டீச்சர் வேலை பார்த்துகிட்டு உங்களுக்கு எல்லாம் ஒண்ணும் சொல்லிக்குடுக்காம மொக்கை போட்டுட்டே எவ்ளோ நாளுக்கு இருக்கறது..அதனால நானும் உபயோகமான பதிவு போடறாதுன்னு முடிவு எடுத்துட்டேன்..( பதிவு போட சரக்கு காலி ஆனதாலதான் இப்பிடி ஒரு முடிவு எடுத்தேன்க்கிற உண்மையை கண்டுபிடிச்சவங்க எல்லாம் கம்முன்னு இருக்கணும்.. பின்னுட்டத்தில எல்லாம் சொல்லக் கூடாது.)
படிக்கிற காலத்திலயே பலபேருக்கு கணக்குன்னா பிணக்கா இருக்கும்.ஆனால் இந்த கால்குலேஷன்ஸ் அன்றாட வாழ்க்கையில எல்லா நேரத்திலயும் வந்து டார்ச்சர் பண்ணும்.இப்போல்லாம் 1+2 எவ்ளோன்னு கேட்டாக்கூட கால்குலேட்டரைத் தேடற நெலமைல தான் பலபேர் இருக்கோம்.
இதிலருந்து கொஞ்சம் தப்ப்பிக்கறதுக்கு சில வழிகள் இருக்கு.
ஸ்கொயர் பண்ணுதல்,பெருக்குதல்,வகுத்தல் இதெல்லாம் செய்யறதுக்கு பல சுருக்க வழிகள் இருக்கு.அதுல எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உங்களுக்கும் சொல்றேன்.கேட்டுக்கோங்க.
1. 5 ல் முடியும் ஒரு இரண்டு டிஜிட் நம்பரை ஸ்கொயர் பண்ணனுமா?(Eg.25,65,95,etc)
1.அந்த நம்பரின் முதல் டிஜிட்டுடன் 1 ஐ கூட்டி வரும் விடையுடன் அந்த நம்பரைப் பெருக்குங்கள்.
2.வரும் விடையைத் தொடர்ந்து 25 என்னும் நம்பரை எழுதிக் கொள்ளுங்கள்.
Eg; Square of 65
= (6X(6+1))25
=4225
2.ஒரு எண்ணை 5ஆல் வகுக்க வேண்டுமா?(Eg:67/5)
அந்த எண்ணை இரண்டால் பெருக்கி,டெசிமல் பாயிண்டை ஒரு டிஜிட் இடப்பக்கம் நகர்த்துங்கள்
Eg: 56/5
= 56X2 = 112 (Move the decimal to left)
=11.2
3. 10க்கு அருகிலோ,100க்கு அருகிலோ,1000க்கு அருகிலோ இருக்கும் எண்களைப் பெருக்க வேண்டுமா?
Eg: 8X7,94X96,990X994
1.முதல் எண்ணை 100லிருந்து கழித்து வரும்விடையை A என குறித்துக் கொள்ளுங்கள்
2.அதேபோல் இரண்டாம் எண்ணை 100லிருந்து கழித்து வரும் விடையை B என குறித்துக் கொள்ளுங்கள்
3.இப்போது A வை முதல் எண்ணிலிருந்தோ B யை இரண்டாம் எண்ணிலிருந்தோ கழித்து வரும் விடையை எழுதிக் கொள்ளுங்கள்.
4.அதனைத் தொடர்ந்து A மற்றும் B யை பெருக்கி வரும் விடையை கீழ்வருமாறு எழுதுங்கள்.
ஒரிஜினல் நம்பர் ஒரு எத்தனை இலக்கமாக இருக்கிறதோ அத்தனை இலக்கத்தில் A,B பெருக்கிய விடையை எழுதுங்கள்
இதுதான் பெருக்கிய விடை.
Eg: 94 X 95
A =6 B=5
94-5 = 95-6 =89
AXB =30
Ans = 8930
997002
Eg.2. 997 X992
A=3
B=8
997-8 =992-3 =989
3X8 = 024 (Original number is in 3 digits)
Ans = 989024
இன்னிக்கு பாடம் அவ்ளோதான் .. போயிட்டு அடுத்த கிளாஸ்க்கு மறக்காம வந்துருங்க.
உங்கள்ல பலபேருக்கு இதெல்லாம் ஜுஜுபின்னு தெரியும்..ஆனாலும் வந்து பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க.
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
கம்மு ...
டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்கையோ போயிட்டீங்க :)
madam fees epdi , vote pannuna pothungalaa ?
இதப்பார்ரா.. இந்தப் புள்ளைக்கும் இவ்ளோ தெரிஞ்சிருக்கு.
ஜூப்பரு!
இதை கண்டுபிடிச்சதுக்கு ராயல்டி எல்லாம் ஒழுங்கா வருதா ராஜி?
//ஆனாலும் வந்து பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க.//
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
#ஹய்யோ ஹய்யோ
//இன்னிக்கு பாடம் அவ்ளோதான்//
#ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
//அடுத்த கிளாஸ்க்கு மறக்காம வந்துருங்க.//
#ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா மறுபடியும் வரணுமாமாம்
//அபி அப்பா said...
ஜூப்பரு!/
படிக்கிற காலத்தில ஒழுங்கா படிக்காம ராஜன் தோட்டத்தை சுத்தி வந்துட்டு இப்ப வந்து படிச்சுட்டு ஜூப்பராம்ல ! :)
//நட்புடன் ஜமால் said...
கம்மு ...///
எஸ்கேப்பு!
ஐந்தை தவிர மற்ற எண்களில் முடியும் எண்களின் ஸ்கொயர் கண்டுபிடிக்க வழியிருக்கா டீச்சர்?
எனக்கு படிப்பெல்லாம் வராதுங்க
ஐய்யோ,, ராஜி யாரோ என்னவோ சொல்றதுக்காக நீ இப்படியெல்லாம் ஆரம்பிக்காதே, இன்னொரு கணக்கு பதிவு போட்டே, நான் இந்தப்பக்கமே வர மாட்டேன் :))
நான் இந்த வகுப்பிலேர்ந்து வெளிநடப்பு செய்யறேன்.
டீச்சர்! நான் சயின்ஸ் குரூப்! வுடு ஜூட்....
ஜமால் அண்ணா.. இதுதான் நல்ல புள்ளைக்கு அடையாளம்
நான் இங்கதான் ஆதவன் இருக்கேன்.. நீங்கதான் எங்கெங்கியோ போறீங்கன்னு கேள்விப்பட்டேன்
கணக்குல பார்டர்ல பெயிலு...எஸ்கேப்:))
ரோகிணி.. அதே ரெண்டு வோட்டா போடுங்க டாக்டர்..
@Jeeves...........ஜூலைல பொறந்தவங்கள்ளாம் இப்பிடித்தான் அண்ணா அறிவாலி:)ங்களா இருப்பாங்க
ராஜி..
எங்க சாமி இதெல்லாம் காப்பி அடிக்கிறே
எனக்கும் சொன்னா, நானும் இடுகை தேத்திக்குவன்ல!
/
நட்புடன் ஜமால் said...
கம்மு .../
யோவ் அண்ணே...இங்க திரும்பவும் கம்முனா உங்களுக்கு கும்மு தான்:))
@ அபிஅப்பா.. நன்றி:)
/
ஈரோடு கதிர் said...
ராஜி..
எங்க சாமி இதெல்லாம் காப்பி அடிக்கிறே
எனக்கும் சொன்னா, நானும் இடுகை தேத்திக்குவன்ல!/
ஏனுங்க அண்ணா....ஏற்கனவே நீங்க தேத்துற இடுகையே தாங்கலை...இன்னுமா:)))
//நிஜமா நல்லவன் said...
/
நட்புடன் ஜமால் said...
கம்மு .../
யோவ் அண்ணே...இங்க திரும்பவும் கம்முனா உங்களுக்கு கும்மு தான்:))
//
ஒரு மனுசனா நல்லவரா இருக்க விடமாட்டீங்களே
நிஜமா நல்லவன் said...
/
ஈரோடு கதிர் said...
ராஜி..
எங்க சாமி இதெல்லாம் காப்பி அடிக்கிறே
எனக்கும் சொன்னா, நானும் இடுகை தேத்திக்குவன்ல!/
ஏனுங்க அண்ணா....ஏற்கனவே நீங்க தேத்துற இடுகையே தாங்கலை...இன்னுமா:)))
//
Repeat o repeatyeeeee
/
தேவன் மாயம் said...
டீச்சர்! நான் சயின்ஸ் குரூப்! வுடு ஜூட்..../
நீங்க டாக்டர்னு நாங்க இன்னும் மறக்கலைங்க டாக்டர்:))
அபி அப்பா said...
இதை கண்டுபிடிச்சதுக்கு ராயல்டி எல்லாம் ஒழுங்கா வருதா ராஜி?
//
இந்தக் கேள்விய மட்டும் இதையெல்லாம் கண்டுபிடிச்சவங்க படிக்கணும்.. அப்புறம் தெரியும் சேதி
ஆயில்யன் said...
//ஆனாலும் வந்து பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க.//
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
//
ரொம்ப சிரிக்காதீங்க பாஸ் இது படிக்காம போட்ட கமெண்டுன்னு நல்லாத் தெரியுது
அடுத்த கிளாஸ்க்கு மறக்காம வந்துருங்க.//
#ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா மறுபடியும் வரணுமாமாம்//
ச்சும்மா அட்டெண்டன்ஸ் போடத்தானே பாஸ் ..அதுல என்ன கஷடம்
@ வால்பையன் இருக்குங்க.... அடுத்த பதிவில சொல்றேன்...:-)
@தியாவின் பேனா ................ பேனாவே இப்ப்பிடி சொன்னா நாங்கல்லாம் என்னங்க பண்றது
@விஜி.. ஒழுங்கா படிச்சு வீட்ல குட்டீஸ்க்கு சொல்லிக்குடுங்க..வரலன்னா அப்புறம் தெரியும் சேதி
@பாலாசி.... ஏன்..ஏன்..ஏன்..
@தேவன்மாயம்..
டாக்டர்.. இந்த கணக்குக்கு பயந்தே சயின்ஸ் குரூப் படிச்சீங்க போல இருக்கே
நிஜமா நல்லவன் said...
கணக்குல பார்டர்ல பெயிலு...எஸ்கேப்:))
//
வாங்க.. உங்கள மாதிரி ஒருத்தரத்தான் தேடிட்டு இருந்தேன்.. இனிமேல் ஒழுங்கா வகுப்புக்கு வரணும்.. அப்போதான் இவ்ளோ வருஷமா பாஸ் பண்ணாத கணக்க பார்டர்ல் யாவது பாஸ் பண்ண முடியும்
@ ஈரோடு கதிர்..
அஸ்க்கு..புஸ்க்கு... நீங்க தேத்திட்டா நான் என்ன பண்றது.. சொல்லமாட்டேன்
அடுத்தக் கணக்குப் பதிவுக்கு ஐடியா:
ரோட்டில் போகும் வரும் கார் & டூவீலரின் நம்பர் போர்டைப் பார்த்த கணத்திலேயே அதன் கூட்டு எண் கண்டுபிடிப்பது எப்படி?
அய்யே இந்த டீச்சர் சரியில்ல!!!
உதாரணத்துக்கு கூட Egன்னு முட்டையா போடுராங்கோ!!!
கணக்கு நல்ல சொல்லி தரிங்க....
Post a Comment