புதிர்கள்

Saturday, February 27, 2010
எனக்கும் யாரையாச்சும் கேள்வி கேக்கணும்ன்னு ஆசை வந்திருச்சி.உங்களையெல்லாம் விட்டா நான் வேற யாரைக் கேக்கமுடியும்? அதனால நானும் புதிர் கேள்விகள் கேட்டுட்டேன். பதில் சொல்லுங்க மக்களே

1.ஒரு நேர்முகத் தேர்வு. '''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர். 'கோழியில் இருந்து முட்டைவந் ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கஷ்டமான கேள்வி. அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழிவந் தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல் றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு அந்த மாணவர் பதில் சொன்னவுடன் செலக்ட் செய்யப்பட்டார். அவரது பதில் என்னவாக இருந்திருக்கக் கூடும்?

2.'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?

3.அது ஒரு பிரமாண்ட பாலம். ஆனால், 25 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஒரு கிராம்கூட அதிகப் பாரத்தைத் தாங்காது. மிகச் சரியாக 25 ஆயிரம் கிலோ எடையுள்ள ஒரு சரக்கு லாரி வேகமாக பாலத்தின் மையப்பகுதியில் போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய பறவை பறந்துவந்து லாரியில் அமர்கிறது. பறவையின் எடை 25 கிராம். ஆனால், பாலம் உடையவில்லை. எப்படி?

4.ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கு ஒன்று எனச் சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. ஆனாலும், கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

5.அது ஒரு ராயல் கேஸினோ கிளப். உள்ளே கோடிகளில்தான் சூதாட்டம் நடக்கும். அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாஸ்வேர்டு உண்டு. அதைச் சொன்னால்தான், உள்ளேயே விடுவார்கள். அதற்குள் போக ஆசைப்படுகிறார் ஹீரோ. ஆனால், அவரிடம் பாஸ்வேர்டு இல்லை. கேஸினோவின் வாசலில் ஒளிந்திருந்து கவனிக்கிறார். அப்போது ஒரு நபர் வருகிறார். அவரிடம் வாட்ச்மேன், '12' என்கிறார். உடனே வந்தவர், '6' என்று திரும்பச் சொல்ல, உள்ளே போக அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அதேபோல அடுத்து வந்தவரிடம் வாட்ச்மேன், '6' என்றதும், வந்தவர் '3' என்கிறார். அவரும் உள்ளே போய்விடுகிறார். இதை ஒளிந்திருந்து கவனித்த ஹீரோ, 'இவ்ளோதானா மேட்டர்?' என்று ஸ்டைலாக வாட்ச்மேன் முன்னால் போய் நிற்கிறார். அவர், '20' என்கிறார். நம்ம ஹீரோ, '10' என்கிறார் பெருமையாக. ஹீரோவுக்குத் தர்ம அடி விழுகிறது. ஏன், என்ன தப்பு?

.

43 comments:

Anonymous said...

1. Agreement is only oNE difficult question. That has been asked!

2. No trees, no river, no hill---means no forest!

3. The truck has used the diesel weight equivalent to birds weight.

4. The last guy got the apple with the basket.

5.password is same as number of letters. for twenty password is 6.

thyagarajan

T.V.ராதாகிருஷ்ணன் said...

விடையை எழுதி உங்க கிட்ட கொடுக்கணுமா டீச்சர்

நட்புடன் ஜமால் said...

ஒரு கஷ்டமான கேள்வி தானே கேக்கனும் ஏன் 5

sriram said...

எல்லாமே ரொம்ப பழசு தலைவரே
1. உங்களோட ஒரு கேள்வி முடிஞ்சி போச்சு

2.மரம், ஆறு, மலை இல்லாமல் ஒரு காடு இருக்க முடியாது

3. 25 கிராம் பெட்ரோல் செலவாகி இருக்கும்

4. ஒருத்தர் மட்டும் கூடையோடு எடுத்துக் கொண்டார்

5. Twelve - ஆறு எழுத்து, Ten மூன்று எழுத்து, அதுபோல Twenty - ஆறு எழுத்து

☀நான் ஆதவன்☀ said...

மறுபடியுமா??

☀நான் ஆதவன்☀ said...

ஆகா.... மாட்ரேசன் வேற போட்டாச்சா :)

எனக்கு முதல் கேள்விக்கு மட்டும் பதில் தெரியும். அது கூட ஒரு புத்திசாலி நண்பர் சொல்லிக்கொடுத்தது. :))

மற்றவை எதுவும் தெரியாது :(

☀நான் ஆதவன்☀ said...

ஆகா.... மாட்ரேசன் வேற போட்டாச்சா :)

எனக்கு முதல் கேள்விக்கு மட்டும் பதில் தெரியும். அது கூட ஒரு புத்திசாலி நண்பர் சொல்லிக்கொடுத்தது. :))

மற்றவை எதுவும் தெரியாது :(

Prapa said...

எனக்கு எல்லா புதிர்களுக்கும் விடை தெரியும் ... ஆனால் அடுத்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையில் விடைகளை சொல்லவில்லை... ஹா ஹா..

பிரேமா மகள் said...

கேள்வி கேட்க தெரிந்த உங்களுக்கு பதிலும் தெரியும்தானே.. சொல்லிவிடுங்கள்...

அன்புடன் அருணா said...

என்னாது????ஆனந்தவிகடன்லே வந்துச்சே!

Rajalakshmi Pakkirisamy said...

Already we have received this Q&A
:(((((((((((((((((

ஆயில்யன் said...

//பிரேமா மகள் said...

கேள்வி கேட்க தெரிந்த உங்களுக்கு பதிலும் தெரியும்தானே.. சொல்லிவிடுங்கள்...///

இவுங்களோட இந்த டோட்டலி டிபரெண்ட் அப்ரோச் நல்லா இருக்கு பாஸ்! :))

அப்படியே செஞ்சுடுங்க பதில் தெரியும்தானே!

அகல்விளக்கு said...

1.சிக்கன் பிரியாணில முட்டை இருக்கும் ஆனா... முட்டை பிரியாணில சிக்கன் இருக்காது...

சோ... முட்டைதான் பர்ஸ்ட்

2. அவரு சொன்ன மூணும் இல்லைன்னா அங்க சிங்கமும் இருக்காது...

3.அது தாங்காது. ஆனா உடையாதுன்னு சொல்லலியெ..
(ச்ச்சும்மா ஒரு கெஸ்சு)..

4.அவருக்கு கூடைலயே வச்சு கொடுத்துட்டா போச்சு...

5. சத்தியமா.........
தெரியலிங்க....

:-)

Unknown said...

1. ஒரு கேள்வி தான கேப்பேன்னு சொன்னீங்க..

2. மரமே இல்லைன்னா என்னாங்க அது காடு?

3. தெரியலைங்க.. ஒரு வேளை வேகமாப் போகும்போது எடை குறையுமோ?

4. கூடையோட குடுத்துட்ட்டாங்களா?

5. இதுக்கும் நான் ஜூட்டு விட்டுக்குறேன்..

சத்தியமா கமெண்ட் எதுவும் பாக்காம எழுதியிருக்கேன்.

சுசி said...

ப்ரஸண்ட் டீச்சர்..

Subha said...

:) Raji..ingayuma teacher velai?

விக்னேஷ்வரி said...

டீச்சரம்மா.... என்ன இது கொடுமை... இங்கேயுமா...

Anonymous said...

எல்லாரும் விடையை சொல்லிட்டாங்களே !!!

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

Thenammai Lakshmanan said...

எனக்கு முன்னாடி இவ்வளவு பேர் க்யூ கட்டி பதில் சொல்லிட்டாங்களே இயற்கை

க.பாலாசி said...

அதுக்குத்தான் பொறுமையா நிதானமா கமெண்ட் போடணும்... இப்ப எல்லாரும் சொல்லிட்டாங்களே....

*இயற்கை ராஜி* said...

தங்கள் பதில்கள் சரி..வாழ்த்துக்கள் தியாகராஜன்

*இயற்கை ராஜி* said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...
விடையை எழுதி உங்க கிட்ட கொடுக்கணுமா டீச்சர்
//

ஆமாங்க.. பதிலோட சேர்த்து ஒரு பிளாங்க் செக்கும் குடுத்தா தேவலை:-)

*இயற்கை ராஜி* said...
This comment has been removed by the author.
*இயற்கை ராஜி* said...

//நட்புடன் ஜமால் said...
ஒரு கஷ்டமான கேள்வி தானே கேக்கனும் ஏன் 5
//

கஷ்டமான கேள்வினாதான் ஒண்ணு.. ஈசின்னா 5:-)

*இயற்கை ராஜி* said...

sriram said...
எல்லாமே ரொம்ப பழசு தலைவரே
1. உங்களோட ஒரு கேள்வி முடிஞ்சி போச்சு

2.மரம், ஆறு, மலை இல்லாமல் ஒரு காடு இருக்க முடியாது

3. 25 கிராம் பெட்ரோல் செலவாகி இருக்கும்

4. ஒருத்தர் மட்டும் கூடையோடு எடுத்துக் கொண்டார்

5. Twelve - ஆறு எழுத்து, Ten மூன்று எழுத்து, அதுபோல Twenty - ஆறு எழுத்து
//



வாங்க ... பதில்களுக்கு வாழ்த்தும் நன்றியும்..

பழசுதாங்க.. ஒரு மறு நினைவூட்டல் மாதிரி இருக்கட்டுமேன்னு தான்...




(ஸ்ஸ்ஸப்ப்பா.. எப்பிடிலாம் சமாளிக்க வேண்டி இருக்கு)

*இயற்கை ராஜி* said...

//☀நான் ஆதவன்☀ said...
ஆகா.... மாட்ரேசன் வேற போட்டாச்சா :)

எனக்கு முதல் கேள்விக்கு மட்டும் பதில் தெரியும். அது கூட ஒரு புத்திசாலி நண்பர் சொல்லிக்கொடுத்தது. :))

மற்றவை எதுவும் தெரியாது :(

//


அந்த புத்திசாலி நண்பர் எல்லாக்கேள்விக்கும்தான் பதில் சொன்னாராம்..அதுக்குள்ள மறந்தாச்சான்னு கேக்கறார்?;-)

*இயற்கை ராஜி* said...

//பிரபா said...
எனக்கு எல்லா புதிர்களுக்கும் விடை தெரியும் ... ஆனால் அடுத்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையில் விடைகளை சொல்லவில்லை... ஹா ஹா..
//

இதுக்குப் பேர்தான் சமாளிபிகேஷனா.. பிரபா?:-)

*இயற்கை ராஜி* said...

/ பிரேமா மகள் said...
கேள்வி கேட்க தெரிந்த உங்களுக்கு பதிலும் தெரியும்தானே.. சொல்லிவிடுங்கள்.../

சரிங்க.. சொல்லிடறேன்.. வருகைக்கு நன்றி

*இயற்கை ராஜி* said...

/அன்புடன் அருணா said...
என்னாது????ஆனந்தவிகடன்லே வந்துச்சே!/

அக்காஆஆஆஆ.. கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளில சொல்லக் கூடாது:‍))

*இயற்கை ராஜி* said...

/Rajalakshmi Pakkirisamy said...
Already we have received this Q&A
:(((((((((((((((((/

வாம்மா மின்னலு.... இதுக்கு மட்டும் கரெக்டா ஆஜர் ஆயிடு

*இயற்கை ராஜி* said...

/ஆயில்யன் said...
//பிரேமா மகள் said...

கேள்வி கேட்க தெரிந்த உங்களுக்கு பதிலும் தெரியும்தானே.. சொல்லிவிடுங்கள்...///

இவுங்களோட இந்த டோட்டலி டிபரெண்ட் அப்ரோச் நல்லா இருக்கு பாஸ்! :))

அப்படியே செஞ்சுடுங்க பதில் தெரியும்தானே!/


கேள்வி எங்க இருந்து காபி பண்ணேனோ.. அங்க இருந்தே பதிலும் காபி பண்ணிடறேன் ... ஒகே வா பாஸ் :-)

*இயற்கை ராஜி* said...

/ அகல்விளக்கு said...
1.சிக்கன் பிரியாணில முட்டை இருக்கும் ஆனா... முட்டை பிரியாணில சிக்கன் இருக்காது...

சோ... முட்டைதான் பர்ஸ்ட்

2. அவரு சொன்ன மூணும் இல்லைன்னா அங்க சிங்கமும் இருக்காது...

3.அது தாங்காது. ஆனா உடையாதுன்னு சொல்லலியெ..
(ச்ச்சும்மா ஒரு கெஸ்சு)..

4.அவருக்கு கூடைலயே வச்சு கொடுத்துட்டா போச்சு...

5. சத்தியமா.........
தெரியலிங்க....

:‍)//


கலக்குறீங்க..ம்ம்ம்... நைஸ் பதில்கள்.. ஆனா சரியான்னு தெரிலியே:‍))

*இயற்கை ராஜி* said...

/ முகிலன் said...
1. ஒரு கேள்வி தான கேப்பேன்னு சொன்னீங்க..

2. மரமே இல்லைன்னா என்னாங்க அது காடு?

3. தெரியலைங்க.. ஒரு வேளை வேகமாப் போகும்போது எடை குறையுமோ?

4. கூடையோட குடுத்துட்ட்டாங்களா?

5. இதுக்கும் நான் ஜூட்டு விட்டுக்குறேன்..

சத்தியமா கமெண்ட் எதுவும் பாக்காம எழுதியிருக்கேன்.
//

சரியான பதில்களுக்கு வாழ்த்துக்கள் முகிலன்

*இயற்கை ராஜி* said...

/சுசி said...
ப்ரஸண்ட் டீச்சர்../


பிசிகலி பிரசன்டா? மெண்டலி ஆல்சோவா?:-)

*இயற்கை ராஜி* said...

/ சுபா said...
:) Raji..ingayuma teacher veலை?/


ஹி..ஹி.. ச்ச்ச்ச்சும்மா:-)

*இயற்கை ராஜி* said...

/விக்னேஷ்வரி said...
டீச்சரம்மா.... என்ன இது கொடுமை... இங்கேயுமா.../

விடுங்க..விடுங்க:‍:-)

*இயற்கை ராஜி* said...

/சின்ன அம்மிணி said...
எல்லாரும் விடையை சொல்லிட்டாங்களே !!!/

ஆமாங்க சொல்லிடாங்க:‍)

*இயற்கை ராஜி* said...

@TechShankar @ டெக்‌ஷங்கர் said...
நன்றி.

*இயற்கை ராஜி* said...

@TechShankar @ டெக்‌ஷங்கர்

நன்றி.

*இயற்கை ராஜி* said...

/thenammailakshmanan said...
எனக்கு முன்னாடி இவ்வளவு பேர் க்யூ கட்டி பதில் சொல்லிட்டாங்களே இயற்கை/


ஆமாங்க..சரி.. அடுத்த முறை முன்னாடியே வந்து சொல்லிருங்க‌

*இயற்கை ராஜி* said...

/க.பாலாசி said...
அதுக்குத்தான் பொறுமையா நிதானமா கமெண்ட் போடணும்... இப்ப எல்லாரும் சொல்லிட்டாங்களே..../

ச்சே.. என்னா ஒரு லாஜிக்... வருகைக்கு நன்றிங்க‌:-)

*இயற்கை ராஜி* said...

சரியான பதில்கள்



1. உங்களோட ஒரு கேள்வி முடிஞ்சி போச்சு

2.மரம், ஆறு, மலை இல்லாமல் ஒரு காடு இருக்க முடியாது

3. 25 கிராம் பெட்ரோல் செலவாகி இருக்கும்

4. ஒருத்தர் மட்டும் கூடையோடு எடுத்துக் கொண்டார்

5. Twelve - ஆறு எழுத்து, Ten மூன்று எழுத்து, அதுபோல Twenty - ஆறு எழுத்து