என் காத‌ல் க‌ன‌வானே

Saturday, February 14, 2009


நீ சென்ற‌ த‌ட‌த்தில் இணையாக‌
என் த‌ட‌த்தைப் ப‌திக்கும் குறுகுறுப்பு
நீ அம‌ர்ந்த‌ இருக்கையில்
நான் அம‌ர‌க் கிடைக்கும் க‌த‌க‌த‌ப்பு
நீ தொட்ட‌ எதையும் உட‌னே
நான் தொட‌ எத்த‌னிக்கும் சுறுசுறுப்பு
நீ சுவாசிக்கும் அதே காற்றை
நான் சுவாசிக்கக் கிடைக்கும் மித‌ப்பு
என் சொற்க‌ள் அல்ல‌
இச்செய‌ல்க‌ள் உண‌ர்த்த‌ட்டும் உன‌க்கான‌ என் காதலை



நீய‌ல்ல‌,உன் சாய‌ல் கொண்டோரைக் க‌ண்டாலே ம‌ன‌ம் துள்ளிக்குதிக்கிற‌தே!
சாலையோர‌ போஸ்ட‌ரில் உன் பேரைக் க‌ண்டாலும் கால்க‌ள் ந‌க‌ர‌ ம‌றுக்கிற‌தே!
நீ பேசிய‌ வார்த்தை யார் பேசினாலும் அது உன் குர‌லாய் ஒலிக்கிற‌தே!
உன்முன் ம‌ட்டும் என் சொற்க‌ள் ஊமையாகிப் போகிற‌தே!
என்றுமில்லா இம்மாற்ற‌ங்க‌ள் என‌க்குண‌ர்த்திய‌
என் காத‌லை என்று உனக்குண‌ர்த்துமோ?

32 comments:

புதியவன் said...

//என் சொற்க‌ள் அல்ல‌
இச்செய‌ல்க‌ள் உண‌ர்த்த‌ட்டும் உன‌க்கான‌ என் காதலை//

அழகான உங்கள் சொற்களே உணர்த்துகின்றன காதலை...

புதியவன் said...

//என்றுமில்லா இம்மாற்ற‌ங்க‌ள் என‌க்குண‌ர்த்திய‌
என் காத‌லை என்று உனக்குண‌ர்த்துமோ?//

உணர்வுகளை சொன்ன விதம் அழகு...வாழ்த்துக்கள்...

Anonymous said...

வந்துட்டோம்ல

Divyapriya said...

தானா உணர்த்தும்னு காத்திருக்காம, போய் சொன்ன இது நல்ல நாள் தான் ;)
கவிதை அருமை...

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதைகள் ரொம்ப நல்லா இருக்குங்க.. காதலர் தின வாழ்த்துக்கள்..

அப்துல்மாலிக் said...

//இச்செய‌ல்க‌ள் உண‌ர்த்த‌ட்டும் உன‌க்கான‌ என் காதலை//

நிச்சயம் உணரப்படும்

அப்துல்மாலிக் said...

கதலர்தினத்தை உணர்த்தும் கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள்

Anonymous said...

kathalar dhina malarai thodukkapatta kavithai azhaguuuuuuuuuu

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ புதிய‌வ‌ன். வ‌ருகைக்கும் பாராட்டுக்கும் ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ mohideen

*இயற்கை ராஜி* said...

க‌விதை த‌யார்.ஆனா யார் கிட்ட‌ போய் சொல்ற‌துன்னு இன்னும் க‌ண்டுபிடிக்க‌லைங்க‌ திவ்யா:-)))

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ அபுஅஃப்ஸர்

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ thamilarasi.ந‌ன்றி

Sanjai Gandhi said...

hmmmm.. onnum sari illa.. vaathiyaar kita seekiram pesa vendiyathu than.. kalyana saapadu saptu romba naal achi :))

superlinks said...

உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய‌ இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இத‌யம்!
அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?

Anonymous said...

happy valentines day
your blog is too nice
by
maha

http://mahawebsite.blogspot.com/

அனுபவம் said...

ennanka poo suththikkiddu erukkeenka? enakku poraamaye illeenka??????

வெற்றி said...

மிக அருமை.
கலக்கல் கவிதை.
ஒவ்வொரு வரியும் ஒரு அழகான தனிக் கவிதை.அடிக்கடி கவிதை எழுதுங்க தங்கச்சி.

எம்.எம்.அப்துல்லா said...

:))

தமிழிசை said...

//என்றுமில்லா இம்மாற்ற‌ங்க‌ள் என‌க்குண‌ர்த்திய‌
என் காத‌லை என்று உனக்குண‌ர்த்துமோ? //

சொன்னாதாங்க தெரியும்:).கவிதை அருமை.

Anonymous said...

கவிதை வரிகள் மிக அருமை.

Princess said...

azhagana kavithai..
romba azhaga feel pani ezhuthi irukeenga

*இயற்கை ராஜி* said...

உங்க‌ ந‌ல்லெண்ண‌த்துக்கு ரொம்பாபாபா ந‌ன்றி ச‌ஞ்ச‌ய்.க‌விதையை அனுப‌விக்க‌ணும்.ஆராய‌க் கூடாது

*இயற்கை ராஜி* said...

:-( superlinks :-(

*இயற்கை ராஜி* said...

Thank you maha.Same to you:-)

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ அனுபவம்:-)

*இயற்கை ராஜி* said...

//தேனியார் said...
மிக அருமை.
கலக்கல் கவிதை.
ஒவ்வொரு வரியும் ஒரு அழகான தனிக் கவிதை.அடிக்கடி கவிதை எழுதுங்க தங்கச்சி.//


மிக்க‌ ந‌ன்றி அண்ணா:-)

*இயற்கை ராஜி* said...

வாங்க‌ அப்துல்லா அண்ணா:-)

*இயற்கை ராஜி* said...

தமிழிசை said...
////என்றுமில்லா இம்மாற்ற‌ங்க‌ள் என‌க்குண‌ர்த்திய‌
என் காத‌லை என்று உனக்குண‌ர்த்துமோ? //

சொன்னாதாங்க தெரியும்:).கவிதை அருமை.//



சொல்லிட‌லாங்க‌ த‌மிழிசை

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி ம‌கா

*இயற்கை ராஜி* said...

Thank you verymuch Princess:-)