கல்விக் கட்டண உயர்வு என்பது இப்போது பற்றி எரியும் பிரச்சினையாக நம்மிடையே நிலவுகிறது.
பள்ளி நிர்வாகங்கள் கட்டண உயர்வுக்கு சொல்லும் காரணம்.பெற்றோர் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் தர அரசு நிர்ணயித்த கட்டணத்தால் முடியாது என்பதே. இந்நிலையில் பெற்றோர்,அதே பள்ளியில் தான் படிக்கவைப்பேன் ஆனால் கட்டணம் குறைவாக வாங்க வேண்டும் என அடம் பிடிக்க வேண்டுமா? அப்படி அதிகம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் படிக்க வைப்பதே பெருமை என நினைக்காமல்,அத்தகைய பள்ளிகளை புறக்கணித்து விட்டு,அரசுப் பள்ளிகளை நாடுவதைப் பற்றி பெற்றோர் ஏன் சிந்திக்கக்கூடாது?
அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த விதத்திலும் தனியார் பள்ளிகளுக்கு சோடை போனதல்ல.சமீபத்திய தேர்வு முடிவுகள் அதை உறுதிப்படுத்துகின்றன.
அரசுப் பள்ளியில் குறைந்த கட்டணம் செலுத்தி அடிப்படைக் கல்வியைப் பெற்றுக் கொண்டு,படிப்பல்லாத பிற திறமைகளான கம்ப்ப்யூட்டர்,கராத்தே , நீச்சல் போன்றவற்றை தனியாக கட்டணம் செலுத்தி வெளியிடங்களில் கற்றுக் கொள்ள ஏன் முயலக்கூடாது?
***********************************************************************************
சில நேரங்களில் ஒருவர் தவறு செய்யும் தவறால் விளையும் மோசமான விளைவுகளை விட, அந்தத் தவறுக்கு நாம் கோபப்படுவதால் வரும் தீய விளைவுகள் மிக மோசமாகின்றன. எவர் மீதும் கோபப்படும்முன் அதன் தீய விளைவுகளை யோசியுங்கள்.அந்தக் கோபத்தைத் தூக்கிப் போடுவதால் என்ன குறை நமக்கு வந்துவிடப் போகிறது என்பதையும் சில நிமிடங்கள் தனிமையில் யோசியுங்கள்.கண்டிப்பாய் நீங்கள் எடுக்கும் முடிவு நல்லதாகவே அமையும்.
***********************************************************************
விளை நிலங்கள் வீட்டு நிலங்களாவதைப் பற்றி நிறைய பேர் கவலைப்பட்டப்போது எல்லாம், அதன் கொடுமை என்னால் உணரப் படவில்லை.அண்மையில் ஒரு கிராமத்துக்கு சென்ற பயணத்தின் போதுதான் நிதர்சனமாய் உணர்ந்தேன்.ஆறு மாத கால இடைவெளியில் ஏறத்தாழ 50 ஏக்கர் நிலங்களில் விவசாயம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமத்தின் மொத்த விளை நிலங்களே 100 ஏக்கருக்கும் குறைவாகத்தான் இருக்கும்.மீதம் இருக்கும் கொஞ்ச நிலங்களும் வீடாக மாறிப்போனால் விவசாயம் என்ன ஆகும்?
********************************************************************
இமெயிலில் வந்தது
கீழேயுள்ள படம் ரத்தன் டாடாவுக்கு தரப்பட்ட ஒரு அன்பளிப்பு...இதைப் பார்க்கும் போது ஏதோ குழப்பமான வண்ணக் கலவையாகவே தோன்றுகிறது அல்லவா?
இதன் நடுவிலுள்ள வட்டத்தில் ஒரு பளபளப்பான இரும்பு உருளையை வைக்கும்போது அதில் தோன்றுவது ரத்தன் டாடாவின் உருவம்.
இதைச் செய்தவர் மிகப் பிரபல ஓவியரோ,விஞ்ஞானியோ அல்ல.சாலையில் படம் வரையும் ஒரு சாதாரண மனிதர்.அரும் பெரும் திறமைகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன பாருங்கள்.
.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஓவியம் மிக சிறப்பு :)
ஓவியம்ம்ம்ம் ...அட அற்புதம் ராஜி.:))
என்ன டீச்சர் எல்லாம் அட்வைஸா இருக்கே :)
படம் சூப்பர்
இம்முறை மனதில் மலர்ந்த அனைத்தும் அற்புதம் ராஜீ.,
பெற்றோருக்கு சொல்லிருக்கும் செய்தியும் ,
முன்கோபம் பற்றிய குறிப்பும் .
மேலும் அந்த ஓவியம் மிக அழகு
||விளை நிலங்கள் வீட்டு நிலங்களாவதை||
ராஜி...
வீட்டு நிலம் ஆகவில்லை
வியாபார நிலம் மட்டுமே ஆகியிருக்கிறது
இப்போது பிளாட் போடப்பட்டுள்ள நிலத்தில் வீடுகட்டி முடிக்க இன்னும் 200 வருசம் ஆகுமாம்..
இந்த லட்சணத்தில் இன்னும் நிறைய நிலங்களை வீட்டு மனைகளாக ஜோடிக்கப் போகிறார்களாம்
ஓவியம் ... அற்புதம்...
படத்தில் இருப்பது, JRD TATA அவர்கள்.
டாடா நிறுவனத்தை ஏற்ப்படுத்தியவர்.
ஓவியம் ... அற்புதம்
Post a Comment