அந்த கலெக்டர் பங்களா என்ன விலை?

Tuesday, February 5, 2019
புதியதாக ஒரு வீட்டுக்கு குடி புகும் வேளை. இரண்டு நாட்களாக அலைச்சலோ அலைச்சல். அதை எடு, இது வேணாம், ஏய்.. கீழ போட்டுராத, போச்சா.. என்னும் குரல்கள் சூழ்ந்தும் ,அது எங்க தாத்தாக்கு தாத்தாவோட கடிகாரம் தெரியுமா... ஓ... ஒடைஞ்சது பழசுதானா..நான் கூட புதுசோனு பயந்துட்டேன்...எனச் சில வடிவேல்களிடம்  ராதாரவியாய் சிக்கித் திணறியும் எல்லாம் முடித்து... ஒரு வழியாய் அயர்ந்தெழுந்த அதிகாலை..

சூடா ஒரு கப் டீ கிடைக்குமா என நாக்கும் மனமும் கெஞ்சித் தவித்ததால் பால் வாங்க கால்கள் நடை போட்டன. வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கண்ணில் பட்டது அந்த நேரத்தில் இளநீர் கடை.... இது போல அதிகாலை மங்கொளியில் இளநீரை எப்போவாவது பார்த்திருக்கிறோமா என நினைவுப் பெட்டகத்தின் அடுக்குகளில் தேடியதில் வெறுமையே மிஞ்சியது. அக்கணத்தை கேமராவில் சுமந்து அடுத்த அடியை எடுத்து வைத்தேன்.

பால் கடையை நெருங்கும் சமயம் , ஆவி பறந்து கொண்டிருந்தது. "என்னது அது.. ஒருவேளை பால் பூத்ல தீ பிடிச்சுருச்சா? " ச்சே.. காலங்காத்தால நல்ல நாளும் அதுவுமா புத்தி போகுது பாரு  என தலையிலடித்துக் கொண்டு, வலிக்காம மெதுவாத்தான், கடையை அடைந்ததும் தெரிந்தது பால் கடையின் ஒரு பகுதியான டீ கடை..

பால் நழுவி டிகாக்ஷனில் விழுந்தது மாதிரியான சூழலில், டீ யைவே குடிச்சிட்டா என்ன? டீ கடைலயா?!, ரோட்ல நின்னா!?... சுத்தியும் குடி மகன்கள் இருப்பதாக காற்று வேறு அறிவிக்கிறதே?!..இத்தனை கேள்விகளையும் வென்றது நாசியில் நுழைந்த அதிகாலைத் தேநீரின் மனம்.
"ஒரு டீ போடுங்க;அப்படியே அரை லிட்டர் பால் குடுங்க"
தேநீர் கைக்கு வந்தது.


 அந்த ச்ச்சிலீர் குளிரில் அவசரமாக ஓடும் பள்ளிக் குழந்தைகளையும், அதைவிட அவசரமாக நடைபயிலும் வளர்ந்த குழந்தைகளான முதியோரையும், ஆங்காங்கே விரையும் வாகனங்களையும் பார்த்த தருணம் மனதில் மகாராணியாய் முடிசூட்டிக்கொண்டு பேச விரும்பியது " ஏம்ப்பா... யாராவது இந்த ஈரோடு என்ன வெலைனு கேளுங்க.. வாங்கிப் போட்ருவோம் கெடக்கட்டும்..ஆமாமா.... அந்த கலெக்டர் பங்களாவும் சேர்த்திதான்"



வரலாறு முக்கியம் தோழீஸ்

Tuesday, January 29, 2019
"ஹேய்ய்.. விடிஞ்சிடுச்சு.சீக்கிரம் ரெடியாகு.அந்த வேலை இந்த வேலைனு,லேட் பண்ணாம ரெண்டு டப்பா பவுடர எடுத்துகொட்டிட்டு சீக்கிரம் கிளம்பு".

"அடிப்பாவி.மணியப் பாரு. இபபோவே இப்படி பறந்துட்டு  அப்புறம் கெளம்பறப்ப அத மறந்துட்டேன் இத மறநதுட்டேன்னு லேட் பண்ணு. அப்புறம் கவனிச்சுக்கறேன உன்னைய."

"நான் அப்படி என்ன மறந்தேன். என்னை திட்டறதே உனக்கு வேலையா போச்சு"

" மாரத்தான்க்கு ஷூ மறந்த கதைலாம் பேச வைக்காதே"

சரி.விடு விடு..சமாதானமா போயிடலாம்.சீக்கிரம் கிளம்பிட்டு கூப்டு.

இந்தளவுக்கு என்னை டேமேஜ் பண்ற ஆளு பிரவீணாதான்னு நான் சொல்ல வேண்டியதில்லை
இநத வாட்ஸ்அப் உரையாடல் நிகழ்ந்த நேரம் 3.15 AM.

எதோ அதிகாலைல நடக்கப் போற நிகழ்வுக்கு கிளம்பறோம்னு நினைக்கறீங்களா?

9.30க்கு தொடங்கப்போற ஈரோடு வாசல் ஆண்டுவிழாக்குதான் இத்தனை ஆர்வம்.

முதல் நாளே லதா  "எல்லாருக்கும் முன்னாடி போறோம். ஹால் சரியா பூட்டறாங்களா" னு செக் பண்ணிட்டுதான் வரோம்.எல்லாரும் ஒணணாவே போயிடலாம்"

யசோதா அக்கா " ராஜி . என் கூட வர்றியா? வேற யார் வர்றா?"

 அக்கா! ஒரு 8.30க்கு கிளம்பலாமா?

சரிடா.வீட்ல ஏதும் முக்கியவேலை இல்லைனா கிளம்பிடலாம்.இல்லை நீ முன்னாடி போறதுன்னா போ. நான் 9 மணிக்கெல்லாம் வந்தர்றேன்.

கோதை அக்கா கிளம்பின கதைலாம் வெளிய சொல்லக் கூடாதுனு மிரட்டிட்டதால அவங்க சொன்னது எதையும் நானு இங்க சொல்லமாட்டேன்.

மணி 8.30
 "வீட்டுவாசலில் ஹார்ன் சத்தம்.வாடி சீக்கிரம்" இது பிரவீணா.

இதுக்கு முன்னாடி  "என் ஹேர்கட் னால நான சீக்கிரம் ரெடி"ன்னு பெருமையடிச்சு கான்ப்ரன்ஸ் காலில் தோழிகள் எல்லாரும் கழுவி
ஊத்தினதெல்லாம் இஙக வேணாம். டோட்டல் டேமேஜ் ஆயிடும்.

போனில் லதாவிடம் "லதா, இஙகருந்து ஹால் பக்கம்தான.நாங்க ரெண்டு பேரும் இப்படியே வந்துர்றோம்"
வீட்டில இருங்க சேர்ந்து போலாம்னு சொல்லி லதாவை காத்திருக்க சொல்லிட்டு, ஹாலுக்கு போகும் பாதையை பார்த்ததும் வண்டி லெப்ட் திரும்பிடுச்சு.
இடையில் சரிதா சீக்கிரம் போகணும்னு தவியா தவிச்ச கதைலாம் எழுதினா சிந்துபாத் கதையளவு நீளும்

பிரவீ . சீக்கிரம் கிளம்பிட்டோம்ல. இபபோவே அங்க போயி என்ன பண்றது?

இப்போ என்ன?, காபி குடிக்கணும்.அதான. நுழைஞ்சுருவோம்.

நுழைஞ்சு காபி கடைக்காரருக்கு காபி போட டிரைனிங் குடுத்துட்டு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஹால் பக்கத்துல போயி சடன் பிரேக் போட, ரெண்டு பக்கமிருந்தும் ரெண்டு கார்கள் அதே போல பிரேக்,பிரேக்

ஒரு கார் கதிர் அண்ணா, இன்னொரு கார் மகேஸ்வரி,மதன்.

ஈரோட்டின் எல்லாப் பகுதிகளையும் மாதிரியே தான் அங்கயும்.அதாங்க போற வழிய மறிச்சு, குழிபறிச்சு.....blah,blah.
கதிர் அண்ணா வாழ்க்கைல வழிகாட்டற மாதிரி அங்கயும் பாதை அமைச்சு குடுக்க..அதில் நாங்க கடக்க...


பிரவீணா,நான், மகேஷ் மூணு பேரும் காலைல வாக்கிங் போகாம விட்டதால, அந்த பாதைலயே வாக்கிங முடிச்சிட்டோம் எனபது வரலாற்றில் பதிய வேண்டிய ஒன்று.( மகேஷ், நாம ஹால் தேடின சீக்ரட்ட நீங்க யாருக்கும் சொல்லிடலைதானே?)

வாக்கிங் முடிக்கவும் ஆனந்தி,கோதை அக்கா,மஞ்சு,ஆரூரன் அண்ணா,முத்தரசு சார் இன்னும் எல்லாம் வந்து சேரவும் பேசிப பேசி பறந்த நொடிகள் அவை.

ஹாலில் சற்றுநேர அளவளாவல்.

கதிர் அண்ணா, "ராஜி, ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பிச்சுரு. இந்தா"

"ஐய்ய்.காசு, எனக்காங்ண்ணா,தேங்க்யூ,தேங்க்யூ"

ம். மீதி குடு.

ஓ.ரிஜிஸ்ட்ரேஷன் அமௌணட்டா.ச்சே. வட போச்சே.சேஞ்ச் வரட்டுங்ண்ணா.கொஞ்ச நேரத்துல தர்றேன்

"பிரவீ, வா , ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பிக்கலாம்."

ஆரம்பிச்சாச்சு.காத்திருந்த தருணம்.

வைரக்கல் வாழ்க்கை

Saturday, January 12, 2019
காலம் அதன்போக்கில் வைரக்கற்களையும், கண்ணாடிக் கற்களையும் கலந்தே நம் கைகளில் கொடுக்கிறது. முதலிலேயே வைரக் கற்களை கண்டறிபவர்கள் அந்த ஒரு கல்லிலேயே திருப்தியாகி சுலபமான வாழ்க்கையை கைக்கொள்கிறார்கள். வைரத்துக்கு முன் கண்ணாடிக் கற்கள் கைகளில் சிக்குமாயின்,நம கையில் இருக்கும் மற்ற அனைத்தும் அப்படித்தான் இருக்கும் எனச் சோர்ந்து போகிறோம். கண்ணாடிக் கற்களாகவே இருந்தாலும் அதனை கைவினைப் பொருட்களால் அழகாக்காலாமே என்னும நேர்மறைச் சிநதனை கொண்டவரகளே கைகளில் மீதமிருக்கும் அனைத்து வைரங்களையும் கண்டறிந்து வெற்றியாளரகளாகப் பரிமளிக்கிறார்கள்.

ஓடி முடிதத காலத்தின் பாதையில் திரும்ப பயணிககவோ, சிதறவிட்ட வைரஙகளைப் பொறுக்கி எடுக்கவோ முடியாது. அதனால் என்ன, ஓடும்  நொடி முள் இன்னும் தன் ஓட்டத்தை நிறுத்திவிடவில்லை.
இப்போது நினைத்தாலும் அதனைத் துரத்தலாம்....
எட்டலாம்....ஏன்? அதனை மிஞ்சியும் ஓடத் துவங்கலாம்....