ரவுத்திரம் பழகாவிடில்???

Tuesday, August 24, 2010
சில காலமாக எழுத்தார்வத்துக்கு அணை போட்டு வைத்திருந்தேன்.. அண்மையில் நான் சந்தித்த நிகழ்வொன்று கண்டிப்பாய் யாருடனும் பகிர்ந்தே ஆகவேண்டும் என்னும் உந்துதலை எற்படுத்தி விட்டதால் பதிவிடுதலைத் தொடர்கிறேன்.
பெண்கள் வாழ்வில் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை பொது இடங்களில் கண்ணியமான உருவத்துடன் உலவும் சில சில்மிஷ சில்வண்டுகள்.அத்தகைய அல்ப சில்மிஷங்கள் ஆண்களுக்கு சில நிமிட பொழுது போக்காகத் தோன்றினாலும்,அதில் பாதிக்கப்படும் அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கிவிடுகிறது.
அத்தகைய ஒரு நிகழ்வு.
சில நாட்களுக்கு முன் ஒரு கல்லூரியில் தொடங்கிய‌ முதலாண்டு வகுப்புகளுக்கு பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து வந்த மாணவிகளுள் ஒருத்தியை பற்றித்தான் நான் கூறப்போகிறேன்.
செல்வி என்னும் மாணவி மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு மலைகிராமத்தில் இருந்து தன் கடும் முயற்சியில் படித்து பொறியியல் படிப்புக்கான இடம் பெற்றாள்.கல்லூரிப் படிப்புக்கான பணம் கூட கட்டமுடியாமல்,கல்லூரித் தாளாளாரின் சிறப்பு ஒதுக்கீட்டில், கட்டணச் சலுகை பெற்ற மாணவி. தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்னும் உத்வேகம் நிரம்பப் பெற்றிருந்தாள்.கல்லூரியில் தன் அப்பாவித்தனத்தால் அனைத்து ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தாள்.
நகரத்தின் நரகங்கள் ஏதுமறியாக் குழந்தையாகவே இருந்த அவளுக்கு ஊரைச் சுற்றிக்காட்ட,அவளது தோழிகள் அழைத்துப் போயிருக்கிறார்கள். பேருந்தில் அவளுக்குப் பின் நின்றிருந்த ஏதோ ஒரு மிருகத்தில் கேவலமான சில்மிஷச் சீண்டலால் பயந்து போன செல்வி,மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறள் .ஆண்கள் அனைவரும் மோசம் என்னும் எண்ணம் அச்சிறுமியின் மனதில் பதிந்திவிட்டது.ஆண் ஆசிரியர்களைக் கூட அவளால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதன் விளைவு அவள் படிப்புக்கு விழுந்த்து முட்டுக்கட்டை.படிப்பை விடுத்து தன் வீடு திரும்பிய மாணவியை கிராமத்துப் பெற்றோர் கட்டாயப்படுத்தியதன் விளைவு.அவளது மரணம்.ஆம்..அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

ஒரு வளரும் பயிரின் வாழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதற்குக் காரணமானவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது.இத்தகைய மனிகர்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதா? தனது ஏதோ ஒரு உணர்ச்சித் தூண்டலுக்குப் பலியாக்கப்படும் அப்பாவிப் பெண்களைப் பற்றி இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள்? பெண்கள் எல்லாம் இவர்களால் ஆட்டுவிக்கப்பட படைக்கப்பட்ட பொம்மைகள் என்றா?
"ரவுத்திரம் பழகா"விடில் பெண்கள் வாழ முடியாதா?

.

19 comments:

கபீஷ் said...

:-(( ரொம்ப வருத்தமா இருக்கு.

நிஜமா நல்லவன் said...

:(

எண்ணங்கள் 13189034291840215795 said...

"ரவுத்திரம் பழகா"விடில் பெண்கள் வாழ முடியாதா?

]

கண்டிப்பா பழகணும்..ஆனா வேறு மாதிரி



கோழைகளே இவர்களின் டார்கெட்..

பாவம்

மனநோயாளிகள் சில ஆண்கள்..

பெண் திருப்பி கொடுக்க பழகணும்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

"ரவுத்திரம் பழகா"விடில் பெண்கள் வாழ முடியாதா?

]

கண்டிப்பா பழகணும்..ஆனா வேறு மாதிரி



கோழைகளே இவர்களின் டார்கெட்..

பாவம்

மனநோயாளிகள் சில ஆண்கள்..

பெண் திருப்பி கொடுக்க பழகணும்...

அபி அப்பா said...

கொடுமை:-(

T.V.ராதாகிருஷ்ணன் said...

:(((

Anonymous said...

:(( ரொம்ப கஷ்டமா இருக்கு

சுசி said...

கண்டிப்பா பழகத்தான் வேண்டும்.

மரணம் அவனுக்கு உரிய தண்டனை.. செல்விக்கானது இல்லை.

Anonymous said...

:-(

settaikkaran said...

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேனும் காத்தல் அரிது- என்பது திருக்குறள். பெண்களின் நியாயமான கோபம், அக்கணத்தோடு நின்றுவிடாமல், ஒருங்கிணைந்து ஒருமுகப்படுத்தப்பட்டு, இலக்கை நிர்ணயித்துச் செலுத்தப்படின், சூதும் வாதும் சுக்குநூறாகும்.

'பரிவை' சே.குமார் said...

வாங்க ராஜி.... மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள்.

ரொம்ப வருத்தமா இருக்குங்க.

பா.ராஜாராம் said...

அதிர்ச்சியான பகிர்வு.

குழந்தைகளுக்கு எல்லாம் சொல்லித்தரனும் ராஜி. தேவையெனில், சொல்லித் தராமலே ரௌத்திரம் பழக குழந்தைகளுக்கு தெரியும். நாமும் ஆறுதலாக இருக்க வேணும்.

தேவையான பகிர்வும் கூட.

Anonymous said...

கடைசி பத்தியில் கேள்விகள் எழுப்பியிருக்கிறீர்கள். எவரும் பதில் சொல்லவில்லை இங்கே ஒருவரைத்தவிர. ’மரணதண்டனை விதிக்கவேண்டும்.’ என்பதுதான் அப்பதில்.

நீங்கள் அக்கேள்விகளுக்குப் பதில்கள் சொன்னாலென்ன?

gayathri said...

இவனுகளுக்கு எல்லாம் ஒடனே மரணம் வர மாதிரி தண்டனை கொடுக்க கூடாது .

அணு அணுவா சாகனும் . இவனுக்கு கொடுக்குற தண்டனைல வேற எவனும் இப்படி ஒரு தப்பு பண்ண கூடாது .

பெண்களே நீங்க பஸ்ல போகும் போது safetya போகனும்ன கைல ஒரு safety பின் வச்சிகோங்க. அதுவும் பத்தாதுன ஒரு பெரிய கோணி ஊசி கூட வசிக்கலாம் ஒன்னும் தப்பில்ல.

(இப்படியும் ஒரு சில ஆண்கள் இருக்க தான் செய்றாங்க)

gayathri said...

இவனுகளுக்கு எல்லாம் ஒடனே மரணம் வர மாதிரி தண்டனை கொடுக்க கூடாது .

அணு அணுவா சாகனும் . இவனுக்கு கொடுக்குற தண்டனைல வேற எவனும் இப்படி ஒரு தப்பு பண்ண கூடாது .

பெண்களே நீங்க பஸ்ல போகும் போது safetya போகனும்ன கைல ஒரு safety பின் வச்சிகோங்க. அதுவும் பத்தாதுன ஒரு பெரிய கோணி ஊசி கூட வசிக்கலாம் ஒன்னும் தப்பில்ல.

(இப்படியும் ஒரு சில ஆண்கள் இருக்க தான் செய்றாங்க)

sakthi said...

ரொம்ப கஷ்டமா இருக்குடா

ஸ்ரீ.... said...

ராஜி,

கண்டிப்பாக ரௌத்திரம் பழகுவதோடு வெளிப்படுத்தவும் வேண்டும். காப்பாற்றிக் கொள்ள வேறுவழியில்லை.

ஸ்ரீ....

ரோகிணிசிவா said...

dear all.,
most of the guys dont realise what they are up to ansd how wil the receipient react .,
for instance i usedto get annonymous calls ,untimely .,
but when i share with this with my dear and near , the first question shot is how did he get your number ., or why are you leaving your number to such persons,
usually the fenale i blamed every time wehn ever something wrong occurs .,
physical mental ,verbal harresments leave very bad results on any female., how musch ever she is educated or employed ,
and i dont understand why these so called guys do al these , and what do they derive from it ???

Ungalranga said...

இந்த உலகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது குறைவாகாவே இருக்கிறது.

ரௌத்திரம் பழகும் பெண் தான் பாதுக்காப்பாக இருக்க முடியும்.

உலகம் அப்பாவிகளுக்கானது அல்ல..அறிவாளிகளுக்கானது..!!