காலம் அதன்போக்கில் வைரக்கற்களையும், கண்ணாடிக் கற்களையும் கலந்தே நம் கைகளில் கொடுக்கிறது. முதலிலேயே வைரக் கற்களை கண்டறிபவர்கள் அந்த ஒரு கல்லிலேயே திருப்தியாகி சுலபமான வாழ்க்கையை கைக்கொள்கிறார்கள். வைரத்துக்கு முன் கண்ணாடிக் கற்கள் கைகளில் சிக்குமாயின்,நம கையில் இருக்கும் மற்ற அனைத்தும் அப்படித்தான் இருக்கும் எனச் சோர்ந்து போகிறோம். கண்ணாடிக் கற்களாகவே இருந்தாலும் அதனை கைவினைப் பொருட்களால் அழகாக்காலாமே என்னும நேர்மறைச் சிநதனை கொண்டவரகளே கைகளில் மீதமிருக்கும் அனைத்து வைரங்களையும் கண்டறிந்து வெற்றியாளரகளாகப் பரிமளிக்கிறார்கள்.
ஓடி முடிதத காலத்தின் பாதையில் திரும்ப பயணிககவோ, சிதறவிட்ட வைரஙகளைப் பொறுக்கி எடுக்கவோ முடியாது. அதனால் என்ன, ஓடும் நொடி முள் இன்னும் தன் ஓட்டத்தை நிறுத்திவிடவில்லை.
இப்போது நினைத்தாலும் அதனைத் துரத்தலாம்....
எட்டலாம்....ஏன்? அதனை மிஞ்சியும் ஓடத் துவங்கலாம்....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment