நானும் நிலாவும் கொஞ்சூண்டு சோறும்

Wednesday, October 17, 2018
ஏய்...எவ்வளோ நேரமா தட்டத்துல சாப்பாட்ட வச்சிகிட்டு உக்காந்திருப்ப..சாப்பிடுறியா இல்ல நாலு கன்னத்துல போடவா?

தேவியின் குரல் உச்சஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தது. பயணக்களைப்பையும் மீறி உறக்கம் கலைந்து நான் எட்டிப் பார்க்க,

 வாம்மா மின்னல்..உன் செல்லக்குட்டி எவ்ளோ சாப்பாட்ட வேஸ்ட் பண்றா பாரு ஒரு பருக்கை வேஸ்ட் பண்ணினா ஒரு வேளை பட்டினி கிடக்கணும்னு அப்பா சொல்லுவாங்க நெனப்பிருக்கா?

 ம்ம்..சரி சரி டென்சன் ஆகாதே..நிலாகிட்டநான் பேசிக்கறேன்..

 ஆன்ட்டி இங்க வாங்க..இன்னிக்கு அக்டோபர்  16.என்ன ஸ்பெஷல்னு கரெக்டா சொல்லுங்க...நான் சாப்பிடறேன்

. அய்யயோ மாட்னேனா..யாருக்கு பர்த்டேவோ தெரியலையே.விஷ் பண்ண மறந்திட்டேனே.அதுக்கு பனிஷ்மெண்ட்னு சொல்லியே இந்தக் குட்டி தேவையானதெல்லாம் சாதிப்பாளே.

 டேய் குட்டி..சத்தியமா நியாபகம் இல்லைடா.என்னனு நீயே சொலலிடு..

சரி..சொல்றேன்.எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தர்றீங்களா?

 ஹ்ம்ம்ம்..வேற வழி.?.. தர்றேன்..சொல்லு ...

 இன்னிக்கு உலக உணவு தினம் ஆன்ட்டி..

 அட ஆமாம்டா... மறந்தே போயிட்டேன். இந்ததினத்த பத்திஉனக்கு என்ன தெரியும் சொல்லு பாக்கலாம்...

 சொன்னா ஐஸ்கிரீம் கூட டெய்ரிமில்க் கிடைக்குமா.?

 ஏய்...கிரிமினலு...மொதல்ல சொல்லு..சரியா சொல்றியானு பாக்கலாம்


. ம்ம்...ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN-FAO) உருவான தினத்த உணவுப் பாதுகாப்பை நோக்கமா கொண்டு 1945 முதல் அனுசரிக்கறாங்க. .இதுக்கு முன்முயற்சிகள்அதிகமா எடுத்தவரு ஹங்கேரியின் அப்போதைய வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி. நாமெல்லாம் தீம் பர்த்டே கொண்டாடற மாதிரி   1981 லருந்து   அந்தந்த வருஷம் கவனம் செலுத்த வேண்டிய தேவை அடிப்படையில் இந்த தினம்  தீம் வைச்சு கொண்டாடப்படுது.இந்த வருசத்துக்கான தீம்  our actions are our future( நம் செயல்களே நம் எதிர்காலம்)..

 Wow..super da kutty.

 இருங்க இருங்க இன்னும் சொல்றேன். ..உணவுப் பாதுகாப்புனா உணவை பத்திரமா மூடிவைக்கறதுனு நினைச்சுக்காதீங்க..உலக மக்கள் ஒவ்வொருவருக்கும்  பசி வரும்போது தனக்கான உணவு கிடைக்கும்கிற பாதுகாப்பு உணர்வுதான் அது. அத உறுதிப்படுத்த zero hunger campaign  கூட launch பண்ணியிருக்காங்க.

 பார்ரா..இந்த குட்டி மண்டைக்குள்ள இவ்ளோ விஷயம் அடைச்சு வச்சிருக்கே. இந்த தினத்த   food engineers day னு கூட இந்தியால கொண்டாடறாங்க.நம்ம நாட்ல இந்த தினத்தில அடிப்படையா கவனம் செலுத்தறது விவசாயத்துலதான். ஒருங்கிணைந்த விவசாயம் மூலமா கம்மியான மூலப்பொருட்களை வச்சு அதிகமா விளைவிக்கற  produce more with less வழிமுறைகள் வகுத்திருக்காங்க...
சரி..இப்போ சொல்லு...இவ்ளோ விசயம் தெரிஞ்சி வச்சிருக்க அறிவாளிக்குட்டி என்ன பண்ணனும்?

 தட்டில இருக்க சாப்பாட்ட வீணாக்காம சாப்பிடணும்...இத சொல்வீங்கனு தெரிஞ்சிதான் உங்ககிட்ட பேசிகிட்டே சாப்ட்டு முடிச்சிட்டேன்.வாங்க ஐஸ்கிரீம் வாஙக போகலாம்...


 இன்னும் கொஞ்ச நேரம் பயணக்களைப்பு தீர தூஙகியாவது இருக்கலாம்.. என்  பர்ஸாவது தப்பிருக்கும்.

8 comments:

ஸ்ரீராம். said...

வித்தியாசமான முறையில் செய்தியைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்று.

vimalanperali said...

உணவை வேஸ்ட் பண்ணக்கூடாது என அட்வஸ் பண்ணுவது இப்பொழுதெல்லாம் கெட்ட வார்த்தையாகிப்போனது என்பதுதான் வேதனையிலும் வேதனை,தற்செயலாய் வீடுகளில் மிஞ்சுகிற உணவு என்பது வேறு,ஆனால் வாங்கி உண்ணாமல் வேஸ்ட் பண்ணுவது வேறு,பிறந்த நாளுக்காக வாங்குற விலை உயர்ந்த கேக்குகள் எத்தனை பேரால் சிந்தாமல் சிதறாமல் வேஸ்ட் ஆகாமல் சாப்பிடப்பட்டிருக்கிறது எனப்பாருங்கள்,

*இயற்கை ராஜி* said...

@ஸ்ரீராம்..

மிக்க நன்றிங்க வருகைக்கும் கரூத்துக்கும்

*இயற்கை ராஜி* said...

@vimalan Perali

எல்லாரும் யோசிக்க வேண்டிய விஷயம்.முக்கியமா குழந்தைகள் மனதில் பதியவைக்க வேண்டும.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நல்ல கதை.

Peter parker said...

Problems due to being Unable to cash Coined in Gdax Support
Are you getting an error while cash coin in Gdax? Such problems are irritating and the worst part is when you don’t know how to fix it. To fix the error completely from the roots, you must contact the adroit professionals by dialing Dial Gdax Support Number 1-888-764-0492 immediately. The experts will look over your issue and create easy to apply solutions and methods. You can avail their services anytime as they are active round the clock without any discontinuity.
For more info: https://www.cryptophonesupport.com/wallet/gdax/

Peter parker said...

HOW TO TRANSFER ERC-20 TOKENS IN BINANCE?
In Binance, you can easily trade virtual currency bit coins at reasonable rates. If you wish to transfer ERC-20 tokens into Binance and don't know how to transfer it then, you can take direct aid from the proficient experts by calling them on Binance Helpdesk Number. The experts will offer variety of methods and techniques so that you can easily transfer the ERC-20 tokens. The experts are always approachable so you can contact them whenever you encounter issues or doubts. then user can dial Binance Support Phone Number +1【(877)-209-3306】to speak to the adroit experts related to the issue. The experts will deliver most accessible and handy remedies instantly.
For more info: https://www.cryptophonesupport.com/exchange/Binance/