ப‌ண‌மே வேண்டாம்ன்னு சொல்ல‌ வ‌ச்சிடாதீங்க‌:‍)

Tuesday, February 3, 2009
இன்னிக்கு ம‌திய‌ம் சாப்பிட‌ ஆர‌ம்பிக்க‌ற‌ நேர‌த்துல‌ ஒரு தொலைபேசி அழைப்பு.ப‌ழைய‌ அரிய‌ர் ப‌ண‌ம் வ‌ந்து இருக்கு.வந்து வாங்கிட்டு போங்க‌ன்னு காலேஜ் பைனான்ஸ் டிபார்ட்மெண்ட்ல‌ இருந்து கூப்டாங்க‌.எதிர்பாராத‌ ப‌ண‌வ‌ர‌வு.ஒரே ச‌ந்தோச‌ம்.சாப்பாடு எங்க‌ உள்ள‌ போகுது.அப்புற‌ம் சாப்ப‌ட‌லான்னு தோழிக‌ளை காத்திருக்க சொல்லிட்டு ப‌ண‌த்தை வாங்க‌ ப‌ற‌ந்துட்டு ஓடுனேன்.

போன‌ உட‌னே ..."வாங்க‌..வாங்க‌..இப்போதான் சொன்னேன்.அதுக்குள்ள‌ வ‌ந்திட்டீங்க‌.ச‌ரி..இதுல‌ சைன் ப‌ண்ணுங்க‌" ன்னு லெட்ஜ்ரை என் கிட்ட‌ த‌ந்துட்டு..அந்த‌ கிளார்க் ப‌ண‌த்தை எண்ண‌ ஆர‌ம்பிச்சார்.அவ‌ர் எண்ண‌றதை பாத்து நான் ப‌ண‌த்தாசையை விட்டுட்டேன்.ஏன்னு கேளுங்க‌( நீங்க‌ கேக்க‌லைனாலும் நான் சொல்வேன்)

அந்த‌ ப‌ண‌த்தை எண்ண‌ ஒரு அரைலிட்ட‌ர் எச்சில் போட்டிருப்பாருங்க‌.அய்யோ கொடுமைடா
சாமி:‍(
அதை கைல‌ வாங்க‌ற‌துக்கே நொந்து போய்ட்டேன்.

அந்த‌ ப‌ண‌த்தை வாங்கிட்டு போய் கைப்பைல‌ வைக்க‌லாம்னா..இன்னிக்குன்னு பாத்து புது ஹேண்ட்பேக் வேற‌.புத்த‌ம்புது ஹேண்ட்பேக்ல‌ முத‌ல்முத‌ல்ல‌ வைக்கிற‌ ப‌ண‌த்துக்கு இப்பிடி ஒரு நிலைமையா?..ஹ்ம்ம்ம்...(இந்த‌ மாதிரி எச்சில் மேட்ட‌ர்க்கே என் ப‌ழைய‌ ஹேண்ட்பேக்ல‌ ஒரு இட‌ம் த‌னியே வ‌ச்சிருக்கேன்)
அதை வாங்கி வ‌ச்சிட்டு உட‌னே சாப்பாட்ல‌ கை வைக்க‌வே பிடிக்க‌லை.ஸோ சாப்பாடு க‌ட்

ப‌ண‌ம் ம‌ட்டும் இல்லை.நிறைய‌ இட‌ங்க‌ள்ல‌ பேப்ப‌ர் கூட‌ டீல் ப‌ண்ற‌ப்ப‌ எல்லாம் இதே பிர‌ச்சினைதாங்க‌.பெரிய‌ நிலைல‌ இருக்க‌ற‌ ஆபீசர்க‌ள்கிட்ட‌ கூட‌ இந்த‌ ப‌ழ‌க்க‌ம் இருக்கு.

ந‌ம்ம எச்சில் அடுத்த‌வ‌ங்க‌ளுக்கு அருவெருப்பா இருக்கும்ன்னு யோசிக்க‌ற‌தே இல்லை.
அதுவும் இல்லாம‌, இந்த‌ ப‌ழ‌க்க‌த்தால எவ்ளோ கிருமிங்க‌ வ‌யித்துக்குள்ள‌ போகும். அது உங்க‌ உட‌லை எவ்ளோ பாதிக்கும்ன்னு யோசிக்க‌ணுங்க‌.

46 comments:

Unknown said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

இலவசக்கொத்தனார் said...

செக், டைரக்ட் டெபாசிட் போன்றவைகளைப் பத்தி உங்க கல்லூரி கேள்விப்பட்டதே இல்லையா?

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Anonymous said...

முன்னாடியெல்லாம் ஸ்பான்ஞ்சுல தண்ணி நனைச்சு வெச்சிருப்பானுங்களே.. அதெல்லாம் இல்லியா இப்போ?

அந்தப் பணம் கையில வெச்சுக்கப் புடிக்கலைன்னா.. என்கிட்ட கொடுத்துடுங்க.. எங்கியாவது தூக்கிப் போட்டுடறேன் !!!


அன்புடன் சீமாச்சு
http://seemachu.blogspot.com

ஸ்ரீதர்கண்ணன் said...

க‌மெண்ட் போடாம‌ போக‌ மாட்டீங்க‌ன்னு தெரியும்.ஆனாலும் நியாப‌க‌ப்ப‌டுத்த‌ர‌‌து என் க‌ட‌மை.:-)

நீங்க நியாப‌க‌ப்ப‌டுத்திய ஒரே காரணத்துக்காக போடறேங்க :-)

நல்ல பதிவு...

Unknown said...

பணமுன்னா பிணமும் வாயத்திறக்கும்.

டெட்டால் அடிச்சுடுங்க.சரியாடும்.

Hisham Mohamed - هشام said...

இயற்கை கையில இத மாதிரி அசுத்தமான பணம் இருக்க கூடாது. அப்புறமா உங்களுக்கு என் முகவரி தாரேன் முடிஞ்சா இலங்கைக்கு தபால் மூவமா அனுப்புங்க...........

sa said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

Sanjai Gandhi said...

சொல்லவே இல்லை.. அப்டியே என் அக்கவுண்ட்ல போட்ருங்க..:)

எம்.எம்.அப்துல்லா said...

உங்கள விடுங்க...எல்லா நோட்டுலயும் இருக்க தேசபிதா காந்தியோட நிலமைய நினைச்சுப்பாருங்க....அவர எப்படி டெய்லி குளிப்பாட்டுறாங்கன்னு :)))

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி வ‌லைப்பூக்க‌ள்:-)

*இயற்கை ராஜி* said...

//இலவசக்கொத்தனார் said...
செக், டைரக்ட் டெபாசிட் போன்றவைகளைப் பத்தி உங்க கல்லூரி கேள்விப்பட்டதே இல்லையா?//

சேல‌ரியெல்லாம் டைர‌க்ட் டெபாசிட்தான்.இந்த‌ மாதிரி அடிஷ‌ன‌ல் ப‌ண‌ம் கைல‌ த‌ருவாங்க‌.

*இயற்கை ராஜி* said...

ரொம்ப‌ ந‌ன்றிங்க‌ சீமாச்சு.ப‌ண‌த்தை நானே தூக்கிப்போட்டுட்டேங்க‌(எங்க‌ போட‌ணுமோ அங்க‌)

*இயற்கை ராஜி* said...

எப்பிடியோ... க‌மெண்ட் போட்ட‌துக்கு ந‌ன்றி ஸ்ரீதர்கண்ணன்

*இயற்கை ராஜி* said...

இந்த‌மாதிரி காகித‌த்தை அடிக்க‌டி டீல் ப‌ண்ணிணா ப‌ண்ற‌வ‌ங்க‌ளே பிண‌ம் ஆக‌ வேண்டிய‌துதான் ரவிஷங்கர்:-))

*இயற்கை ராஜி* said...

//Hisham Mohamed - هشام said...
இயற்கை கையில இத மாதிரி அசுத்தமான பணம் இருக்க கூடாது. அப்புறமா உங்களுக்கு என் முகவரி தாரேன் முடிஞ்சா இலங்கைக்கு தபால் மூவமா அனுப்புங்க...........//


எத்த‌னை பேருங்க‌ இப்ப‌டி கிள‌ம்பி இருக்கீங்க‌

*இயற்கை ராஜி* said...

ந‌ன்றி viji

*இயற்கை ராஜி* said...

ஒகே ச‌ஞ்ச‌ய்.உங்க‌ளுக்கு இல்லாம‌லா?. உட‌னே போட்டுட‌லாம். Interest எவ்ளோ குடுப்பீங்க‌? :-)))

*இயற்கை ராஜி* said...

//எம்.எம்.அப்துல்லா said...
உங்கள விடுங்க...எல்லா நோட்டுலயும் இருக்க தேசபிதா காந்தியோட நிலமைய நினைச்சுப்பாருங்க....அவர எப்படி டெய்லி குளிப்பாட்டுறாங்கன்னு :)))//

அய்யோ பாவ‌ம்.இப்ப‌டி ம‌காத்மா மேல‌யே பாவ‌ப்ப‌ வ‌ச்சிட்டாங்க‌ளே:-))

Anonymous said...

ivlo feel pannuvennu than appove sonnen yenkitta kuduthudunnu...kettiya?

Divyapriya said...

ஹா ஹா :D

*இயற்கை ராஜி* said...

//Shangeetha said...
ivlo feel pannuvennu than appove sonnen yenkitta kuduthudunnu...kettiya?
//
அக்கா..ஒரு முடிவோட‌தான் இருக்க‌ போல‌..ஹ்ம்ம்

*இயற்கை ராஜி* said...

//Divyapriya said...
ஹா ஹா :D//

சிரிங்க‌..சிரிங்க‌..என் நில‌மை அப்ப‌டி ஆகிடுச்சி:‍(

☀நான் ஆதவன்☀ said...

அட போங்க நீங்க...நம்ம கலாச்சாரத்தையே மாத்தச் சொல்றீங்க. நான் கம்யூட்டர்ல படிக்கிற புக்குல அடுத்த பக்கத்துக்கு போறதுக்கே எச்ச தொட்டு தான் scroll பண்றேன்னா பார்த்துக்கங்க

☀நான் ஆதவன்☀ said...

தமிலீஸ்ல ஓட்டு போட்டுருக்கேன் தாயீ...நம்ம கடை பக்கம் வந்தேனக்கா கொஞ்சம் ஞாபகம் வச்சுக்க தாயீ.

ஆமா உங்க ப்ளாக்கர நீங்களே பாலோ செய்றீங்க..இதுவும் நல்லா தான் இருக்கு :-)

தாரணி பிரியா said...

அட நீங்க கண்டிப்பா எங்க காலேஜ் இல்லை. நாங்க எச்சில் தொட்டு தரது எல்லாம் இல்லை. ஸ்பான்ச் வச்சு இருப்போம். அதை தொட்டுதான் தருவோம். :)

நீங்க எந்த காலேஜ்ங்க. என்னோட மெயில் ஐ.டி இதுதான் prikan@gmail.com. மெயில செய்யுங்களேன்.
நன்றி

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

வெற்றி said...

அந்த கேசியர்கிட்ட, இந்த பதிவ படிக்க சொன்னீங்கன்னா சூப்பர்.

ஐடியாவுக்கு நான்,
அடின்னா நீங்க..

*இயற்கை ராஜி* said...

//நான் ஆதவன் said...
அட போங்க நீங்க...நம்ம கலாச்சாரத்தையே மாத்தச் சொல்றீங்க. நான் கம்யூட்டர்ல படிக்கிற புக்குல அடுத்த பக்கத்துக்கு போறதுக்கே எச்ச தொட்டு தான் scroll பண்றேன்னா பார்த்துக்கங்க//

ஹா..ஹா..அந்த‌ கேஷிய‌ருக்கே அண்ணாவா இருப்பீங்க‌ போல‌ நான் ஆதவன்:-))

*இயற்கை ராஜி* said...

க‌ண்டிப்பா மெயில் ப‌ண்றேங்க‌ தாரணி பிரியா

*இயற்கை ராஜி* said...

தேனியாரே ..ஏன் இந்த‌ கொலைவெறி:‍((

அன்புடன் அருணா said...

பார்த்தீங்களா ...பணமே வேண்டாம்ன்னு சொல்ல‌ வ‌ச்சிடாதீங்க‌:‍) அப்பிடின்னு சொல்லி முடிக்கலை எத்தனை பேரு ரெடியா இருக்காங்க அதை வாங்க??/
அன்புடன் அருணா

*இயற்கை ராஜி* said...

அதான் பாருங்க‌ அன்புடன் அருணா .விட்டா கெள‌ம்பி வ‌ந்து கைல‌ இருக்க‌ற‌தை பிடுங்கிடுவாங்க‌ போல‌:-))

Unknown said...

//ப‌ண‌த்தை வாங்க‌ ப‌ற‌ந்துட்டு ஓடுனேன்.//
ஹா..ஹா..சூப்பர்

Anonymous said...

yei..yenna ithellam?.. sollave illa.mm..paathukkaren

Anonymous said...

super ma..romba naal aathangathai polambi thallitte pola:-)

Anonymous said...

bl0g arambichathukku mariyathai ya treat kuduthidu...

Anonymous said...

//உட‌னே சாப்பாட்ல‌ கை வைக்க‌வே பிடிக்க‌லை.ஸோ சாப்பாடு க‌ட்//
hei..unakku annikku sappadu pidikkatha menu kkira unmaiya marachittaye:-)

Anonymous said...

All the beat ma:-)

*இயற்கை ராஜி* said...

adapaavihala...priya,jothi,raja&velna..public la ippidi damage panrreengale..nalla irungappa..

*இயற்கை ராஜி* said...

anyway thanks vel anna:-)

நட்புடன் ஜமால் said...

\\ந‌ம்ம எச்சில் அடுத்த‌வ‌ங்க‌ளுக்கு அருவெருப்பா இருக்கும்ன்னு யோசிக்க‌ற‌தே இல்லை\\

அருவெருப்புன்னா என்னான்னு கேட்டாலும் கேட்ப்பாங்க

*இயற்கை ராஜி* said...

உண்மைதாங்க‌ ஜமால் :-)

Anonymous said...

நீங்க சொன்ன மாதிரி நானும் நிறைய இடத்துல பார்த்து இருக்கேன்
http://mahawebsite.blogspot.com/

Anonymous said...

நீங்க சொன்ன மாதிரி நானும் நிறைய இடத்துல பார்த்து இருக்கேன்
http://mahawebsite.blogspot.com/

Anonymous said...

:-))