வரலாறு முக்கியம் தோழீஸ்

Tuesday, January 29, 2019
"ஹேய்ய்.. விடிஞ்சிடுச்சு.சீக்கிரம் ரெடியாகு.அந்த வேலை இந்த வேலைனு,லேட் பண்ணாம ரெண்டு டப்பா பவுடர எடுத்துகொட்டிட்டு சீக்கிரம் கிளம்பு".

"அடிப்பாவி.மணியப் பாரு. இபபோவே இப்படி பறந்துட்டு  அப்புறம் கெளம்பறப்ப அத மறந்துட்டேன் இத மறநதுட்டேன்னு லேட் பண்ணு. அப்புறம் கவனிச்சுக்கறேன உன்னைய."

"நான் அப்படி என்ன மறந்தேன். என்னை திட்டறதே உனக்கு வேலையா போச்சு"

" மாரத்தான்க்கு ஷூ மறந்த கதைலாம் பேச வைக்காதே"

சரி.விடு விடு..சமாதானமா போயிடலாம்.சீக்கிரம் கிளம்பிட்டு கூப்டு.

இந்தளவுக்கு என்னை டேமேஜ் பண்ற ஆளு பிரவீணாதான்னு நான் சொல்ல வேண்டியதில்லை
இநத வாட்ஸ்அப் உரையாடல் நிகழ்ந்த நேரம் 3.15 AM.

எதோ அதிகாலைல நடக்கப் போற நிகழ்வுக்கு கிளம்பறோம்னு நினைக்கறீங்களா?

9.30க்கு தொடங்கப்போற ஈரோடு வாசல் ஆண்டுவிழாக்குதான் இத்தனை ஆர்வம்.

முதல் நாளே லதா  "எல்லாருக்கும் முன்னாடி போறோம். ஹால் சரியா பூட்டறாங்களா" னு செக் பண்ணிட்டுதான் வரோம்.எல்லாரும் ஒணணாவே போயிடலாம்"

யசோதா அக்கா " ராஜி . என் கூட வர்றியா? வேற யார் வர்றா?"

 அக்கா! ஒரு 8.30க்கு கிளம்பலாமா?

சரிடா.வீட்ல ஏதும் முக்கியவேலை இல்லைனா கிளம்பிடலாம்.இல்லை நீ முன்னாடி போறதுன்னா போ. நான் 9 மணிக்கெல்லாம் வந்தர்றேன்.

கோதை அக்கா கிளம்பின கதைலாம் வெளிய சொல்லக் கூடாதுனு மிரட்டிட்டதால அவங்க சொன்னது எதையும் நானு இங்க சொல்லமாட்டேன்.

மணி 8.30
 "வீட்டுவாசலில் ஹார்ன் சத்தம்.வாடி சீக்கிரம்" இது பிரவீணா.

இதுக்கு முன்னாடி  "என் ஹேர்கட் னால நான சீக்கிரம் ரெடி"ன்னு பெருமையடிச்சு கான்ப்ரன்ஸ் காலில் தோழிகள் எல்லாரும் கழுவி
ஊத்தினதெல்லாம் இஙக வேணாம். டோட்டல் டேமேஜ் ஆயிடும்.

போனில் லதாவிடம் "லதா, இஙகருந்து ஹால் பக்கம்தான.நாங்க ரெண்டு பேரும் இப்படியே வந்துர்றோம்"
வீட்டில இருங்க சேர்ந்து போலாம்னு சொல்லி லதாவை காத்திருக்க சொல்லிட்டு, ஹாலுக்கு போகும் பாதையை பார்த்ததும் வண்டி லெப்ட் திரும்பிடுச்சு.
இடையில் சரிதா சீக்கிரம் போகணும்னு தவியா தவிச்ச கதைலாம் எழுதினா சிந்துபாத் கதையளவு நீளும்

பிரவீ . சீக்கிரம் கிளம்பிட்டோம்ல. இபபோவே அங்க போயி என்ன பண்றது?

இப்போ என்ன?, காபி குடிக்கணும்.அதான. நுழைஞ்சுருவோம்.

நுழைஞ்சு காபி கடைக்காரருக்கு காபி போட டிரைனிங் குடுத்துட்டு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஹால் பக்கத்துல போயி சடன் பிரேக் போட, ரெண்டு பக்கமிருந்தும் ரெண்டு கார்கள் அதே போல பிரேக்,பிரேக்

ஒரு கார் கதிர் அண்ணா, இன்னொரு கார் மகேஸ்வரி,மதன்.

ஈரோட்டின் எல்லாப் பகுதிகளையும் மாதிரியே தான் அங்கயும்.அதாங்க போற வழிய மறிச்சு, குழிபறிச்சு.....blah,blah.
கதிர் அண்ணா வாழ்க்கைல வழிகாட்டற மாதிரி அங்கயும் பாதை அமைச்சு குடுக்க..அதில் நாங்க கடக்க...


பிரவீணா,நான், மகேஷ் மூணு பேரும் காலைல வாக்கிங் போகாம விட்டதால, அந்த பாதைலயே வாக்கிங முடிச்சிட்டோம் எனபது வரலாற்றில் பதிய வேண்டிய ஒன்று.( மகேஷ், நாம ஹால் தேடின சீக்ரட்ட நீங்க யாருக்கும் சொல்லிடலைதானே?)

வாக்கிங் முடிக்கவும் ஆனந்தி,கோதை அக்கா,மஞ்சு,ஆரூரன் அண்ணா,முத்தரசு சார் இன்னும் எல்லாம் வந்து சேரவும் பேசிப பேசி பறந்த நொடிகள் அவை.

ஹாலில் சற்றுநேர அளவளாவல்.

கதிர் அண்ணா, "ராஜி, ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பிச்சுரு. இந்தா"

"ஐய்ய்.காசு, எனக்காங்ண்ணா,தேங்க்யூ,தேங்க்யூ"

ம். மீதி குடு.

ஓ.ரிஜிஸ்ட்ரேஷன் அமௌணட்டா.ச்சே. வட போச்சே.சேஞ்ச் வரட்டுங்ண்ணா.கொஞ்ச நேரத்துல தர்றேன்

"பிரவீ, வா , ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பிக்கலாம்."

ஆரம்பிச்சாச்சு.காத்திருந்த தருணம்.

0 comments: