ஓடுங்க எல்லாரும்...பிளாஸ்டிக் வருது

Saturday, February 13, 2010
இன்றைய உலகம் கணினிச் சாதனங்களால் நிறைந்து நம் எழுத்துத் தேவைகளைப் பண்மடங்காகக் குறைத்திருக்கிறது எனினும் எழுத்தின் தேவைகளை முழுவதுமாக மறைத்துவிடவில்லை.எழுது பொருட்களில் பலப் பல புதிய தயாரிப்புகள் வந்துவிட்டன. சில வருடங்களுக்கு முன் வரை இங்க் நிரப்பி எழுதும் பேனாக்களே பெரும்பாலும் பயன்படுத்த‌ப்பட்டன.ஒவ்வொரு இங்க் பேனாவும்,குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது பயன்படுத்தப்பட்டது.பள்ளி நாட்களின் இங்க் பேனாக்கள் பெரிய செண்டிமெண்ட் விஷயமாகவும் இருந்தன.இந்தப் பேனா ராசியானது என்னும் எண்ணமோ அல்லது சற்று அதிகமாக இருந்த அதன் விலையோ பேனாவை பத்திரமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடையே விதைத்திருந்தன.இப்போது காலப் போக்கில் காணாமல் போகக் கூடிய பொருட்களில் இங்க் பேனாக்களும் சேர்ந்துவிட்டன‌.

இப்போது 2ரூபாய்க்கும்,3 ரூபாய்க்கும் கூட பால்பாயிண்ட் பேனாக்கள் இதற்கான ஒரு காரணமாகி விட்டது.சிறு பிள்ளைகளும் பால்பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.இது பேனாக்களின் மீதான ஒரு அக்கறையின்மையை நம்மிடையே விதைத்திருக்கிறது.

அதிகம் எழுதும் கல்வித் துறையிலிருப்போர், சில நேரங்களில் ஓரிரு நாட்களிலேயே ஒரு பால்பாயிண்ட் பேனாவை உபயோகப்படுத்தி தீர்த்துவிடுகிறோம்.அந்தப் பேனா தீர்ந்தபின், அதைத் தூக்கிப்போட்டு விட்டு புதியதொரு பால்பாயிண்ட் பேனாவைத் தேடுகிறோம்.

எந்த வகைப் பேனாவும் பிளாஸ்டிக் பொருட்களாலேயே தயாரிக்கப் படுகின்றது. நாம் பயன்படுத்தித் தூக்கி எறியும் பேனாக்களும் பிளாஸ்டிக் கழிவுகள்தானே.

பென்சில்களிலும் மைக்ரோடிப் பென்சில்கள் என்பவை பிளாஸ்டிக்கினாலான மேல்புறத்தையே கொண்டிருக்கின்றன.அவற்றின் அழகான மேல்புற டிசைன்கள், நம்மை சாதாரணப் பென்சில்களின் பக்கம் போகவே விடுவதில்லை.அதைப் பற்றி என்றேனும் யோசிக்கிறோமா?


லட்சக்கணக்கானோர் உள்ளடங்கிய கல்வித்துறையில் பயன்படுத்தி கழிக்கப்படும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மலைக்கும் அளவிளேயே இருக்கிறது.

அதனால் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க,இங்க் பேனாக்களைப் பயன்படுத்துவோம்.ஜெல் மற்றும் பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தினாலும், அதன் ரீபில்களை மட்டும் மாற்றி மீண்டும் பயன்படுத்த முயல்வோம்.

பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்போம்.சுற்றுப்புறத்தைக் காப்போம்.

.

39 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்அ ஆச்சு? நேத்து கையேந்தி பவன் பார்சல் வாங்கரப்போ பிளாஸ்டிக் கவர் தீர்ந்து போச்சா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

///ஒவ்வொரு இங்க் பேனாவும்,குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது பயன்படுத்தப்பட்டது//

அதாவது அப்பப்போ இங்க் நிறப்பி எழுதும் போது தானே??

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அதிகம் எழுதும் கல்வித் துறையிலிருப்போர், சில நேரங்களில் ஓரிரு நாட்களிலேயே ஒரு பால்பாயிண்ட் பேனாவை உபயோகப்படுத்தி தீர்த்துவிடுகிறோம்//

என்னங்க இது? உங்க கிட்ட படிக்கிற பசங்க அம்புட்டு புத்திசாலிகளா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல பகிர்வு இயற்கை.. கண்டீப்பாக எல்லோரும் இதை மனதில் கொள்ள வேண்டும்..அப்பாடா ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டாச்சு !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

அய்யயோ ஒண்ண மறந்துட்டேன்...
.
.
.
.
.
.
.

மீ த பஸ்டேய்
செகண்டேய்
தேர்டேய்

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா புதுசு புதுசா யோசிக்கிறீங்களே :)

இன்ங் பேனாவெல்லாம் இப்ப உபயோகப்படுத்த முடியுமா என்ன? பயன்படுத்த ஆசை தான். இன்ங் பாட்டில், ஃபில்லர்ன்னு நினைச்சாலே கடியா இருக்கே.

பட் உங்க ரீபில் மாத்துற ஐடியாவை ஃபாலோ செய்யலாம் :)

ஒரு ஆசிரியராக மிக நல்ல பதிவு. உங்கள் மாணவர்கள் கண்டிப்பாக புத்திசாலிகளாக தான் இருப்பார்கள்

நட்புடன் ஜமால் said...

நல்ல விழிப்புணர்வு தான்.

Unknown said...

//பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்போம்.சுற்றுப்புறத்தைக் காப்போம்.// நல்ல பதிவு இனி பேனாவை மாற்ற வேண்டியது தான்

கார்த்திகைப் பாண்டியன் said...

நியாயமான சிந்தனை என்றாலும் நடைமுறையில் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.. சரி.. நம்மால் இயப்ன்ற அளவு நடைமுறைப்படுத்த பார்ப்போம்..

ஈரோடு கதிர் said...

நல்ல எண்ணத்தோடு படைத்த இடுகைக்கு தலைவணங்குகிறேன் சகோதரி

கானா பிரபா said...

இயற்கை மேல் இம்புட்டுப் பிரியமா பாஸ்,

Anonymous said...

Go green with ink pen :-))

Thamiz Priyan said...

நல்ல எண்ணம்!.. :-)

ஆயில்யன் said...

//ஒவ்வொரு இங்க் பேனாவும்,குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது பயன்படுத்தப்பட்டது.பள்ளி நாட்களின் இங்க் பேனாக்கள் பெரிய செண்டிமெண்ட் விஷயமாகவும் இருந்தன.இந்தப் பேனா ராசியானது என்னும் எண்ணமோ அல்லது சற்று அதிகமாக இருந்த அதன் விலையோ பேனாவை பத்திரமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடையே விதைத்திருந்தன.///


ஹீரோ பேனாவை மறக்கத்தான் முடியுமா?

//லட்சக்கணக்கானோர் உள்ளடங்கிய கல்வித்துறையில் பயன்படுத்தி கழிக்கப்படும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மலைக்கும் அளவிளேயே இருக்கிறது.// உண்மை நம்மால் முடிந்தளவு ப்ளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்கவேண்டும்!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

gayathri said...

நல்ல எண்ணம்!..

மாதேவி said...

பேனா சிரமமான விடயம்தான் முயற்சிப்போம்.

நாமக்கல் சிபி said...

மை பேனாவில எழுதுறதும் ஒரு சுகம்தான்! ஆனா லீக் ஆகி கை,சட்டைலயெல்லாம் மசியாகுமே!

:(

cheena (சீனா) said...

அக்கால கட்டத்தில் இங்க் பேனா பயன்படுத்தும் சுகமே தனி - கசியும் பேனாக்கள் - சட்டைப்பையை நீலமாக மாற்றும் - கை எல்லாம் நீலம் - அதுவே சுகம் - இங்க் ஃபில்லர் - அவசரத்துக்கு அப்படியே சாய்ப்பது - அய்யோ - நிப்பில் பிளேடால் கீறி விடுவது - ஆகா ஆகா அச்சுகம் இப்போ எங்கே

சரி சரி பிளாஸ்டிக் ஒழிப்போம்

வெண்பூ said...

பேனா நல்ல விசயம்.. இங்க் பேனாவை தற்போது நாங்கள் பால்பாய்ன்ட் பேனாவை உபயோகிப்பதுபோல் ஸ்கிர்பிள்ளிங்கிற்கு உபயோகப்படுத்த முடியாது. பள்ளிகளில் குழந்தைகள் கண்டிப்பாக இங்க் பேனா மட்டுமே உபயோகப்படுத்த கட்டாயப்படுத்தலாம்.

கேம்லின் பேனா, செல்பாக் இங்க்... ம்ம்ம்ம்... எங்களை அப்படியே கடந்த காலத்துக்கே கூட்டிட்டு போயிட்டீங்க.. :))

*இயற்கை ராஜி* said...

வாங்க குறை ஒன்றும் இல்லை. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

*இயற்கை ராஜி* said...

//பட் உங்க ரீபில் மாத்துற ஐடியாவை ஃபாலோ செய்யலாம் :)
//

வாங்க ஆதவன் ... ரீபில்கள் சாதாரணமாகக் கிடைப்பதில்லை.. ரீபில் தேடுவதற்கு பதிலாக இங்க் பேனா பயன்படுத்துவதே எளிதாகத் தோன்றுகிறது

*இயற்கை ராஜி* said...

வாங்க ஜமால் அண்ணா.. இது எத்தனை பேருக்கு இயலும் என்பது கேள்விக்குறியே

*இயற்கை ராஜி* said...

மிக நல்லது சிநேகிதி. முயலுங்கள்.. வருகைக்கு நன்றி

*இயற்கை ராஜி* said...

@கார்த்திகைப் பாண்டியன்வாங்க தோழா . நடைமுறையில் ரொம்பவே கடினமாக இருக்கிறது.

அதற்காகவே நான் என் நெருங்கிய தோழியை ஒரு பேனா வாங்கித் த்ர சொல்லி,அதை வைத்திருக்கிறேன். செண்டிமெண்டாக‌ இருப்பதால் அதை மட்டுமே பயன்படுத்துவது சற்று எளிதாகி விட்டது:‍))

*இயற்கை ராஜி* said...

@ஈரோடு கதிர்

நன்றி சகோதரா:-)

*இயற்கை ராஜி* said...

//கானா பிரபா said...
இயற்கை மேல் இம்புட்டுப் பிரியமா பாஸ்,
//

இல்லாம எப்படி பாஸ்:-))

*இயற்கை ராஜி* said...

Welcome punitha...:-)

*இயற்கை ராஜி* said...

@தமிழ்பிரியன்..

நன்றிங்க

*இயற்கை ராஜி* said...

@ஆயில்யன்
//
ஹீரோ பேனாவை மறக்கத்தான் முடியுமா?
//

ஆமாம் பாஸ். மறக்க முடியாது. அப்படிப்பட்ட ஹீரோ பேனாவை பயன்படுத்துவது கூட கஷ்டமான விஷயமாயிருச்சி

*இயற்கை ராஜி* said...

மிக்க நன்றி...@அன்புடன் அருணா

*இயற்கை ராஜி* said...

thanks gayathri

*இயற்கை ராஜி* said...

முயலுங்கள் மாதேவி. பழகிவிட்டால் சிரமம் குறைந்து விடும்

*இயற்கை ராஜி* said...

@நாமக்கல் சிபி

சற்று கவனமாகப் பராமரித்தால் இதிலிருந்து தப்பிக்கலாமே

*இயற்கை ராஜி* said...

வாங்க சீனா ஐயா.. நன்றி

*இயற்கை ராஜி* said...

பால் பாயிண்ட் பேனாக்களையும் அப்படியே தூக்கிப் போடுவதற்கு பதிலாக ரீபில் மாத்த முயலலாமே.. வருகைக்கு நன்றிங்க வெண்பூ

கண்மணி/kanmani said...

//அக்கால கட்டத்தில் இங்க் பேனா பயன்படுத்தும் சுகமே தனி - கசியும் பேனாக்கள் - சட்டைப்பையை நீலமாக மாற்றும் - கை எல்லாம் நீலம் - அதுவே சுகம் - இங்க் ஃபில்லர் - அவசரத்துக்கு அப்படியே சாய்ப்பது - அய்யோ - நிப்பில் பிளேடால் கீறி விடுவது - ஆகா ஆகா அச்சுகம் இப்போ எங்கே//

இங்க் தீர்ந்து போயிட்டா பிரண்டு பேனாவிலிருந்து கொஞ்சம் ஊத்திப்போம்.ஹீரோ வந்த பிறகு அது முடியலை.

பள்ளிகளில் ஆரம்பத்தில் இங்க் பேனா கட்டாயப் படித்தினாலும் பொதுத் தேர்வில் இல்லை.மேலும் துரிதமாக எழுத ஜெல் தான் சரி.

ஆனால் யூஸ் அண்ட் த்ரோவாக இல்லாமல் நீண்டநாள் பயன்படுத்தும்படி இருக்கனும்.

ஹூம் இதைவிட வேறு வடிவங்களில் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகம் இருக்கே

அண்ணாமலையான் said...

gud post .... congrats

Raghu said...

ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்தான் சொல்லியிருக்கீங்க‌, ஆனா ந‌டைமுறையில‌ எவ்வ‌ளோ சாத்திய‌ம்னு சொல்ல‌முடிய‌ல‌ங்க‌:(