நம் நட்பு ஆரம்பித்து சிறிது காலமே ஆனாலும் ஆண்டாண்டாய் பழகிய பந்தமாய் பரிணமித்திருக்கிறது என் மனதில்.உன்னிடம் மட்டும் என் நட்பின் பரிமாணங்கள் வேறுபடுகின்றன.எல்லா நட்புகளிடமும் "எனக்கு என்ன செஞ்ச நீ" எனக்கேட்கும் என சொற்கள் உன்னிடம் மட்டும் " உனக்கு என்ன செய்ய வேண்டும் நான்" எனக் கேட்கவே தலைப்படுகின்றன.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
(மு.வ உரை:
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்)
இந்தக் குறளுக்கான அர்த்தம் உன்னுடன் பழகிய பின்னரே உணர்ந்து கொண்டேன்.
பல நேரங்களில் உனக்கான பெரும் அன்புத் தொல்லையாய்க் கூட நான் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.உன்னைச் சிறு குழந்தையைத் தொல்லைபடுத்துவது போல படுத்தி இருக்கிறேன்.ஆனாலும் நான் அதற்கு வருத்தப்படவில்லை. நீயும் அதைக் காட்டிக் கொண்டதில்லை..நிச்சயமாய் I am blessed to have such a frienship.
உன்னோடு பழகும்வரை கடவுளிடம் ரொம்ப சீரியஸாய் எதையும் கேட்டதில்லை.உன்னைக் கண்டது முதல் இறைஞ்சுகிறேன் தினமும்.. உனக்கான சந்தோஷங்களை மீட்டுத் தரச் சொல்லி.. நிச்சயமாய் அவை வெகு விரைவில் திரும்பும் என உறுதியாய் நம்புகிறேன்.
இந்நெருங்கிய நட்பும் கால ஒட்டத்தின் வேகத்தில் எத்தனை உறுதியாக நீடித்து நிலைக்கும் என்பதை நான் அறியேன்.அப்படி ஒரு வேளை நம் நட்புத்தூண் தூளானாலும் அதன் பிரதியாவது நிலைக்க வேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.
ஜூலை மாதம் வரும் உன் பிறந்த நாளுக்கு இன்றே வாழ்த்துகிறேன்.அதோடு நம் நட்பு ஆரம்பித்த நாளுக்காகவும்..:-)
Let God Bless All His Best Blessings over you Friend:-)
.
ஈரோடு கதிரிடம் எனக்குப் பிடிக்காதவை
Sunday, May 30, 2010
//1. நானும் பதிவு எழுதறேன், வலைப்பூவில எழுதறேன்னு சம்பளப் பணத்துல நெட் கனெக்சனும், லோன் போட்டு புதுசா லேப்டாப்பும் வாங்கினையே, முதல்ல அது பிடிக்கலை.//
இதே சாக்குல நீங்க லேப்டாப் வச்சிருக்கீங்கன்னு தம்பட்டம் அடிக்கிறீங்களே அது எனக்கு பிடிக்கல
//2. வலைப்பூ முகப்புல போடறதுக்கு கோயமுத்தூர் போயி 3500 ரூபா செலவு பண்ணி 18 விதமான கெட்டப்ல போட்டோ எடுத்துட்டு வந்தியே அது பிடிக்கலை.//
அவ்ளோ போட்டோ வச்சிருந்தும் பத்தாம் கிளாஸ்லயும் அஞ்சாம் கிளாஸ்லயும் எடுத்த போட்டோவைப் போட்டுட்டு இருக்கீங்க்ளா அது பிடிக்கல
//3. நாள் முழுதும் யோசிச்சு மூனேமுக்கால் வரி எழுதி பதிவு போட்டுட்டு, ராத்திரி 12.30 மணிக்கு உனக்கு தெரிஞ்ச எல்லார்த்துக்கும் என் பிளாக்கை படிங்கன்னு பில்டப்போட SMSம், ஈமெயிலும் அனுப்பறியே அது பிடிக்கலை.//
அதுக்கப்புறம் படிச்சியா அதப் பத்தி உன்னோட கருத்து என்னனு கேட்கறீங்களே அது எனக்குப் பிடிக்கல
//4. நீயே ஒரு ஹிட் கவுண்டர் செட் பண்ணிட்டு தினமும் குறைஞ்சது 200லிருந்து 300 வாட்டி பிரவுசரை Refresh பண்ணிறியே அது பிடிக்கலை.//
அந்த ஹிட்ட வச்சி நானும் பிரபல பதிவர்ன்னு பீலா உடறீங்களே அது எனக்குப் பிடிக்கல
//5. யாருமே பின்னூட்டம் போடறதில்லைனு கொஞ்சம் கூட வருத்தப்படாம, நியூமராலஜி புஸ்தகம் வாங்கி, உன்னோட ராசிக்கு பொருந்தற மாதிரி வித்தியாசமா 20 ஆண்கள், 25 பெண்கள் பெயர்களை செலக்ட் பண்ணி அப்பப்ப நீயே பின்னூட்டம் போட்டுக்கிறியே அது பிடிக்கலை.//
அந்தப் பின்னூட்டத்துல வந்த பாராட்டைப் பத்தி கான்ப்ரண்ஸ் கால் போட்டு மணிக்கணக்குல பேசறீங்களே அது எனக்குப் பிடிக்கல
//6. போன வாரம் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில “வலைப்பூ புகழ்”னு லேப்டாப் முன்னாலே நீ உட்காந்திருக்கிற மாதிரி போட்டோ போட்டு பிளக்ஸ் பேனர் வைச்சிருந்தியே அது பிடிக்கலை.//
அந்த பேனரை கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத ரயில்வே ஸ்டேஷன் பக்கம் வச்சிருந்தீங்களே..அதுல இருக்க உள்குத்து எனக்குப் பிடிக்கல
//7. “சிறந்த வலைப்பதிவு சிங்கம்”னு எம்ராய்டரிங் பண்ணின பிட்டுத் துணிய தினமும் சட்டைப்பையில் குண்டூசி வைச்சு குத்திட்டு, நெஞ்ச நிமிர்த்திட்டு போயி ரோட்ல கிடந்த கல்லுல கால் நகத்தை பேத்துக்கிட்டியே அது எனக்குப் பிடிக்கலை.//
அந்தக் கல்லுகிட்ட போயி... என் வலைப்பு பத்தி தெரியுமா இன்னிக்கு போஸ்ட் படிச்சியான்னு கருத்து கேட்டுட்டு இருந்தீங்களே அது எனக்குப் பிடிக்கல
//8. வேலை செய்ற கம்பெனியில உன் பேரு போட்டு கொடுத்த விசிட்டிங் கார்டுல வலைப்பூ முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குத்திட்டு, மார்கெட்டிங் போற இடத்திலெல்லாம் வலைப்பூ பத்தியே பேசுறியே அது பிடிக்கலை.//
இதுபோதாதுன்ன்னு ஐடி கார்டுல கூட வலைப்பூ பேர் வேணும்ன்னு கம்பெனிய டார்ச்சர் பண்றீங்களே அது எனக்குப் பிடிக்கல
//9. பொண்ணு பார்க்க தரகர்கிட்ட கொடுத்து விடுகிற ஜெராக்ஸ் ஜாதகக் குறிப்புல, பச்சை இங்க்ல பேருக்கு மேல “வலைப்பூ சிங்கம்”னு எழுதி கொடுக்கிறியே அது பிடிக்கலை.//
கல்யாணம் நடந்து பல வருஷன் ஆயும் பொண்ணு பாக்கற தொடர்ந்து ஜாதகம் குடுக்கற சாக்குலபொண்ணு பார்த்து வலைப்பூவை மார்க்கெட்டிங் பண்றீங்களே அது எனக்குப் பிடிக்கல
//10. சண்டபோட்டுட்டு இனிமேல் எழுத மாட்டேனு சபதம் போட்டவங்கள உண்மையினு நம்பி வருத்தப்பட்டியே அந்த முட்டாள் தனம் பிடிக்கலை.//
இப்பிடி நீங்க ஒரு நாளாவது சொல்லமாட்டீங்களான்னு நாங்க எதிர்பாக்கறோம்ன்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கறீங்களே அந்த அறிவாளித்தனம் எனக்குப் பிடிக்கல
//11. பத்து பாயிண்டுனு சொல்லிட்டு, யார் என்ன கேட்டுடப்போறாங்கனு, 13 பாயிண்ட் எழுதிறியே, இந்த கட்டுப்பாடில்லாத புத்தி பிடிக்கலை.//
எப்பிடியும் கும்முவோம்ன்னு தெரிஞ்சும் 10க்கு பதிலா 13 எழுதி என் வேலைய அதிகப்ப்டுத்துறீங்களே அது எனக்குப் பிடிக்கல
//12. கடைசியா, இத்தனை நாளா கஷ்டப்பட்டு, ஒரு மொக்கை கூட எழுதத் கையலாகாம, இந்தப் பதிவுக்குப்போய் லேபிள்ல “மொக்கை”னு போடப்போறியே அது சுத்தமா பிடிக்கலை. //
மொக்கையா எல்லாப் பதிவும் எழுதிட்டு இதுக்கு மட்டும் மொக்கைன்னு லேபிள் போடறீங்களே அது எனக்குப் பிடிக்கல
//13. கடை ஆரம்பிச்ச புதுசுல, விலை போகாத சரக்க மீள் இடுகைன்னு போட்டு யாவாரம் பண்றியே அது இன்னும் பிடிக்கல//
இடுகைய ஒரு தடவை படிக்கறதுக்கே நாங்க கஷ்டப்ப்டறோம்ன்னு தெரிஞ்சும் மீள் இடுகை வேற போடறீங்களே.. அந்தக் கொலவெறி எனக்குப் பிடிக்கல.
இதெல்லாம் என்னன்னு தெளிவா புரியலன்னா இங்க போயிப் பாருங்க

Labels:
ச்சும்மா
மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
Friday, May 28, 2010
பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாவே நல்லவங்களான என் அன்பு பாரதி அண்ணாக்கும் அண்ணிக்கும் மண நாள் வாழ்த்துக்கள்..
.
.
Labels:
வாழ்த்து
எக்ஸாம் பூதம்ம்ம்ம்ம்
Thursday, May 27, 2010
இந்த எக்ஸாம் பூதத்த எனக்கு அனுப்பின நல்லவங்க ரெண்டு பேரு
நான் ஆதவன்
தாரணிப்பிரியா.
எனக்கு அனுப்பிட்டு நான் எப்பிடில்லாம் அழுவறேன்னு பார்த்து
சிரிக்கலாம்ன்னு பிளான் போட்டு வெயிட்டிங்ல இருக்காங்க.இதுக்கு மேலயும் எழுதலன்னா பூதத்தை விட்டு கடிக்க விட்டுடுவாங்க.. அதனால இதோ என்னை பயமுறுத்த முயன்ற பூதத்தைப் பற்றின ஒரு அறிமுகம்..
கண்டிப்பான ஆசிரியர் குடும்பத்துல பிறந்ததால, படிப்பு மட்டுமே வாழ்க்கை என்னும் ஒரு பிம்பம்தான் சின்ன வயசுல எனக்கு தோற்றுவிக்கப்பட்டது.பள்ளிக்கு போக முன்னாடியே அண்ணா கூட சேர்ந்து அவன் படிக்கிறதெல்லாம் நானும் படிச்சிட்டதால சின்ன கிளாஸ்ல எல்லாம் எக்ஸாம்ஸ் பெரிசா பயமுறுத்தினதில்ல.தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மாலை 3 மணி நேரம் காலையில் அதிகாலை முதல் பள்ளிக்கு போகும் முன் ரெண்டு மணி நேரம் படிக்கணும்கிறது வீட்டில் கண்டிப்பான ரூல்.ஆனால் தேர்வு நாட்களில் கொஞ்சம் விதிமுறை தளர்த்தல்கள் உண்டு.படிக்க இஷ்டம்ன்னா படிக்கலாம்.இல்லன்னா விளையாடலாம் தூங்கலாம் அப்படின்னு.தேர்வு நாட்கள்ல அரை நாள் விடுமுறை வேறக் கிடைக்குமா..அதனால ரொம்ப ஜாலியான நாட்கள் அவை.தினமும் படிக்கிறது பள்ளிப் பாடம் மட்டுமில்லை.தமிழ் இலக்கியம்,அறிவியல் நூல்கள்,வரலாறு நூலகள்ன்னு எல்லாமும் படிக்கணும்.இதெல்லாம் படிக்கிறதால அவுட் ஆப் சிலபஸ் விவரங்களும் தேர்வில் எழுத முடியும்.அதெல்லாம் படிச்சி டீச்சர் எல்லாம் நிஜமாவே இந்தப் புள்ளக்கி ஏதோ தெரியும் போல இருக்குன்னு மார்க்கைப் போட்டுடுவாங்க.அப்படியே ஒரு பில்டப்ல காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்.
இப்பிடியே ஜாலியா போய்க்கிட்டு இருந்த நாட்களுக்கு எங்க அப்பா ஒரு ஆப்பு வச்சார்.9ம் வகுப்பு கூட்டிட்டு போயி அவர் பள்ளிக் கூடத்துலயே சேர்த்திட்டார்.அங்க என் அப்பாவோட பெட் ஸ்டூடன்ஸ் ரெண்டு அண்ணாக்கள் வேலை பார்த்தாங்க.ரெண்டு பேரும் கங்கணம் கட்டிக்கிட்டு என்னை கண்காணிப்பாங்க. தேர்வு அறைல பாதில வந்து எழுதற பேப்பர வாங்கிப் பார்த்து விடை தப்பா இருந்தா முறைச்சிட்டு போவாங்க.அப்பப்பா அந்த ரெண்டு வருஷத்துல இவங்க ரெண்டு பேரும் படுத்தின பாட்டுல எங்க அப்பாவோட கண்டிப்பு எல்லாம் பெரிசாவே தெரில.எக்ஸாம்ல கேள்விக்கு பதில் தெரியாதேன்னு பயப்பட்டத விட.. அய்யோ தப்பா எழுதினா இந்த அண்ணாங்ககிட்ட மாட்டிக்கணுமேங்கிறதே பெரிய கவலையா இருந்திச்சு..9வதுலயே இப்படின்னா பத்தாவதுல என்ன ஆகுமோன்னு பயந்திட்டு இருந்தேன்
10வதுல அரையாண்டுத் தேர்வு வரைக்கும் தான் இந்த பயம் எல்லாம். அரையாண்டு விடுமுறையில டைபாய்டும் மலேரியாவும் சேர்ந்து வந்திருச்சு. அதையெல்லாம் சரி பண்ணிகிட்டு திரும்ப ஸ்கூல் போகறதுக்குள்ள 3 ரிவிஷன் டெஸ்டும் முடிஞ்சி பப்ளிக் எக்ஸாம் வந்திருச்சு.உடம்பு சரியில்லாத புள்ளங்கிற கன்செஷன்ல எல்லா மிரட்டல்ல இருந்தும் ஒரு வருஷத்துக்கு எஸ்கேப் ஆயிட்டேன்.திரும்ப +2ல மிரட்டல்கள் ஆரம்பிக்கும் போது அந்த மாரியாத்தா அம்மை வடிவில வந்து காப்பாத்திட்டா..அப்போவும் பூதத்துல இருந்து எஸ்கேப் ஆயிட்டேன்.
அதுக்குள்ள எங்க அப்பா அம்மாக்கு படிப்பு விஷயத்துல கண்டிப்பான வளர்ப்பு முறை எனக்கு சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சிபோச்சு.காலேஜ்ல என்னை கண்டிக்கறவங்க யாரும் இல்லாம போயிட்டாங்க.ஆனால் காலேஜ்ல நமக்கும் பொறுப்புன்னு ஒன்னு தலைகாட்டிடுச்சோ இல்ல நானே ரியல் பூதம் ஆயிட்டேனோ தெரியல.எக்ஸாம் பூதத்தை பிரண்டு ஆக்கிட்டேன்.அதுக்கப்புறம் இன்னிக்கு வரைக்கும் அது என் பிரண்டாத்தான் இருக்கு.
எக்சாம் பூத்துக்கு பயப்படாமயே காலம் முடிஞ்சிதுன்னு பார்த்தேன்.ஆனால் புராஜக்ட் ரிவ்யூ பூதம்ன்னு ஒண்ணு வந்திச்சு.ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ... நிஜமாவே ரிவ்யூ கமிட்டில இருக்கறவங்க எல்லாம் பூதமாய்த்தான் தெரியுவாங்க.. ரூம் போட்டு யோசிச்சி கேள்வி கேப்பாய்ங்களோ...அடசாமி.. கரெக்டா எங்க திணறுவேன்னு கரெக்டா கண்டுபிடிச்சு அதுலயே சுத்து சுத்து வருவாய்ங்க..வடிவேல் பார்த்திபன் கிட்ட படற பாட்டை விடக் கொடுமை அது..எக்ஸாம் பீவர்,எக்ஸாமோபோபியா எல்லாம் சேர்ந்து வரவைக்காம விட மாட்டாங்க...
ஹி..ஹி..ஆனாலும் நாங்க சமாளிப்போமில்ல.
இவ்ளோ பொலம்பிட்டு என் ஸ்டூடண்ஸ சும்மா விடுவேன்னு நினைக்கறிங்க? நோ..நோ.. நாம பட்ட கஷ்டத்துக்கு பழி வாங்கிறோமில்ல...:))
மேலும் இந்த எக்ஸாம் பூதத்தைப் பற்றிப் புகழ(!!??!!) நான் அழைப்பது
டாக்டர் ரோகிணி,சுபா டீச்சர், கார்த்திகை பாண்டியன்.
மஹா

தொடர்பதிவு,
பள்ளிக்கால நினைவுகள்
தேவதைக்கு வாழ்த்துக்கள்
Thursday, May 20, 2010
அன்பின் தேவதையாய் ஜொலிக்கும் நம் ரம்யா அக்காக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேனுங்கோ
அக்காவைப் பத்தி தெரியாதவங்க..இங்க போய் பாருங்க. அவங்க சாதனையின் அருமை புரியும்.. இங்க போய் பாருங்க அவங்க நட்பின் பெருமை தெரியும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
.
Labels:
வாழ்த்து
உன்னாலே
Thursday, May 13, 2010
நீ இந்நேரம் விழித்திருப்பாயோ
என்னும் எண்ணத்திலேயே
தினமும் போனது அதிகாலை
உறக்கத்தின் சில மணிகள்
நீ அழைக்கையில் அலைபேசியில்
ஒளிரும் உன் பெயரைப்
பார்த்தே பேசப்படாமல்
போனது உன் அழைப்புகள்
நீ கேட்கும் கேள்விகளுக்கு
சிந்தனை நிலையின்றி உளறிக் கொட்டி
பின் தலையில் தட்டி யோசித்தே
போகிறது பல நிமிடங்கள்
.
Labels:
கவிதை
ஒற்றை நிமிடம் சிந்திப்பீர்
Monday, May 3, 2010
இன்றைய வாழ்வியல் முறையில் குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்பது கலாச்சாரமாகி விட்டது.அதற்கு பெரும்பாலும் சொல்லப்படும் காரணம் இன்றைய போட்டி மிகுந்த உலகில் ஒரு பிள்ளைக்கு அனைத்து வசதிகளும் தந்து சிறந்த குடிமகனாக வளர்ப்பது பெரும்காரியம்.ஒரு குழந்தையின் மீது நம் கவனம் அனைத்தையும் செலுத்தும்போது இரண்டு மூன்று பிள்ளைகளை வளர்ப்பதை விட சிறப்பாக வளர்க்கலாம்.மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிடும் வகையிலும் ஒற்றைப் பிள்ளைகள் என்பது சிறந்தது.
இவை அனைத்தும் ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள்தான் என்றாலும்,ஒற்றைப் பிள்ளைகளின் மன வளர்ச்சி,மற்றவர்களுடன் ஒத்துப் போகும் தன்மை,குழு மனப்பான்மை என்பதெல்லாம் சகோதர சகோதரிகளோடு வளர்ந்த பிள்ளைகளோடு ஒப்பிடும்போது சிறிது குறைவாகவே தோன்றுகிறது.ஒற்றை பிள்ளைகளாய் வளரும்போது பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை என்பது சிறிதும் வளர்வதில்லை.அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நண்பர்கள் சரியான அமையாவிடில் அவர்களின் வாழ்க்கைப் பாதை எளிதாக திசை திருப்பப்பட சாத்தியக் கூறுகள் அதிகம்.அன்புக்கான ஏக்கம் நிச்சயமாய் அவர் மனதில் இருக்கும். அந்த ஏக்கம் தவறானவர்களால் அவர்களுக்கு தகுந்தவாறு கையாளப்படலாம்
பெற்றோர் எவ்வளவுதான் அன்பாக இருந்தாலும்,அவர்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டாலும்,முதல் தலைமுறையின் சிந்தனைக்கும்,அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளி என்பது குழந்தகளின் மனதில் ஒரு வேற்றுமையை உருவாக்கும் என்பது நிச்சயம்.அப்படிப்பட்ட குழந்தகள் திசைமாறிப் போவதற்கான சாத்தியங்களும் அதிகம்.கூட்டுக் குடும்பங்களும் சிதறிப் போன இக்காலத்தில் ஒற்றைக் குழந்தைகளுக்கு உறவுகள் என்பதின் அருமையும் புரியாமல் போகும்.
கொஞ்சம் யோசியுங்கள் உங்கள் உடன் பிறப்புகளோடு சிறு வயதில் நீங்கள் வாழ்ந்த வாழ்வின் அருமை உங்கள் ஒற்றைக் குழந்தைக்கு கிடைக்குமா. சித்தப்பா, பெரியப்பாக்களும், அத்தை, மாமாக்களும் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் உங்கள் குழந்தை சந்திக்கப் போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.அதற்கேற்ப அவர்களை தயார்ப்படுத்துங்கள்.
ஒற்றைக்குழந்தையாய்ப் பிறந்தாலும் அதன் சின்ன சின்ன சந்தோஷங்களில் அக்கறை என்னும் பெயரில் குறுக்கே நிற்காதீர்கள்.விடுமுறை நாட்களில் தூரத்து உறவுகளில் உள்ள உறவுகளுடனாவது ஒட்டி உறவாட விடுங்கள்.அதன் மூலம் அவர்களுக்கு உறவுகளின் அருமை புரிய வரும்.துன்பத்தில் தோள் கொடுக்க நமக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்னும் தன்னம்பிக்கை வளரும்.

எண்ணங்கள்
ஏனோ..என்ன..எதற்கு
Saturday, May 1, 2010
அதிகாலைப் பனியாய்
காலைக் கதிரவனாய்
மதியச்சோம்பலாய்
மாலை மயக்கமாய்
பின்னிரவுக் குளிராய்
அனைத்திலும் நீயிருந்தும்
உன் அருகாமைக்கான ஏக்கம் ஏனோ
**********************************************************************************
நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன
நானென்பதே நீயான பின்னும்
நாமென சொல்லித் திரிவது எதற்கு

Subscribe to:
Posts (Atom)