அண்ணா:‍)

Monday, February 15, 2010


காலை நேர அவசரத்தில்
நாம் சண்டை போட்டதில்லை

கூட்டுக் களவாணித் தனங்களில்
மாட்டிக் கொண்டதில்லை

அப்பா பெண்ணாகவும்,அம்மா பையனாகவும்
போட்டி போட்டதில்லை

ஆனாலும் நீ என் அண்ணனானது எக்கணத்தில்?
பால்யங்களில் எனக்காகப் பாலைப்
பகிர்ந்தளித்த அண்ணாய் நீயில்லை

பள்ளி நாட்களில் விரல் பிடித்து கூட்டிப் போன
வழிகாட்டியாய் நீயில்லை

பதின்மங்களில் பசங்களின் விரட்டலுக்குப்
பாதுகாவலனாய் நீயில்லை

வாழ்வின் ஏதோ ஒரு சிறு நாளில்,
திடீர் நட்பாய் நுழைந்தவன் நீ

ஆணிவேரான‌ அண்ணணாய்ப்
பரிணமித்திருக்கிறாய். இது

போன ஜென்ம பந்தமா,
இல்லை பூர்வ ஜென்மப் பாசமா?

.

72 comments:

ஈரோடு கதிர் said...

நெகிழ்ச்சி ராஜி

புனிதா||Punitha said...

superb :-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

:))))))))))

அபி அப்பா said...

என்ன சொல்ல????

அபி அப்பா said...

நாளை சொல்லட்டுமா???

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்..

susi said...

ரொம்ப நெகிழ்வா இருக்கு..

நல்லா எழுதி இருக்கீங்க.

பிரியமுடன்...வசந்த் said...

நல்லா இருக்குங்க டீச்சர்..!

வானம்பாடிகள் said...

கதிரவனின் ஒளி எங்கு எப்படிப் பாயும் என யார் சொல்ல முடியும்?
/போன ஜென்ம பந்தமா,
இல்லை பூர்வ ஜென்மப் பாசமா?/

இந்த ஜென்ம சத்தியம். :).

Anonymous said...

யாரு அந்த அப்பாவி அண்ணன்?

நட்புடன் ஜமால் said...

சந்தோஷம் அண்ணணாய் ... :)

Anonymous said...

சஞ்சய் இங்க வந்து பாரு உன் தங்காச்சி எப்படி அலுவுதுன்னு:)

சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க! :-)

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம்

ஆயில்யன் said...

நல்லா இருக்குங்க இன்னும் நிறைய ஃபீல் பண்ணுங்க !

தமிழ் பிரியன் said...

சூப்பர் அண்ணன்!

நிஜமா நல்லவன் said...

boss...super...yaaru antha appaavi annan???

Kanchana Radhakrishnan said...

நல்லாயிருக்கு ராஜி.

கண்ணகி said...

உங்கள் சொல் அழகா....படங்கள் அழகா...

gayathri said...

nalla iruku da

Anonymous said...

நல்லா இருக்குங்க இன்னும் நிறைய ஃபீல் பண்ணுங்க !//

ஆயில்யன் நல்லா அழுக சொல்றார் போல, சீரியல் எதுவும் எடுக்க போறாரா?

Anonymous said...

நாளை சொல்லட்டுமா???//

அபி அப்பா இன்னைக்கு எண்டர் கீ வேலை செய்யலையா??

Anonymous said...

உங்கள் சொல் அழகா....படங்கள் அழகா//

கண்ணகி சீரியஸா சொல்றீங்களா? சிரிக்க சொல்றீங்களா? :))

Anonymous said...

சந்தோஷம் அண்ணணாய் ... :)//

ஜமால் ஏன் இப்படி சொந்த செலவில் சூனியம்?? :))

நட்புடன் ஜமால் said...

ஜமால் ஏன் இப்படி சொந்த செலவில் சூனியம்?? :))]]

நடு இராத்திரியில் தூக்க கலக்கத்தில் படிச்சி தங்கச்சி நிச்சியமாய் நல்லதா தான் சொல்லியிருக்குமுன்னு நம்பி கமெண்ட் போட்டேன் - அது சொ.செ.சூ வாஆஆஆஆஆ

க.பாலாசி said...

இன்னொரு பாசமலர் கண்டேன்...கவிதையாய்...

Jeeves said...

ஹ்ம்ம்ம்... தெரியலையேம்மா... தெரியலையே

பழமைபேசி said...

நல்ல இடுகைகள்ல இதுவும் ஒன்னு... படிக்கத்தான் கால அவகாசம் கிடைக்குது இல்ல?! ப்ச்!

SanjaiGandhi™ said...

என்ன திடீர்னு அண்ணா பத்தி கவிதை? அவர் வெளியூர்ல நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா? உங்க இம்சை தாங்காம தான எஸ்கேப் ஆய்ட்டார்.. இப்டி தொரத்தி தொரத்தி கவிதை எல்லாம் எழுதினா அந்த அப்பாவி புள்ள தாங்குமா?.. போம்மா.. போய் கல்யாண வேலையைப் பாருங்க..

ஆஹா.. கல்யாணம் வந்ததும் அண்ணனுக்கு ஐஸ் மழையா? வெயிட்டா கவனிப்பார். விடுங்க விடுங்க.. :))

SanjaiGandhi™ said...

// மயில் said...

சஞ்சய் இங்க வந்து பாரு உன் தங்காச்சி எப்படி அலுவுதுன்னு:)//

எனக்கு இப்டி ஒரு தங்கச்சி இருந்தா சின்ன வயசுலையே தலைல கல்ல போட்டிருப்பேன்.. :))

இய‌ற்கை said...

@நன்றி அண்ணா

இய‌ற்கை said...

@புனிதா

Thanks pa:-)

இய‌ற்கை said...

@குறை ஒன்றும் இல்லை

வ‌ருகைக்கு நன்றி

இய‌ற்கை said...

@ அபி அப்பா.. ஏதாவது சொல்லுங்களேன் ப்ளீஸ்:-)

இய‌ற்கை said...

நன்றி மேனகா

இய‌ற்கை said...

நல்லா இருக்குங்களா சுசி.. நன்றிங்க‌

இய‌ற்கை said...

நன்றி வசந்த்

இய‌ற்கை said...

//வானம்பாடிகள் said...
கதிரவனின் ஒளி எங்கு எப்படிப் பாயும் என யார் சொல்ல முடியும்?
/போன ஜென்ம பந்தமா,
இல்லை பூர்வ ஜென்மப் பாசமா?/

இந்த ஜென்ம சத்தியம். :).
//


வருகைக்கு நன்றிங்க ஐயா...

உங்க வார்த்தை விளையாட்டு அருமை

இய‌ற்கை said...

//மயில் said...
யாரு அந்த அப்பாவி அண்ணன்?
//நம்ம வலையுலகில் அண்ணன்களுக்கா பஞ்சம்

இய‌ற்கை said...

//நட்புடன் ஜமால் said...
சந்தோஷம் அண்ணணாய் ... :)
//


மிக்க நன்றி தங்கையாய்:-)

இய‌ற்கை said...

//மயில் said...
சஞ்சய் இங்க வந்து பாரு உன் தங்காச்சி எப்படி அலுவுதுன்னு:)
//

சஞ்சய் என் அண்ணாயிருந்திருந்தா, கொலைவெறிக் கவிதையில்ல எழுதி இருப்பேன்

இய‌ற்கை said...

சந்தனமுல்லை வாங்க.. நன்றி

இய‌ற்கை said...

வாங்க ஆதவன்... என்ன? நல்லாருக்கா... இல்லியா? ம்ம்ம் ன்னா?

இய‌ற்கை said...

//ஆயில்யன் said...
நல்லா இருக்குங்க இன்னும் நிறைய ஃபீல் பண்ணுங்க !
//நன்றி.. ஃபீல் தானே? பண்ணிட்டா போச்சு

இய‌ற்கை said...

//தமிழ் பிரியன் said...
சூப்பர் அண்ணன்!
//

:-))

இய‌ற்கை said...

//தமிழ் பிரியன் said...
சூப்பர் அண்ணன்!
//

என் அண்ணா எல்லாருமே சூப்பர்தான்

இய‌ற்கை said...

//நிஜமா நல்லவன் said...
boss...super...yaaru antha appaavi annan???
//


நீங்களாவும் இருக்கலாம் பாஸ்

இய‌ற்கை said...

//Kanchana Radhakrishnan said...
நல்லாயிருக்கு ராஜி.
//


வாங்க.. வாங்க.. நலமா?
நன்றி

இய‌ற்கை said...

//கண்ணகி said...
உங்கள் சொல் அழகா....படங்கள் அழகா...
//


என் அண்ணாவின் பாசம் அழகு:-)

இய‌ற்கை said...

Thanks Gayathari

இய‌ற்கை said...

மயிலு.. மயிலு...மயிலக்கா...ஏன் இந்தக் கொலைவெறி:-))

இய‌ற்கை said...

//நட்புடன் ஜமால் said...
ஜமால் ஏன் இப்படி சொந்த செலவில் சூனியம்?? :))]]

நடு இராத்திரியில் தூக்க கலக்கத்தில் படிச்சி தங்கச்சி நிச்சியமாய் நல்லதா தான் சொல்லியிருக்குமுன்னு நம்பி கமெண்ட் போட்டேன் - அது சொ.செ.சூ வாஆஆஆஆஆ
//

அதெல்லாம் பொறாமைல பொங்கறாங்க அண்ணா... யு நோ ஃபீல்

இய‌ற்கை said...

@ க.பாலாசி நன்றி..

இய‌ற்கை said...

//Jeeves said...
ஹ்ம்ம்ம்... தெரியலையேம்மா... தெரியலையே
//


ரெண்டும்தான்னு வச்சிக்கலாம் அண்ணா.. விடுங்க‌:-)

இய‌ற்கை said...

//பழமைபேசி said...
நல்ல இடுகைகள்ல இதுவும் ஒன்னு... படிக்கத்தான் கால அவகாசம் கிடைக்குது இல்ல?! ப்ச்!
//


நன்றி... அவகாசம் கிடைக்கும்போது வாங்க‌:-))

இய‌ற்கை said...

@ சஞ்சய். .. அண்ணா கல்யாணம் முடிஞ்சி போச்சி... சாரி.. இன்விடேஷன் அனுப்ப முடில.. டீடெயிலா சாட்ல சொல்றேன்;-))

இய‌ற்கை said...

//SanjaiGandhi™ said...
// மயில் said...

சஞ்சய் இங்க வந்து பாரு உன் தங்காச்சி எப்படி அலுவுதுன்னு:)//

எனக்கு இப்டி ஒரு தங்கச்சி இருந்தா சின்ன வயசுலையே தலைல கல்ல போட்டிருப்பேன்.. :))
//

ரிப்பீட் சஞ்சய்...

நீங்க மட்டும் என் அண்ணானாயிருந்திருந்தா.. நானே என் த‌லைல கல்லைத் தூக்கிப் போட்டுட்டு இருப்பேன்...:-)

Anonymous said...

எனக்கு இப்டி ஒரு தங்கச்சி இருந்தா சின்ன வயசுலையே தலைல கல்ல போட்டிருப்பேன்.. :))//

ரிப்பீட் சஞ்சய்...

நீங்க மட்டும் என் அண்ணானாயிருந்திருந்தா.. நானே என் த‌லைல கல்லைத் தூக்கிப் போட்டுட்டு இருப்பேன்...:-)//

அடடா... வடை போச்சே... நாங்க தப்பிச்சிருப்பமே...

thenammailakshmanan said...

ரொம்ப நல்ல கவிதை இயற்கை அருமையான பகிர்வு

தேவன் மாயம் said...

அண்ணன் என்கிற சொல்லின் அர்த்தத்தை அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்!!!

Mohan said...

கவிதை நல்லாருக்கு!

கவிதை காதலன் said...

அழகான சகோதரத்துவம்.. சந்தோசமான தருணங்கள். நல்ல கவிதை

rohinisiva said...

வாழ்வின் ஏதோ ஒரு சிறு நாளில்,
திடீர் நட்பாய் நுழைந்தவன் நீ-காதல் மட்டும் அல்ல சில சொந்தங்களும் சட்டென மலரும் !அருமை இயற்கை !

பிரபா said...

இதயத்தை பூவால் வருடுகின்ற பதிவு...

இய‌ற்கை said...

மயில் said...
எனக்கு இப்டி ஒரு தங்கச்சி இருந்தா சின்ன வயசுலையே தலைல கல்ல போட்டிருப்பேன்.. :))//

ரிப்பீட் சஞ்சய்...

நீங்க மட்டும் என் அண்ணானாயிருந்திருந்தா.. நானே என் த‌லைல கல்லைத் தூக்கிப் போட்டுட்டு இருப்பேன்...:-)//

அடடா... வடை போச்சே... நாங்க தப்பிச்சிருப்பமே...//


ம்ம்ம்.. மைண்ட்ல‌ வ‌ச்சிக்க‌றேன் ம‌யில‌க்கா:-)

இய‌ற்கை said...

/ thenammailakshmanan said...
ரொம்ப நல்ல கவிதை இயற்கை அருமையான பகிர்வு/

மிக்க‌ ந‌ன்றி

இய‌ற்கை said...

/தேவன் மாயம் said...
அண்ணன் என்கிற சொல்லின் அர்த்தத்தை அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்!!!/

வாங்க‌ டாக‌ட‌ர். ந‌ன்றி

இய‌ற்கை said...

/ Mohan said...
கவிதை நல்லாருக்கு!/

ந‌ன்றி

இய‌ற்கை said...

/கவிதை காதலன் said...
அழகான சகோதரத்துவம்.. சந்தோசமான தருணங்கள். நல்ல கவிதை/

ந‌ன்றி

இய‌ற்கை said...

/ rohinisiva said...
வாழ்வின் ஏதோ ஒரு சிறு நாளில்,
திடீர் நட்பாய் நுழைந்தவன் நீ-காதல் மட்டும் அல்ல சில சொந்தங்களும் சட்டென மலரும் !அருமை இயற்கை !/

ஆமாங்க‌.... வ‌ருகைக்கு ந‌ன்றி

இய‌ற்கை said...

/பிரபா said...
இதயத்தை பூவால் வருடுகின்ற பதிவு...


மிக்க நன்றி பிரபா

Amudha Murugesan said...

இன்றைக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.......உறவில்லாமல் உறவாகி நேசிக்கும் நட்பு வட்டத்தை நினைவு படுத்தியது...மிகவும் அருமை ராஜி!