என்னருகே நீ இருந்தும் 5ம் பகுதிமாலைநேரம்..அவள் வீட்டில் ஆஜர்.
ஆண்டி..சூடாக டிபன் செய்து கொண்டிருக்க ஜனனி சமயலறை மேடையில் உட்கார்ந்து அதை சுவைத்துக் கொண்டிருந்தாள்.
ஏய்.இன்னும் கெளம்பலியா நீ?
ஓ..காட் ..வந்திட்டியா?.இதோ ஒரு 5 மினிட்ஸ்
ஆன்ட்டி! போய்ட்டு சீக்கிரம் வந்துடறோம்..அங்கிள்கிட்ட சொல்லுங்க..அவளைத் திட்ட போறார்..அப்புறம் அந்த வாலு என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா...
எனச் சொல்லிக்கொண்டே டிபனைக் காலி பண்ணும் வேலையை நான் தொடர்ந்தேன்..
சரிப்பா..நான் சொல்லிக்கறேன்..உன்கூட தானே வர்றா..ஏதுவும் சொல்லமாட்டார்..
அதற்குள் கிளம்பி வந்து மலராய் நின்றாள்..
அல்லோ ..என்ன..டாக்டர் சார்..போலாமா?..
அம்மா..பை மா..
ம்..ம்..போலாம்..வா..பை ஆன்ட்டி..
பை..பத்திரமா போய்ட்டுவாங்க கண்ணு..
கார் நகர ஆரம்பித்தது..
போகும் வழியில்
ஏன் ஜனனி ஒரு மாதிரி சைலன்டா இருக்க
இல்ல..இன்னிக்கு எங்க அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க..அதை யோசிச்சிட்டு இருந்தேன்..
என்ன் விஷயம்? எதைப் பத்தி ?
உங்களுக்கு அலையன்ஸ் பாக்க ஆரம்பிச்சி இருக்காங்க இல்ல?..அதனால அதிகமா 2 பேரும் ஒண்ணா சேர்ந்து சுத்தாதீங்க..பாக்கறவங்க எல்லாரும் இதை நல்ல விதமா எடுத்துக்க மாட்டாங்க..யாராவது ஏதாவது சொல்லிட்டா ரெண்டு குடும்பத்துக்குமே கஷ்டம்ன்னு சொன்னாங்க
ஓ..அப்படியா...
ஆமாம்..அதைக் கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சி..
இதைச் சொல்வதற்குள் அவள் கண்களில் குளம்..
அப்போ உங்க கல்யாணம் ஆயிட்டா நாம் ரெண்டு பேரும் பழக முடியாதா..வர்ற பொண்ணு நம்மள புரிஞ்சிக்க மாட்டாங்களா? நம்ம பிரண்ஷிப் அவ்ளோதானா..என்னால முடியாதுப்பா.. நம்ம பிரண்ஷிப்பை யாராவது ஏதாவது சொன்னா நான் அவ்ளோதான்..
இதற்கும் கண்களில் இருந்த குளம் கரை மீறியது..அழ ஆரம்பித்திருந்தாள்..
ஏய்..ஏம்மா அழற..அதெல்லாம் பாத்துக்கலாம் விடு..ப்ளீஸ் பேபி ரிலாக்ஸ் யுவர்செல்ஃப்...
சில நிமிட சமாதானத்துக்குப் பின்..
ம்ம்..ஒகே..அழல..கோயிலுக்குப் போலாமா?
என்ன திடீர்ன்னு?
போலாம் ப்ளீஸ்..
சரி..போலாம்..எனக்கும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..
தரிசனத்திற்குப் பின்..பிரகாரத்தில் அவளது ஃபேவரிட் இடத்தில் அமர்ந்தோம்..
என்னவோ..பேசணும்ன்னு சொன்னீங்களேப்பா..சொல்லுங்க..
ம்.ம்..ஏன் திடீர்ன்னு எமோஷனல் ஆயிட்டே ..நீ?
ம்ப்ச்ச்ச்..அதை விடுங்க..யு டெல்..
ஜனனி உன் மனசில நம்ம ஃபிரண்ஸ்ஷிப்பை பத்தி எவ்ளோ பயம் இருக்கோ ..அதைவிட பல மடங்கு பயம் எனக்கும் இருக்குடா.. வர்ற பொண்ணு நம்மல புரிஞ்சிக்கலன்னா..நாம நிரந்திரமா பிரிய வேண்டிய நிலமை கூட வரும்..அதவிட பெரிய கஷ்டம் நம்ம லைஃப்ல வேற ஏதும் இருக்காதுன்னு நினக்கிறேன்..
ம்ம்..அதை நான் இவ்ளோ நாளா யோசிக்கல..இன்னிக்கு அம்மா சொன்னபின்னாடிதான் புரிஞ்சிது..
அதுக்கு எனக்கு ஒரு வழி தோணுது..ஆனா அது எந்த அளவுக்கு சரின்னு எனக்குத் தெரியல..என்ன அது?
பேசாம நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா? நான் இப்படி சொன்ன உடனே,இதே எண்ணத்தோடதான் நான் உன்கிட்ட பழகினேனான்னு நெனக்காதே..இந்த பிரச்சினைக்கு ஒரு சொல்யூஷனாத்தான் இதைச் சொல்றேன்...
இது நிச்சயமா ஒரு சொல்யூஷன் இல்ல ராஜ்.. எனக்கும் இப்படி ஒரு எண்ணம் அம்மா சொன்ன உடனே வந்துது..அப்புறம் தான் யோசிச்சேன்..
அப்படி ஒரு முடிவு எடுத்தா அது நம்ம பேரண்ஸ்க்கு நான் செய்யற நம்பிக்கை துரோகம்..ரெண்டு வீட்லயும் நம்ம மேல இருக்கற நம்பிக்கைல தானே நம்மலபழக விட்டு இருக்காங்க..இப்போ போய் இப்பிடி சொன்னா ...அவங்க நமக்காக ஒத்துக்கலாம்..ஆனாமனசுக்குள்ள எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க.. கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
அதுவுமில்லாம உங்க அப்பாக்கு ஜோசியம்னா எவ்ளோ நம்பிக்கைன்னு உங்களுக்கே தெரியும்.. நம்ம 2 பேர் ஜாதகமும் சேராதப்போ ..அவர் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்ன்னா அது அவருக்கு எவ்ளோ கஷ்டம்..
இதெல்லாம் யோசிங்க.. அதுக்கு அப்புறம் நீங்க எண்ண முடிவு எடுத்தாலும் நான் அக்செப்ட் பண்ணிக்கறேன்..கார்ல வெய்ட் பண்றேன்..முடிவு பண்ணிட்டு வாங்க..
சில நிமிடங்களுக்குப் பின் நான் மீண்டும் கடவுள் முன் நின்றேன்..
"கடவுளே! எங்களோட நட்புக்கு பங்கம் வராத மாதிரி வாழ்க்கைத் துணைகளை எங்களுக்குத்தா.."
என வேண்டிக் கொண்டு காரை நோக்கி நடந்தேன்..கோயிலில் விளக்குகள் ஒளிர்ந்தன
முற்றும்.
.