞ் செல்ல‌க்கிளி

Monday, September 6, 2010
ஒறவெல்லாம் தெரண்டிருக்க
ஒரு நாளு ஊருக்குள்ளே
மாமனவங் கை புடிச்சு
சுத்திவர ஆசையடி

வெள்ளி நிலா நிற்கையிலும்
சூரியந்தான் எரிக்கையிலும்
மாமனவன் விரல் புடிச்சு
அடியெடுக்க துடிக்குதடி

அறுப்புக் கால‌க் காத்தாக‌
வெத‌ப்பு கால‌ மழைபோல‌
மாம‌ன‌வ‌ன் இருப்பு
ம‌ன‌ச‌த்தான் நெறைக்குத‌டி

முட்டும் ஆட்டுக்குட்டி
கொத்தும் கோழிக்குஞ்சு
எல்லாமே மாம‌னாட்ட‌
தோணுத‌டி என்ன‌ செய்ய‌

வெத நெல்லா வச்சிருக்கும்
மாம‌ன‌வ‌ன் நெனப்பு
பதராகப் போயிடுமோ
சொல்ல‌டி என் செல்ல‌க்கிளி


.

20 comments:

sakthi said...

வட்டார வழக்கில் கவிதையா
நல்லாயிருக்குங்க ராஜி

Anonymous said...

யாரந்த கிளி சொல்லவல்லயோ??

அபி அப்பா said...

அதான புதினா கேட்ட மாதிரி யார் அந்த செல்லக்கிளி:-))

நல்லா இருக்கு வட்டார மொழி கவிதை!

மதுரை சரவணன் said...

//முட்டும் ஆட்டுக்குட்டி
கொத்தும் கோழிக்குஞ்சு
எல்லாமே மாம‌னாட்ட‌
தோணுத‌டி என்ன‌ செய்ய‌//


அருமை. கவி வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

ஆண்டாள் நாச்சியாருக்கே எதிர் கவுஜையா? நல்லாரு தாயி.....

வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானெதிர்
பூரண பொற்குடமேந்தி புறமெங்கும்
தோரணநாட்டக் கணாக் கண்டேனடி

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
பொற்புடைத்தாம நிறை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசூதனன் வந்து என்
கைத்தளம் பற்றிட கனாக் கண்டேனடி.

ஆரூரன் விசுவநாதன் said...

//முட்டும் ஆட்டுக்குட்டி
கொத்தும் கோழிக்குஞ்சு
எல்லாமே மாம‌னாட்ட‌
தோணுத‌டி என்ன‌ செய்ய‌//

கெடா வெட்டுக்கு இன்னும் நாளிருக்குள்ள....பொரட்டாசி மாசம் வெட்டகூடாது தாயி.....கொஞ்சம் பொறு, அப்புசி மாசம் சேத்து வச்சு வெட்டிக்கலாம்.

ஈரோடு கதிர் said...

ம்ம்ம்ம்

'பரிவை' சே.குமார் said...

வட்டார வழக்கில் கவிதை...

நல்லாயிருக்குங்க ராஜி.

logu.. said...

\\முட்டும் ஆட்டுக்குட்டி
கொத்தும் கோழிக்குஞ்சு
எல்லாமே மாம‌னாட்ட‌
தோணுத‌டி என்ன‌ செய்ய‌\\

kirukkuthanama eathum pannama iruntha sari..

*இயற்கை ராஜி* said...

@ sakthi...நன்றி சகோதரி..

*இயற்கை ராஜி* said...

@இனியவள் புனிதா


மாமன் யாருன்னு கேப்பேன்னு பார்த்தேன்.. கிளி யாருன்னு கேக்கறியே புனிதா

*இயற்கை ராஜி* said...

@அபி அப்பா

எல்லாருக்கும் கிளியப் பத்தியே நெனப்பு எதுக்கு?

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க சரவணன்:)

*இயற்கை ராஜி* said...

@ ஆரூரன் விசுவநாதன்

வாங்க தல.. என்ன பண்ண எதிர் கவிதை எழுதறதே பொழப்பா போச்சு

*இயற்கை ராஜி* said...

மாமனாட்ட தோண்ற குட்டி போய் வெட்டப் பிளான் போடறீங்களே தல.. நான் ஒரே சேட் பீலிங்ஸ்

*இயற்கை ராஜி* said...

//ஈரோடு கதிர் said...
ம்ம்ம்ம்

//


என்ன அண்ணா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க குமார்

*இயற்கை ராஜி* said...

@logu...வருகைக்கு நன்றிங்க‌

Anonymous said...

*மாமன் யாருன்னு கேப்பேன்னு பார்த்தேன்*

கேட்டாலும் யாருன்னு சொல்லப் போறதில்ல அப்புறம் எதுக்கு??

ரோகிணிசிவா said...

*மாமன் யாருன்னு கேப்பேன்னு பார்த்தேன்*

//கேட்டாலும் யாருன்னு சொல்லப் போறதில்ல அப்புறம் எதுக்கு??//

இது தான் சூப்பர் !!!!,
இன்னுமா கேக்கணும் நம்ப ????