ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்வது மனநிறைவைத் தருகிறதா?

Monday, July 27, 2009
இன்றைய அவசர உலகில் ஒரு குடும்பத்தில் இருக்கும் 3,4 பேர்களது, தேவையைப் பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கும் காலகட்டத்தில்,எண்ணிக்கையில் அதிகமான ஆதரவற்றோரைப் பராமரிக்கும் இல்லங்கள் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதே கஷ்டம்தான். இதை உணர்ந்து நம்மில் பலர், பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆதரவற்றோர் வாழும் இல்லங்களுக்குப் போவதும் அவர்களுக்கு உதவிகள் தருவதும் வாடிக்கையாகக் கொண்டிரருக்கின்றனர்.அத்தகைய செயல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளது,அவர்களது அடிப்படைத்தேவைகள் நிறைவேறுகின்றன‌ என்றாலும்,அதுஅவ்ர்களுக்கு மனநிறைவு தரும் செயலாக இருக்குமா?
அதனை மன நிறைவுதரும் செயலாக எப்படி மாற்றலாம்?
1.அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் முதலில் தொடர்பு கொண்டு அவர்களின் தேவை என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதை விட, அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பது சிறந்தது.

2.இனிப்பு,பழவகைகள் அல்லது ஏதேனும் பொருட்களை வரிசையில் நிறுத்தி கொடுக்காதீர்கள்.அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே பகிர்ந்தளியுங்கள்.முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வாறு வாங்குவது அவர்களின் தன்மானத்தை காயப்படுத்தலாம்

3.பழைய ஆடைகள், பழைய நோட்டுகள் போன்றவற்றைத் தரும்போது அவை உபயோகிக்கும் நிலையில் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளைத் துவைத்து, கிழிந்திருப்பின் அவற்றைத் தைத்துக் கொடுங்கள்.பல நோட்டுகளில் இருக்கும் உபயோகப்படுத்தாத பக்கங்களை ஒரே நோட்டாக பைண்ட் செய்தோ அல்லது தைத்தோ கொடுங்கள்.

4.தீபாவளி,பொங்கல்,புது வருடம் போன்ற பண்டிகை நாட்களில் ஸ்பான்சர் செய்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். நன்கொடைகளும் கிடைக்கும். அதனால் நீங்கள் ஏதேனும் கொடுப்பதையோ அல்லது அந்த இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் பொழுதைக் களிப்பதையோ சாதாரண நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள்

5.அங்கே செல்லும்போது, படாடோபமான உடைகளைத் தவிர்த்து,முடிந்தவரை எளிமையாய்ச் செல்லுங்கள்
6.அங்கு குழந்தைகள் இருப்பின், அவர்களுடன் உங்கள் குழந்தகளை விளையாட அனுமதியுங்கள்

7.நீங்கள் கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும். எனவே அவர்களுடன், சிறிது நேரமாவது செலவிடுங்கள்

8.அங்குள்ளவர்களது சிறு,சிறு தேவைகளைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முயலுங்கள்

9.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு இல்லங்களுக்குச் செல்வதை விட ஒரே இல்லத்திற்கு அடிக்கடி‌ செல்வது ஒரு அந்நியோன்யத்தை அவர்களிடம் உண்டாக்கும்

10.நீங்கள் ஏதேனும் ஸ்பான்சர் செய்யும் நேரங்களில் மட்டும் தான் அங்கு செல்ல வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம்.

இவற்றைப் பின்பற்றினால் அவர்களது ஏக்கங்களும் ஒரு முடிவுக்கு வரும்.நமக்கும் உறவுகளின் எண்ணிககை அதிகரித்ததைப் போன்ற ஒரு தெம்பைத் தரும்.

எனக்குத் தோணுணத சொல்லிட்டேன்.ஏதேனும் வழி விட்டுப்போயிருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
பதிவு பயனுள்ளதாக இருந்தால்,தமிழ்மணம்,தமிழிஷ்ல ஓட்டுப் போட்டிடுங்க. நிறைய பேர் படிக்கட்டும்

.

42 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

. நல்லத தான் சொல்லி இருக்கீங்க

ஸ்வாமி ஓம்கார் said...

எப்படிங்க இப்படியெல்லாம்?

என்னை பார்க்க எப்போ வருவீங்க? நாங்க எல்லாம் ஆதரவு அற்றவங்க.

:)

நட்புடன் ஜமால் said...

தமிழ் மணத்திற்கும் அனுப்பவில்லை

தமிழிஸிலும் சேர்க்கவில்லை

ஏனுங்கோ

நட்புடன் ஜமால் said...

சொல்லியிருக்கும் விடயம் நலவாய்...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க தோழி..

எம்.எம்.அப்துல்லா said...

நாங்க எல்லாம் ஆதரவு அற்றவங்க.

:)

//

அனாதை யாஅரும் இல்லை அவனேதான் தந்தை!

Anbu said...

நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க அக்கா...

ஜோசப் பால்ராஜ் said...

//நீங்கள் கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும். எனவே அவர்களுடன், சிறிது நேரமாவது செலவிடுங்கள் //

இது தான் மிக மிக முக்கியம்.
கட்டாயம் நாம் செய்யவேண்டியது இது தான் . சாப்பாடு கொடுக்கின்றீர்கள் என்றால் முடிந்தால் நீங்களும் அவர்களோடு அமர்ந்து சாப்பிடுங்கள். அது நீங்கள் கொடுக்கும் உணவைவிட அதிக நிறைவை அவர்களுக்குத் தரும்.

ரெட்மகி said...

நல்லா சொன்னிங்க ,,,,,

butterfly Surya said...

அருமையாய் சொன்னதற்கு நன்றி.

அன்புடன் அருணா said...

ரொம்ப அருமையான பதிவும்மா...பூங்கொத்து!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு

தேவன் மாயம் said...

நல்ல
கருத்துக்கள் தோழி!!!

தேவன் மாயம் said...

மீன்தொட்டி கலக்கல்!

ப்ரியமுடன் வசந்த் said...

எண்ணங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ராஜி

ராம்மோகன் said...

Here is Your Thoughts:

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=3346339&tid=5327644151730682641&na=2&nst=8

▒▓What is Saaral?...
Our society today struggles to provide for the impoverished sections of the population, especially orphaned children and the aged poor, who increasingly find themselves bereft of support systems to rely upon. Saaral (a Tamil word meaning "drizzle", reminiscent of gentle rain on parched land) comprises young students and professionals who unite to work for the upliftment of the marginalized and downtrodden in society.

நேசமித்ரன் said...

அருமையான பதிவு

sakthi said...

அருமையான பதிவு ராஜி

ஸ்வாமி ஓம்கார் said...

நாங்க எல்லாம் ஆதரவு அற்றவங்க.

:)

//

அனாதை யாஅரும் இல்லை அவனேதான் தந்தை!

அப்போ அம்மா யாரு? :)

*இயற்கை ராஜி* said...

// குறை ஒன்றும் இல்லை !!! said...
. நல்லத தான் சொல்லி இருக்கீங்க//

ந‌ன்றியும் சொல்லிக்க‌றேனுங்க‌

*இயற்கை ராஜி* said...

//ஸ்வாமி ஓம்கார் said...
எப்படிங்க இப்படியெல்லாம்?

என்னை பார்க்க எப்போ வருவீங்க? நாங்க எல்லாம் ஆதரவு அற்றவங்க.

:)//
ஜி..த‌ங்க‌ள் சித்த‌ம்..என் பாக்கிய‌ம்:‍)
உங்க‌ளுக்குப் ப‌தில் எங்க‌ அப்துல்லா அண்ணா சொல்லிட்டார்:‍))

*இயற்கை ராஜி* said...

//நட்புடன் ஜமால் said...
தமிழ் மணத்திற்கும் அனுப்பவில்லை

தமிழிஸிலும் சேர்க்கவில்லை

ஏனுங்கோ//

நீங்க‌ அனுப்புவிங்க‌ன்னுதானுங்கோ அண்ணா..

*இயற்கை ராஜி* said...

//நட்புடன் ஜமால் said...
தமிழ் மணத்திற்கும் அனுப்பவில்லை

தமிழிஸிலும் சேர்க்கவில்லை

ஏனுங்கோ//

நீங்க‌ அனுப்புவிங்க‌ன்னுதானுங்கோ அண்ணா..

*இயற்கை ராஜி* said...

//நட்புடன் ஜமால் said...
சொல்லியிருக்கும் விடயம் நலவாய்...//
ந‌ன்றி .ன்னா

*இயற்கை ராஜி* said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க தோழி..
//
ம்ம்...இவ‌ற்றைக் க‌டைப்பிடித்தால் மிக‌ ந‌ல்ல‌து தோழா

*இயற்கை ராஜி* said...

///எம்.எம்.அப்துல்லா said...
நாங்க எல்லாம் ஆதரவு அற்றவங்க.

:)
//

அனாதை யாஅரும் இல்லை அவனேதான் தந்தை!//
சூப்ப‌ர‌ண்ணா:‍))))

*இயற்கை ராஜி* said...

Anbu said...
நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க அக்கா...//
.ம்ம்ம்..வாங்க‌ அன்பு

*இயற்கை ராஜி* said...

// ஜோசப் பால்ராஜ் said...
//நீங்கள் கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும். எனவே அவர்களுடன், சிறிது நேரமாவது செலவிடுங்கள் //

இது தான் மிக மிக முக்கியம்.
கட்டாயம் நாம் செய்யவேண்டியது இது தான் . சாப்பாடு கொடுக்கின்றீர்கள் என்றால் முடிந்தால் நீங்களும் அவர்களோடு அமர்ந்து சாப்பிடுங்கள். அது நீங்கள் கொடுக்கும் உணவைவிட அதிக நிறைவை அவர்களுக்குத் தரும்.//

க‌ஷ்ட‌ப்ப‌ட்டு போஸ்ட் போட்டா.. ந‌ச்ன்னு ஒரு பாயிண்ட் அ பின்னூட்ட‌த்தில‌ சொல்லிபுட்டீயளே...... முழு போஸ்ட்டையும் ஒரு லைன்ல முடிச்சிட்டேங்களே..உங்களை.....ம்ம்..திட்டவா முடியும்..பாராட்டிகறேன்:‍((

*இயற்கை ராஜி* said...

//ரெட்மகி said...
நல்லா சொன்னிங்க ,,,,,//

ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

வண்ணத்துபூச்சியார் said...
அருமையாய் சொன்னதற்கு நன்றி.

ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

அன்புடன் அருணா said...
ரொம்ப அருமையான பதிவும்மா...பூங்கொத்து!

ம்ம்ம்.. நன்றிங்க‌ அக்கா

*இயற்கை ராஜி* said...

// T.V.Radhakrishnan said...
அருமையான பதிவு//
ந‌ன்றிங்க‌ அண்ணா

*இயற்கை ராஜி* said...

//தேவன் மாயம் said...
நல்ல
கருத்துக்கள் தோழி!!!

தேவன் மாயம் said...
மீன்தொட்டி கலக்கல்!//


:‍) ந‌ன்றிங்க‌ .. மீன் கிட்ட‌யும் சொல்லிட‌றேன்:‍)

*இயற்கை ராஜி* said...

//பிரியமுடன்.........வசந்த் said...
எண்ணங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ராஜி..//


ஐய்ய்ய்....என‌க்கு ஒருத்த‌ர் ச‌ல்யூட் அடிக்கிறார்:‍)))

*இயற்கை ராஜி* said...

//ராம்மோகன் said...
Here is Your Thoughts:

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=3346339&tid=5327644151730682641&na=2&nst=8

▒▓What is Saaral?...
Our society today struggles to provide for the impoverished sections of the population, especially orphaned children and the aged poor, who increasingly find themselves bereft of support systems to rely upon. Saaral (a Tamil word meaning "drizzle", reminiscent of gentle rain on parched land) comprises young students and professionals who unite to work for the upliftment of the marginalized and downtrodden in society.//

..

Thanks fr sharing my post..
best wishes for the services of saral

*இயற்கை ராஜி* said...

//நேசமித்ரன் said...
அருமையான பதிவு//
நன்றிங்க..

*இயற்கை ராஜி* said...

//sakthi said...
அருமையான பதிவு ராஜி//

ம்ம்ம்..நன்னி,,க்கா...ந‌ன்னி:‍)))

*இயற்கை ராஜி* said...

//ஸ்வாமி ஓம்கார் said...
நாங்க எல்லாம் ஆதரவு அற்றவங்க.

:)

//

அனாதை யாஅரும் இல்லை அவனேதான் தந்தை!

அப்போ அம்மா யாரு? ://



அவ‌னே தாயுமான‌வ‌ன் ஜி...;)))

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு ! ஆதரற்றோர் இல்லங்கள் பற்றி என் பதிவு!

http://pirathipalippu.blogspot.com/2009/04/blog-post.html

Anonymous said...

நன்றிங்க இப்படி ஒரு போஸ்ட் போட்டதுக்கு ரொம்ப நன்றிங்க உங்கள் பிறந்த நாளுக்கு நீங்கள் அவர்களுடன் நேரம் செலவிட்டு இருப்பிர்கள் என்று நம்புகிறேன் அதற்க்கு ஏன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . அவர்களுக்கு பொருளுதவியை விட அன்பு அரவணைப்புதான் தேவை அதை அனைவரும் கொடுக்க முயற்சிக்கலாம்

Radhakrishnan said...

நல்லதொரு விசயங்களைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

முடிந்தவரை அவர்களுக்கு பழைய பொருட்களை (ஆடைகள், நோட்டுப்புத்தகம்....) கொடுப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனின் அப்பழைய பொருட்களை உபயோகிக்கும்போது, நாம் யாரையோ நம்பிதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற ஒரு உணர்வு வரலாம்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!