உனைப் பிரியும் வேளையிலே

Tuesday, February 10, 2009


என்ன சொல்வது என்று தெரியவில்லை..
அதை எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை..
அன்புத் தோழனாய் ..ஆசைச் சகோதரனாய்…
கண்டிக்கும் தந்தையாய்… கற்றுத்தரும் ஆசிரியனாய்
பரவசமாய்….அரவணைத்த….நீ பிரிவதை..தேடினேன்..தேடினேன்..தமிழ் சொற்கள் அனைத்தையும்..
உன்னைப் பிரியும் துயரை வெளிப்படுத்த...
பின்னர் தான் தெரிந்து கொண்டேன்...
தங்கத் தமிழ் அல்ல...தரணியின் எம்மொழியும்
அத்துயர் வார்த்தைகளைக் கொண்டிருக்கவில்லையென்று..அன்பைப் பகிர்ந்தோம் ..மகிழ்ந்தேன்
அரவணைப்பைப் பகிர்ந்தோம்....அதிசயித்தேன்
நட்பைப் பகிர்ந்தோம்..ஆரவாரித்தேன்
இப்பொழுது பிரிவை பகிரச் சொல்கிறாயே…என் செய்வேன்?இந்நிமிடம்.. நம் நட்பின் ஆழம் என்னை நடுங்க வைக்கிறது
மரணத்திலும் மேலான துக்கம் எனப் பறைசாற்றுகிறது
பிரிவின் கொடுமை உன்னைப் பிரியும் போதுதான் புரிகிறது..
சிரித்துப் பேசும் நிமிடங்களைப் பறித்துக் கொள்ளப் போகிறாயா?"ஆஹா"என்றேன் உன்னைப் பார்க்கும் போது..
"அய்யோ"என்றேன் உன்னை விலகும்போது..
இனி "அய்யோ"க்கள் தான் என் வாழ்விலா?
"ஆஹா"க்கள் நிலைக்க வழியே இல்லையா?இப்போதும் நான் வழி அனுப்ப வரவில்லை..
நீ செல்லும் வழிபார்த்துப் பூத்திருக்க வந்தேன்..
நீ திரும்ப வருவாய் என எதிர்பார்த்திருக்க வந்தேன்..
(பிளாக்ல இவ்ளோ எழுதிட்டு ஒரு கவிதை எழுதலின்னா எப்படிங்க?.அதனால நானும் எழுதிட்டேன்..படிச்சிட்டு திட்டுங்க.ஆனா ப்ளீஸ் ...இதை கவிதை இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க:))

.

26 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Anonymous said...

mm..nalla irukku:-)

Anonymous said...

//நீ செல்லும் வழிபார்த்துப் பூத்திருக்க வந்தேன்..
நீ திரும்ப வருவாய் என எதிர்பார்த்திருக்க வந்தேன்//
nee thirunthave illaya di?

SPIDEY said...

y blood same blood

Sanjai Gandhi said...

wow.. really superb poem raaji.. write more like this.. :)

//இதை கவிதை இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க:))//

ithu kavithaye illa..athukkum mela nu sola vanthen.. :))

Anonymous said...

thank you sanjai..

oru appreciationah kooda olunga solla maateengala:-)

Divyapriya said...

// இப்போதும் நான் வழி அனுப்ப வரவில்லை..
நீ செல்லும் வழிபார்த்துப் பூத்திருக்க வந்தேன்..
நீ திரும்ப வருவாய் என எதிர்பார்த்திருக்க வந்தேன்..//

கலக்கல் வரிகள் :) அருமையான கவிதைகள் (கவிதை இல்லன்னு சொல்ல ;) )

தேவன் மாயம் said...

உங்கள் வலை பார்த்தேன்.நன்றாக உள்ளது.உங்கள் கவிதைகளை
வலைச்சரத்தில் பார்வைக்கு வைக்கிறேன்.பலர் கருத்துரை தருவர்,நீங்களும் வருக இன்று காலை10.30 மணிக்கு.
http://blogintamil.blogspot.com/

தேவன் மாயம் said...

http://blogintamil.blogspot.com/ varuka..

Unknown said...

இயற்கை,

வலைக்கு வந்ததற்கு நன்றி.முதல் கவிதை முயற்சிக்குப் பாராட்டுக்க்ள்.
”கவிதப்போரது யாரு”க்கு என்னை நடுவராக அழைத்ததற்கு நன்றி.நானும்
புலவன் அல்ல.கத்துக் குட்டிதான்.

என்னசொல்வது என்றுதெரியவில்லை.
எப்படிச்சொல்வதென்றும் தெரியவில்லை.
கவிதைகள் காலேஜ் மேகசீன் டைப்.தயவு செய்து சின்னதாக எழுதிபழகுங்கள்.சங்கதமிழ் விட்டு விடுங்கள்.வசனம் வேண்டாம்.வித்தியாசமான எளிமையான
வார்த்தைகளில் சொல்ல பாருங்கள்.

//இந்நிமிடம்.. நம் நட்பின் ஆழம் என்னை நடுங்க வைக்கிறது
மரணத்திலும் மேலான துக்கம் எனப் பறைசாற்றுகிறது//

overacting வேண்டாம்.இது மாதிரி எழுதுவதற்கு வலையில் ஒரு கூட்டம் இருக்கிறது.பேர் சொல்ல விரும்பவில்லை.அவர்களை ஓதுக்குங்கள்.

கிழ் உள்ள கவிதையை பாருங்கள்:-
அட்டகாசம்.நான் எழுதவில்லை.

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது

-கல்யாண்ஜி (வண்ணதாசன்)

கிழ் உள்ள வலைக்குச் செல்லுங்கள்.
http://minnalpakkam.blogspot.com/search/label/பிடித்த‌%20கவிதைக‌ள்

http://veenaapponavan.blogspot.com

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

\\என்ன சொல்வது என்று தெரியவில்லை..
அதை எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை..
அன்புத் தோழனாய் ..ஆசைச் சகோதரனாய்…
கண்டிக்கும் தந்தையாய்… கற்றுத்தரும் ஆசிரியனாய்
பரவசமாய்….அரவணைத்த….நீ பிரிவதை..\\

மிக அழகு

நட்புடன் ஜமால் said...

\\அன்பைப் பகிர்ந்தோம் ..மகிழ்ந்தேன்
அரவணைப்பைப் பகிர்ந்தோம்....அதிசயித்தேன்
நட்பைப் பகிர்ந்தோம்..ஆரவாரித்தேன்
இப்பொழுது பிரிவை பகிரச் சொல்கிறாயே…என் செய்வேன்?\\

மிகவும் அருமைங்க

புதியவன் said...

//அன்பைப் பகிர்ந்தோம் ..மகிழ்ந்தேன்
அரவணைப்பைப் பகிர்ந்தோம்....அதிசயித்தேன்
நட்பைப் பகிர்ந்தோம்..ஆரவாரித்தேன்
இப்பொழுது பிரிவை பகிரச் சொல்கிறாயே…என் செய்வேன்?//

பிரிவின் உணர்வுகளை சொல்லும் அழகான கவிதை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...

வெற்றி said...

கவிதை?
"அழகிய மனது"

அன்புடன் அருணா said...

//அன்புத் தோழனாய் ..ஆசைச் சகோதரனாய்…
கண்டிக்கும் தந்தையாய்… கற்றுத்தரும் ஆசிரியனாய்
பரவசமாய்….அரவணைத்த….நீ பிரிவதை..//

நல்லா எழுதிருக்கீங்க...வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

*இயற்கை ராஜி* said...

Priya ....
thanks for coming..
naana thiruntharatha..ha..ha..ha..

*இயற்கை ராஜி* said...

thanks for the visit spidey

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ Divyapriya

*இயற்கை ராஜி* said...

மிக்க‌ ந‌ன்றி தேவா..ரொம்ப‌ ரொம்ப‌ ம‌கிழ்ச்சி

*இயற்கை ராஜி* said...

க‌ருத்துக்க‌ளுக்கு ந‌ன்றி ரவிஷங்கர்ஜி:-)

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ ஜமால் .ஒவ்வொரு வ‌ரியையும் இர‌சித்த‌துக்கு

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றிங்க‌ புதியவன்

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி அண்ணா

*இயற்கை ராஜி* said...

வ‌ருகைக்கும் வாழ்த்துக்கும் ந‌ன்றி அருணா மேட‌ம்

Anonymous said...

no hard feelings da..take life as it is..few things cannot be changed:-(

banuh shree said...

நீ செல்லும் வழிபார்த்துப் பூத்திருக்க வந்தேன்..
நீ திரும்ப வருவாய் என எதிர்பார்த்திருக்க வந்தேன்