ஐ லவ் யூ டாடி

Wednesday, September 22, 2010
அப்பா.. உங்களுக்கு ஒரு லெட்டர் எழுதணும்ன்னு நானும் ரொம்ப நாளா நினைச்சு தள்ளிப் போட்டுட்டே இருந்தேன்..இன்னிக்கு எழுதிதான் பாக்கலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
அப்பா.. நான் செய்யும் எல்லா விஷயத்தையும் நீங்க ஏத்துக்கறதில்லைன்னு எனக்கு ஒரு மனக்குறை பல நாட்கள் இருந்துருக்கு.. வேற வீட்ல பொறந்திருந்தா நல்லா இருந்துருக்கும்ன்னு கூட நெனச்சிருக்கேன்.ஆனால் நான் வளர வளரத்தான் தெரியுது.. நீங்க ஏத்துக்காத என்னோட எல்லா முடிவுகளும் எனக்கு நன்மைதான் தந்திருக்கு. சின்ன வயசுல என் கிட்ட அதிகமா இருந்த பொம்மைகள எடுத்து பக்கத்தில் இருந்த ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்த கணம், என்னை வெளியில் கூட்டிப் போறேன்னு சொல்லிட்டு,கிளம்பறப்ப‌ யாரோ ஒருத்தர் உதவின்னு வந்தவ உடனே அவ‌ங்களோட போன நிமிடம்ன்னு பல நேரங்கள்ல நினைச்சிருக்கேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல புள்ள கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் நீங்கன்னு .. ஆனால், சமீப நாட்களாகத்தான் உணர்கிறேன். உங்களுக்கு மகளாப் பிறக்க நான் தான் கொடுத்து வைத்திருக்கிறேன்...

நான் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும் உடனே மன்னிக்கவும் மறக்கவும் முடிகிறது உங்களால்.. ஆனால் நீங்கள் செய்யும் சரியான விஷயங்களையும்,அது என் விருப்பத்திற்கு மாறாய் இருந்தால் என்னால் ஏற்க முடியாமல் போகும் தவறு இனிமேல் நடக்காது...

எல்லாக் குழந்தைகளையும் போல சாதாரண சந்தோஷங்களுடன் என்னை நீங்கள் வளர்க்கவில்லை எனக் கவலைப்பட்டிருக்கிறேன்..ஆனால் அசாதாரண அதீத சந்தோஷங்களை எனக்காக சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
"அப்பாவாட்டமே புள்ள"அப்படின்னு சிலர் சொன்னப்போல்லாம் "இல்லை எங்கப்பா மாதிரி நான் இல்லை.. ஊருக்கு உழைக்கிறேன்னு லூசுத்தனமெல்லாம் நான் பண்ண மாட்டேன்" என நினைத்த கணங்களுக்காய் வெட்கித் தலைகுனிகிறேன்.

பண‌ம் ம‌ட்டுமே வாழ்க்கை அல்ல‌.. அது அல்லாத‌ ம‌ற்றவைதான் அதி அற்புத‌மான‌வை என்ப‌தை உண‌ர‌ வைக்கிறீர்கள் உங்க‌ள் வாழ்க்கையால்.அதை உங்க‌ளிட‌மிருந்து ம‌ற்றவ‌ர்க‌ள் சுல‌ப‌மாய்ப் ப‌ற்றிக் கொண்டார்க‌ள்.என‌க்குத் தான் நாட்க‌ள் அதிக‌ம் எடுத்திருக்கிற‌து.வெகு சாதார‌ண‌ ச‌ந்தோஷ‌ இழ‌ப்புக‌ளுக்காய் நான் அழுத‌ க‌ண‌ங்க‌ளில், நீங்க‌ள் க‌ண்முன் காட்டிய‌ அதிச‌ய‌ங்க‌ளைத் த‌வ‌ற‌ விட்டிருக்கிறேன்.

தவறிய கணங்களுக்காய் வருந்தப் போவதில்லை நான்.வரப் போகும் கணங்களில் உங்கள் எண்ணங்களைச் செயலாக்கும் மகளாய் வாழ்ந்து காட்டப் போகிறேன்.
ஐ லவ் யூ டாடி

.

57 comments:

ரோகிணிசிவா said...

vow raaji m,
oru unarchi poorvamaana kaditham ,
un postla irunthu konjam lines copy panni daddy ku oru letter nanum elutharen ,
enga appa kita nan innum i love you sonnathu illa
en frnds , amma ,thambi, kooda work pandravnaga kita solrathuku iruntha thairiyam appa kita solla vanthathu illa
ippa i want to shed that and tell , atleast here "daddy i love u so much , i have hurted u many a times, i feel gilty about it, i love u daddy , ungala suspect paninathuku im really feeling bad ,
will u forgive and forget daddy ,

thank u raajii , u helped me to come out my inhibitions

நிஜமா நல்லவன் said...

Present:)

Unknown said...

really good... its d reflection of every kid in the world... ovvoru varigalum unarvugal... nantri... ovvoruvarukkum 'appaa'thaan muthal role model, hero ellam... we really missed those inpiring moments when he showed... its right time to realize that for everyone... I L U appa...

KARTHIK said...

முடியல :-))

KARTHIK said...

உங்க அப்பா பாத்தாங்கன்னா ஒரு நாலுநாளைக்கு துங்கமாட்டாங்க :-))

☀நான் ஆதவன்☀ said...

:)))) க்யூட். இதை நேரடியா அப்பாகிட்ட சொல்லுங்க குருவே

அபி அப்பா said...

ம்.... இதுக்கு நான் காமடி பின்னூட்டம் போடனுமா? அல்லது சீரியசான பின்னூட்டம் போடனுமான்னு யோசிக்கிறேன்.

==================

இப்பவாவது அப்பாகாரங்க எது செஞ்சாலும் நல்லதுக்கு தான் செய்வாங்கன்னு புரிஞ்சுதே

=================

நீ ஒரு பெண், படிச்சவ, நாலும் தெரிஞ்சவ...இதோ விலங்குகளை பாரு.. கொஞ்ச நாள் கழிச்சு அம்மா அப்பாவை விட்டு போயிடும். சும்மா அம்மா என்றழைக்காத உயிரில்லையேன்னு பாட்டு பாடிகிட்டா இருக்கும். அப்பா என் தெய்வம்னு லெட்டர் எழுதிகிட்டா இருக்கும். உன் சம்பளத்துக்கு அப்பா, புருஷன்(வந்தபின்னே) எல்லாம் உன் காலடில தானே கிடக்கனும். அச்சம் மடம் நாண்ம், பயிற்பு இன்ன பிற கந்தாயங்கள் எல்லாம் சும்மா வெங்காயம். நீயோ 4 பேருக்கு அறிவை ஊட்டும் வாத்தியார். சும்மா அடிச்சு தூள் பண்ண வேண்டாமா?
++++++++++++++++

ராஜி உன் இந்த கடிதம் படித்தவுடன் எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. இப்படி ஒரு கடிதம் நான் இது வரை படிச்சது இல்லை... வெல்டன்.. நான் இதை பிரிண்ட் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க போகிறேன்

++++++++++++++++++++++++

ராஜி! லேட்டஸ்ட் ட்ரண்ட் எப்படி இருக்கோ அதுக்கு தகுந்த பின்னூட்டத்தை எடுத்துகிட்டு மீதியை என் ஐடிக்கு அனுப்பிவிடவும்:-))

ரோகிணிசிவா said...

@ நிஜமா நல்லவன்
enna comment anna ithu , mudiyala ,
oru ponna petha daddy ivlav thaan solratha ,inum unga kita niriaya ethirparkirom

ஜோசப் பால்ராஜ் said...

பேச்சு வரல.
நல்லா எழுதியிருக்கீங்க மேடம்.

☀நான் ஆதவன்☀ said...

//ஐ லவ் யூ டாடி//

குருவே முதல்ல ஐ லவ் யூ தாடின்னு படிச்சுட்டு உங்களுக்கு தாடி வச்சவங்கள ரொம்ப பிடிக்கும்னு நினைச்சுட்டேன் :)

Subha said...

உணர்ச்சி ததும்பும் வரிகள் ராஜி. இந்தப் பதிவை ‘காப்பியடிக்க’ ரைட்ஸ் உண்டா?

DR.K.S.BALASUBRAMANIAN said...

பலரது மனதில் இருக்கும் மடல்.! நீங்கள் எழுதிவிட்டீர்கள்...அருமை...!

விஜி said...

ம்ம் ஒரு போன் வேனும்னா நேரடியாவே கேட்டா வாங்கித்தருவார், எதுக்கு இப்படி ஐஸ் வைக்கரே, :))

விஜி said...

கதிர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...புள்ள கொஞ்ச நாள் ரொமான்ஸ் கவுஜ எழுதுச்சு யாரும் கண்டுக்கலை, இப்ப பாருங்க டைரக்டா அப்பாவுக்கு ஆரம்பிச்சிருக்கு :))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இப்பவாவது அப்பாகாரங்க எது செஞ்சாலும் நல்லதுக்கு தான் செய்வாங்கன்னு புரிஞ்சுதே//

repeatey

Sanjai Gandhi said...

இன்னொரு வீட்டுக்குப் போகும் போது எல்லாப் பொண்ணுங்களும் இப்டி தான்.. ராஜி மட்டும் விதிவிலக்கா என்ன? :)

Sanjai Gandhi said...

// Subha said...

உணர்ச்சி ததும்பும் வரிகள் ராஜி. இந்தப் பதிவை ‘காப்பியடிக்க’ ரைட்ஸ் உண்டா?//

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ.. முடியல..

sakthi said...

ஆனால், சமீப நாட்களாகத்தான் உணர்கிறேன். உங்களுக்கு மகளாப் பிறக்க நான் தான் கொடுத்து வைத்திருக்கிறேன்.

உணர்ந்தால் சரி டீச்சரம்மா

ஆரூரன் விசுவநாதன் said...

அடேங்கப்பா....எம்புட்டு பாராட்டு, எம்புட்டு மால, மருவாத,????

நெசமாலுமே இம்புட்டு ரசிகர்களா?

ம்ம்ம்ம்.....சரி..சரி...வாத்தியாரம்மா படிச்சபுள்ள, அது எழுதினா அதுல ஒரு அர்த்தமிருக்கும்...

ம்ம்ம்ம்.........

ஈரோடு கதிர் said...

நெகிழ்ச்சி ராஜி!
இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்


ம்ம்ம்.

எப்படியோ ஒரு பத்து வருசம் கழிச்சு, எனக்காகவும் ஒரு இடுகை வரும்... என்னை குழுமத்துல ஓட்டினதுக்கு, எதிர் கவுஜ போட்டதுக்கெல்லாம் மன்னிப்பு வேற கேக்குமே இந்த புள்ள


@@ விஜி
பாசமலரின் பாசத்திற்காக நோ கும்மி!
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

ஆயில்யன் said...

//நீங்க ஏத்துக்காத என்னோட எல்லா முடிவுகளும் எனக்கு நன்மைதான் தந்திருக்கு. //

எச்சாட்டிலி சூப்பர் வரிகள்!!!

நானும்,என்னை நினைக்கும்போது என் குடும்பத்தினரை இப்படித்தான் கையெடுத்து கும்பிடதோணும்!

ஆயில்யன் said...

//ராஜி உன் இந்த கடிதம் படித்தவுடன் எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. //

ஐயோ அப்புறம் நீங்க அழுது உங்க சோகம் ஊரையே தாக்கிடுச்சுன்னு தடுத்திட்டீங்களா அண்ணே :)

//இப்படி ஒரு கடிதம் நான் இது வரை படிச்சது இல்லை... வெல்டன்.. நான் இதை பிரிண்ட் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க போகிறேன்///

ஒரு வார்த்தை, நினைக்கும்போதெல்லாம் எடுத்து படிப்பேன் சொல்லுறாரா இந்த அண்ணே அவ்வ்வ்வ் :)))))))))

'பரிவை' சே.குமார் said...

அப்பாவுக்கான கடிதத்தில் அவர்களின் கண்டிப்பின் பின்புலம் விளங்கியதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் தந்தை இதை படித்தால் மிகவும் சந்தோசப்படுவார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

straight from the heart.. nice..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உறுத்திய மனச்சாட்சியை உங்களுக்கருகில் அமர்த்தி எழுதியதாக உணரமுடிகிறது!
(இலக்கிய நயத்துக்கான முயற்சி)

:)))
இனி நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிர்ர்ர்ரேன்!
:)))

Anonymous said...

super good girl...

*இயற்கை ராஜி* said...

@ Rohini..

Feeling happy abt u dear:-)

*இயற்கை ராஜி* said...

@நிஜமா நல்லவன் ... சொல்ல வேண்டிய விதத்தில் அட்டென்டன்ஸ் சொல்லாததால் ஆப்சென்ட் மார்க் செய்யப்படுகிறது

*இயற்கை ராஜி* said...

Thanks for your visit and comment.. Yes.We

*இயற்கை ராஜி* said...

@ கார்த்திக்.... வாங்க வி.ஐ.பி.... என்ன காத்து இந்தப் பக்கமெல்லாம் அடிக்குது



எங்க அப்பா தூக்கம் கெடக்கூடாதுன்னுதான் அவர் கிட்ட காட்டாம இங்க போட்டிருக்கேன்

*இயற்கை ராஜி* said...

வாங்க ஆதவன்.. சொல்லிரலாம் ..அப்புறம் நான் எவ்ளோ ரவுடின்னு தெரிஞ்சி போயிருமே... எங்கப்பாக்கு..அதனால தான் யோசிக்கறேன்

*இயற்கை ராஜி* said...

@ அபி அப்பா.. இதுக்கு ரிப்ளை சீரியஸா போடணுமா? இல்ல உங்கள ரெண்டு கும்மு கும்மணுமா?

*இயற்கை ராஜி* said...

@அபி அப்பா.........

அப்பாக்கள் நல்லதுதான் செய்வாங்கன்னு தெரியும். ஆனாலும் சில பல பிராக்டிகல் பிரச்சினைகளால கோவம் வரத்தானே செய்யுது

*இயற்கை ராஜி* said...

@ அபி அப்பா.......

பின்னூட்டம் என்னன்னே புரியலையே.. இதுக்கு நான் ரிப்ளை வேற போடணுமா? எதுக்கு வம்பு ராஜி..எஸ்கேப்

*இயற்கை ராஜி* said...

வாங்க ஜோசப்...ஹ்ம்ம்ம்.... நன்றி

*இயற்கை ராஜி* said...

@ ஆதவன்... பஸ்ஸூ தெரியும்மா.. பஸ்ஸூ...அங்க வாங்க ....யாரப் பிடிக்கும்ன்னு தெளிவா கிளாஸ் எடுக்கறேன்

*இயற்கை ராஜி* said...

@ சுபா..

நன்றிப்பா.. உங்களுக்கு இல்லாத ரைட்ஸ்ஆ?

*இயற்கை ராஜி* said...

@dr balas..

நன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

@ விஜி....

எதுக்கு எதுக்கும் முடிச்சு போடறீங்க.. ஹ்ம்ம்( கம்பெனி சீக்ரெட் எல்லாம் வெளில சொல்லக்கூடாது)

*இயற்கை ராஜி* said...

என்ன எழுதினாலும் கதிர் அண்ணாகிட்ட கம்ப்ளைண்டா.? எதுக்கு இப்பிடில்லாம்.. பயம்மாருக்கு... பாருங்க எனக்கு ஜூரம் வந்துருச்சு

*இயற்கை ராஜி* said...

@T.V.ராதாகிருஷ்ணன்

அண்ணா.. வாங்க வாங்க.. நலமா? உங்களுக்கு கூட்டு சேர வேற‌ நல்லவங்க யாருமே கெடைக்கலியா?:‍)))))))))))))))))

*இயற்கை ராஜி* said...

சஞ்சய்... அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சாச்ச்சா.. சரி..சொல்லுங்க இப்போ எந்த மாசம் கல்யாணம்

*இயற்கை ராஜி* said...

@ சஞ்சய்.... ஹ்ஹ்ம்ம்... பொறாமை

*இயற்கை ராஜி* said...

சக்திக்கா.. நான் நல்ல புள்ளன்னு உங்களுக்கு தெரியாதா....:‍)

*இயற்கை ராஜி* said...

@ஆரூரன் விசுவநாதன்

வாங்க தல.. வராதவகல்லாம் வந்துருக்கீங்க...:-)

*இயற்கை ராஜி* said...

@ கதிர்....

ம்ம்..எழுதியிருக்கலாம்ண்ணா... இன்னொரு தடவை எழுதிட்டா போச்சு...


//எப்படியோ ஒரு பத்து வருசம் கழிச்சு, எனக்காகவும் ஒரு இடுகை வரும்... என்னை குழுமத்துல ஓட்டினதுக்கு, எதிர் கவுஜ போட்டதுக்கெல்லாம் மன்னிப்பு வேற கேக்குமே இந்த புள்ள
//


இப்பிடி வேற நெனப்பிருக்கா சாமி?... :‍)))

*இயற்கை ராஜி* said...

@ஆயில்யன்

வாங்க பாஸ்.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. எல்லா அப்பா நெலமையும் இதுதான் போல..

*இயற்கை ராஜி* said...

வாங்க குமார்.. நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்

*இயற்கை ராஜி* said...

@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி தோழா

*இயற்கை ராஜி* said...

@அத்திவெட்டி ஜோதிபாரதி

நன்றிங்க..

கவிதையா..அது எப்போ எழுதுவேன் என்னை போட்டுத் தள்ளலாம்ன்னு ஒரு கும்பலே வெயிட்டிங்க...

*இயற்கை ராஜி* said...

நன்றி மஹா

காலப் பறவை said...

அருமை

நிலாமதி said...

அப்பாக்களின் அருமைஇருக்கும்போது தெரிவதில்லை உணர வைத்தமைக்கு நன்றி ..........

*இயற்கை ராஜி* said...

வாங்க காலப் பறவை.. நன்றி

*இயற்கை ராஜி* said...

@நிலாமதி


எனக்கெல்லாம் எங்க அப்பா இருக்கும் போதே அருமை தெரிஞ்சிருக்குது பாருங்க நிலாமதி... அப்போ நான் நல்ல புள்ள தானே:‍))))))))))))

Sakthivel said...

Amazing...........Nice father and daughter.......All the best!!!

அன்பரசன் said...

உணர்வுப்பூர்வமான ஒரு கடிதம்.
அருமை.